வீக்எண்ட் மஜா! - கூலா பக்கோடா சாப்பிடுவோம்!




Image result for pakoda cartoon




கோயிலை புனரமைக்கும் முஸ்லீம்!

இந்து, முஸ்லீம்களிடையே கலவரம் விளைவித்து அரசியல் லாபத்திற்கு அலையும் கூட்டம் அதிகரித்தாலும், இரு மதங்களுக்குமிடையே அன்பு பாலமாக நடைபெறும் செயல்களும் குறையவில்லை. அகமதாபாத்தில் மொய்ன் மேமன் செய்ததும் அப்படி ஒன்றுதான்.


குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான மொய்ன் மேமன், ஐநூறு ஆண்டுகள் தொன்மையான அனுமன் கோயிலை புதுப்பித்துள்ளார். மிர்ஸாபூரிலுள்ள அனுமன் கோயிலில் இத்தாலி ஸ்டைல் டைல்ஸ்களை ஒட்டி அழகு செய்த மொய்ன், இதற்கான அத்தனை செலவுகளையும் தானே ஏற்றுள்ளார். "நான் இறைவனை ஐந்து வேளையும் தொழுபவன். பழுதுபட்ட அனுமன் கோயிலை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருந்தது. எனவே ஆலய குருக்களான ராஜேஷ் பட்டிடம் அனுமதி கேட்டு கோயிலை புனரமைத்தேன்" என உற்சாகமாக பேசுகிறார் கட்டிடக்கலைஞரான மொய்ன் மேமன்

2
தேநீர் அமைச்சர்!

டீ குடித்தால் என்ன செலவாகப்போகிறது? என அலட்சியமாக கேட்பவர்கள் உத்தர்காண்ட் அமைச்சர் திரிவேந்திர சிங்கின் கணக்கை கேட்டால் ஷாக் ஆவது நிச்சயம்.

உத்தர்காண்டில் பிஜேபி அரசின் அமைச்சராக மக்களுக்கு கடமையாற்றும் திரிவேந்திரசிங் கடந்த ஒன்பது மாதங்களில் டீ மற்றும் நொறுக்குத்தீனிகளுக்கு மட்டும் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? 68.59 லட்சம் ரூபாய். இந்த உண்மையை தகவலறியும் உரிமைச்சட்டத்தில் போட்டு வாங்கியிருக்கிறார் சமூக ஆர்வலர் ஹேமந்த்சிங் கௌனியா. கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள், விருந்தினர்கள் என அனைவருக்கும் நடந்த தேநீர் மற்றும் நொறுக்குத்தீனி உபசரிப்புகளுக்கு ஆன செலவு இது என விவரங்களில் துல்லியாக கூறியுள்ளன. அப்ப அமைச்சர் சாப்பாட்டுச்செலவு எவ்வளவாக இருக்கும்?


3
 ஐந்து ரூபாய்க்கு விமான டூர்!

அரசியல்வாதிகள் தங்கள் ஆட்சிபற்றி பேசும்போது பிராக்டிகல் விஷயங்களையே மறந்துவிட்டு வாயில் வருவதை உளறிவைத்து சீரியஸாக காமெடி செய்வார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் விமானத்துறை அமைச்சரான ஜெயந்த் சின்காவின் பேச்சு.

.பியின் இந்தூரில் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் விழாவில் பேசியவர், "முன்பு பதினொரு கோடியாக இருந்த விமான பயணிகள் எண்ணிக்கை இன்று 20 கோடி. ஒரு கிலோமீட்டருக்கு ஐந்து ரூபாய் செலவழித்தால் விமானத்தில் செல்லலாம். ஆனால் ஆட்டோவில் போக எட்டு ரூபாய் கேட்பார்கள்" என டிபிகலாக கூட்டிக்கழித்து குபீர் கணக்கு சொன்னார். அதோடு பகோடா விற்பவர்கள் தினசரி 200 சம்பாதிக்கும் தொழில்முனைவோர் என மோடி பேசியதற்கு ஒத்து ஊதிய சின்கா, " தினசரி பகோடா விற்றால் நாளை அவர் மெக்டொனால்ட்ஸ் போல கடை வைப்பார். இதுவளர்ச்சிதானே?" என பேச, கேட்ட மக்களுக்கு ஜிஞ்சர் சோடா குடித்தபின்தான் கிறுகிறுப்பு குறைந்திருக்கிறது. லைஃபில் ஒருமுறையாவது ஷேர் ஆட்டோ ஏறியிருக்கீங்களா சின்காஜி?


தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்

பிரபலமான இடுகைகள்