மோடிக்கு பில்!




Image result for modi tour bill caricature



Image result for modi vs arvind kejriwal caricature




ரேடியோ பேபி!

ஹாஸ்பிடலில் அல்லது வீட்டில் அல்லது விமானத்தில் கூட குழந்தை பிறந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் காற்றில் குழந்தை பிறப்பது புதுசுதானே! யெஸ் இது அத்தென்டிக் அமெரிக்கன் ரவுசு.

அமெரிக்காவைச் சேர்ந்த ரேடியோ காம்பியர் கேசிடே பிராக்டர், செயின்ட் லூயிசிலுள்ள ஆர்ச் ஸ்டேஷனில் தன் காலை ஷோவில் ஊரையே  கலாய்த்துவந்தார். மேரேஜ் ஆகி, கர்ப்பம் தரித்தபோதும் லீவ் போடாமல் ஜாலிகோழியாக வேலை பார்த்த கேசிக்கு திடீரென டெலிவரி அவசரம். ஷோடைமின்போது ஹாஸ்பிடலில் இருந்தார் கேசி. அங்கேயே மைக் சகிதமாக ரேடியோகுழு செல்ல,

கேசி தன் குழந்தை பிறப்பை லைவ் கமெண்ட்ரியாக தன் ரேடியோ விசிறிகளுக்காக ஒலிபரப்பி பீதியூட்டினார்.  கமெண்ட்ரி மட்டுமல்ல, க்யூட் செல்லத்துக்கு பெயர் சொல்லுங்களேன் என மினிபோட்டியையும் நடத்தியிருக்கிறார் கேசி. விரைவில் நல்ல பெயரை ஓட்டுபோட்டு செலக்ட் செய்யவிருக்கிறார்கள்

2
வெஜ் ஷூக்கள் வாங்குங்க!

வீகன், சைவ உணவு பிரசாரம் பரவி வரும்போது வெஜ் பொருட்களும் சந்தையில் சேல்சிற்கு வந்தால்தானே ஜரூராக கல்லா கட்டமுடியும். கர்நாடகாவின் சிரவணபெலகொலாவில் வெஜ் ஷூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன

வீகன் ஃபேஷன் எனும் நிறுவனம் எக்ஸ்போ ஒன்றில் ஸ்டால் போட்டு பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது தன் வெஜ் ஷூக்களின் மூலம்தான். விலங்குகளை காக்கவும், தோல் பொருட்களின் மூலமான மாசுபாட்டைக் குறைக்கவும் இந்த வெஜ் ஷூக்கள் தயாரிப்பு முடிவாம். "2016 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பாலிஸ்டர் இழைகளை பயன்படுத்தி விலங்கு தோல் போன்ற உறுதி, உழைப்பை உறுதிபடுத்தியுள்ளோம்" என்கிறார் கம்பெனி ஓனர் மனிஷ் பரிக். ஜெயின் மக்களின் ஃபேவரிட் ஷூக்கள் தற்போது இதுதானாம்.


3
மோடிக்கு பில்!

மோடி மக்களுக்கு ஃபைன் போடுவார், நாமும் டீமானிடைசேஷன் என கட்டித்தொலைப்போம். ஆனால் மோடியிடமே ஒருவர் பில் நீட்டினால்..? சாதித்து காட்டியிருக்கிறது பாகிஸ்தான்.

பிரதமர் மோடியின் பதினொரு நாடுகள் டூர் பிளானின் போது இடையே லாகூரில் விமானத்தை நிறுத்திச் சென்றதற்கு பாகிஸ்தான் கூட்டிக்கழித்து சொன்ன பில் 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய். ஆர்டிஐ சட்டப்படி இத்தகவலை லோகேஷ் பத்ரா என்பவர் பெற்றிருக்கிறார்டிச. 25, 2015  அன்று ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணம் சென்று வந்தபோது நவாஸ் ஷெரீப் வேண்டுகோளின் பேரில் பாகிஸ்தானின் லாகூரில் இறங்கினார். அலமா இக்பால் ஏர்போர்ட்டில் இறங்கி தன் ஸ்டைலில் ஷெரீபைக் கட்டிப்பிடித்து, ஹெலிகாப்டரில் ஏறி  ஷெரீப்பின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வாழ்த்த சென்றார். பிரதமரின் பயணச்செலவுக்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் ஏற்கிறது. டூருக்கு மோடி! பில்லுக்கு மக்கள்!

4

மோடியையும் கெஜ்ரிவாலையும் இணைத்த மக்கள்

அரசியலில் புலியும் சிங்கமுமாக திரிபவர்களையும் ஒரு நிமிஷத்தில் ஒன்று சேர்த்துவிடுவது பேனர் டிசைனர்களுக்கே சாத்தியம். அப்படியொரு பேனர்களில்தான் எதிரும் புதிருமான இரு தலைவர்கள் இணைந்த கைகளாகி உள்ளனர் யாரால், மக்களால்தான்.

டெல்லியைச் சேர்ந்த கணேஷ்பதக் என்ற பத்திரிகையாளர் தான் சாலையில் பார்த்த இரண்டு போஸ்டர்களையும் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். சாதாரணமாக பார்த்தால் மோடி கேஸ் மானியத்திட்டத்தையும், கெஜ்ரிவால் தனது அரசு திட்டத்தையும் கூறுவது போல தோன்றும். ஆனால் கீழே இருக்கும் மக்கள் ஓரே ஆட்கள்தான். எப்படி? ஒரே படத்தையே இரண்டு பேனர்களுக்கும் பயன்படுத்தி நேரத்தை மிச்சம் செய்திருக்கிறார் அசகாய டிசைனர். இருவரையும் பேனரிலாவது இணைத்து வைத்த பேனர் டிசைனருக்கு இணையத்தில் லைக்ஸ்கள் குவிகின்றன.

தொகுப்பு: ரோனி
நன்றி: குங்குமம்



பிரபலமான இடுகைகள்