பிரிக்ஸ் நாடுகளுக்கு எமன்!
ப்ராஜெக்ட் DR!
டாக்டரால் நோயாளியின்
உடம்பை சூப்பர்மேன் போல எக்ஸ்ரே பார்வையால் உடலை ஊடுருவி பார்க்க முடிந்தால், செயலிழந்த
உறுப்புகளையும் நொறுங்கிய எலும்புகளையும் ஈஸியாக சொஸ்தப்படுத்த முடியுமே! அதற்காகத்தான் வந்திருக்கிறது ப்ராஜெக்ட் DR.
ஆல்பெர்ட்டா பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது. எம்ஆர்ஐ அல்லது சிடி போல குறிப்பிட்ட
உடலின் பாகங்களை மட்டுமல்லாது முழு உடலையே காட்டும் திறன் பெற்றது.
ப்ரொஜெக்டர்ஸ், அகச்சிவப்பு
கதிர் கேமராக்கள், மார்க்கர்கள் இதில் நோயாளியின் உடலில் பயன்படவிருக்கின்றன.
குறிப்பிட்ட ரத்த திசுக்கள், உள்ளுறுப்புகள் என்றாலும்
இதில் தெளிவாக பார்க்க முடியும். "பிசியோதெரபி, லேப்ராஸ்கோபிக், அறுவைசிகிச்சைகள் என பல்வேறு செயல்பாடுகள்
இந்த டெக்னாலஜியை மையப்படுத்தி நடைபெறுகின்றன" என்கிறார்
கணினி பொறியியலாளரான இயான் வாட்ஸ்.
2
பிரிக்ஸ் நாடுகளுக்கு
எமன்!
வளர்ந்து வரும்
நாடுகளின் பொருளாதாரத்தை முடக்குவதில் கேன்சர் நோய்க்கு முக்கியப்பங்குண்டு. உலகில்
மூன்றில் இருபங்கு புற்றுநோய் மரணங்கள் வளரும் நாடுகளில் ஏற்படுவதாக Cancer
Epidemiology இதழில் வெளியான ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.
பிரேசில், ரஷ்யா,
இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா
ஆகிய பிரிக்ஸ் நாடுகளிடையே புற்றுநோய்க்கு செலவிடப்பட்ட தொகை மட்டும் 46.3 பில்லியன் டாலர்கள்(WHO,2012). பிரிக்ஸ் நாடுகளின் மக்கள்தொகை
40%(உலக மக்கள்தொகையில்) உள்நாட்டு உற்பத்தி
25% மாக உள்ளது. இதில் உச்சமாக தென் ஆப்பிரிக்கா
101,000 டாலர்களையும்(தனிநபருக்கு), சீனா 28 பில்லியன் டாலர்களையும் செலவழித்துவருகிறது.
புகையிலை காரணமாக கல்லீரல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் பிரிக்ஸ் நாடுகளிடையே
பொருளாதாரத்தை குலைக்கும் பூதமாக வளர்ந்துள்ளது.
3
ஏமனில் பெண்கள்!
2015 ஆம்
ஆண்டிலிருந்து சவுதிக்கும் ஏமனிலுள்ள ஷியா படைகளுக்கும் போர் நடந்து வருகிறது.
போரின் விளைவாக 69% மக்கள் அகதி நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் 49 ஆயிரம் பேர் காயமுற்றும்
தவிக்கும் நிலை. 60 மில்லியன் ஆயுதங்களில் நாடெங்கும் புழக்கத்திலுள்ளன
என்கிறது ஐ.நாவின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை.
சம்பாதிப்பவர்களான
ஆண்களை இழந்த பெண்கள் குடும்பத்தைக் காப்பாற்ற, ராணுவத்தில் இணையத்தொடங்கியுள்ளனர்.
சிலர் ஷியா போராளிக்குழுவோடும் இணைந்துவிட்டனர். ஷியா அரசு, பெண்கள் பொதுவெளியில் இயங்குவதை தடுக்கும்
இயல்பு கொ்ண்டது. "திருமணம், விவாகரத்து,
குழந்தை திருமணம், குடும்ப வன்முறை ஆகியவற்றில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது"
என்கிறது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு. ஹைதி
இயக்கம் நாட்டின் தலைநகரிலுள்ள பல்வேறு அரசு அமைப்புகளின் கட்டிடங்களை கையகப்படுத்தியுள்ளது.
மக்களின் செல்வாக்கை பெற்றுள்ள ஷியா ஹைதி இயக்கம் கடந்து பெண்கள் சீர்திருத்த
கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும் இணைந்துள்ளது அரசியல் தீர்வு மீதுள்ள நம்பிக்கையைக்
காட்டுகிறது.
தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்