வாங்க கைகழுவோம்!
சோலார் பூங்கா!
கர்நாடகா அரசு, தும்கூர்
மாவட்டத்தின் பாவகடா பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும்
சோலார் பூங்காவை உருவாக்கியுள்ளது.
பதிமூன்றாயிரம்
ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சோலார் பூங்காவின் செலவு, 16,500 கோடி. சக்தி ஸ்தலா என பெயரிடப்பட்டுள்ள இப்பூங்கா,
முதல்கட்டமாக 600 மெகாவாட்டும், இவ்வாண்டின் இறுதியில் 1400 மெகாவாட்டும் தயாரிக்கத்தொடங்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா சோலார் பாலிசி
2014-2021 படி இந்த சோலார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் 25 ஆண்டு
குத்தகையாக பெறப்பட்டுள்ள நிலத்திற்கு ஆண்டிற்கு ரூ.21 ஆயிரமும்,
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தொகை 5% உயர்த்தப்படும்
என அரசு அறிவித்துள்ளது. KSPDCL, KREDL,SECI ஆகிய அரசு நிறுவனங்கள் சக்தி ஸ்தலா
சோலார் பூங்காவை உருவாக்கி பராமரிக்கின்றன.
ரத்த சரித்திரம்!
நமது ரத்தத்தில்
சிவப்பணுக்கள்,
வெள்ளையணுக்கள், ரத்த தட்டுகள், பிளாஸ்மா ஆகியவை உள்ளன. ரத்தத்திலுள்ள ஆன்டிஜென்கள் அடிப்படையில்
ரத்தவகை பிரிக்கப்படுகிறது.
இதுவரை நான்கு
அடிப்படை ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏ குரூப்பில் சிவப்பணுக்களில் ஏ
புரதமும்,பிளாஸ்மாவில் பி(antibody)யும்
இருக்கும். பி குரூப்பில் மேற்சொன்னது ரிவர்ஸ் ஆகும்.
ஏபி குரூப்பில் சிவப்பணுக்களில் ஏபி புரதம் இரு அணுக்களிலும் உண்டு;
ஆனால் பிளாஸ்மாவில் ஏ அல்லது பி இருக்கும். ஓ க்ரூப்பில் ஏ அல்லது பி புரதம் சிவப்பணுக்களிலும் பிளாஸ்மாவில்
இரு ஆன்டிபாடிகளும் இருக்கும். இதில் கூடுதலாக உள்ள புரதத்தை(Rh)
வைத்து ரத்தவகை பாசிட்டிவ்,நெகட்டிவ் என பிரிக்கிறார்கள்.
ஏபி நெகட்டிவ் மிகவும் அரிய ரத்தவகை. உலகில் ஏபி
நெகட்டிவ் 0.6சதவிகிதம் பேருக்கு மட்டுமே(தோராயமாக 167 பேரில் ஒருவருக்கு) இவ்வகையும், ஏபி பாஸிட்டிவ் ரத்த வகை 3.4% பேருக்கும் உள்ளது. இந்தியாவில் சத்தீஸ்கர், மேகாலயா, உ.பி, அருணாசலபிரதேசத்தில் ரத்த தானத்திற்கு 50% தேவையுள்ளது.
3
வாங்க கைகழுவுவோம்!
டெட்டால், லைஃப்பாய்
வரை கைகழுவுவது பற்றிய பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். உண்மையில் கைகழுவுவது என்று தொடங்கியது. சாப்பிட்டவுடன்
என்ற காமெடி கூடாது பாஸ்! இது சீரியஸ் கேள்வி.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
கைகழுவுவது மதரீதியிலான பழக்கமாக கிறிஸ்துவம், சீக்கியம், பௌத்தம் ஆகியவற்றில் பின்பற்றப்பட்டது. காற்றில் உள்ள
சாத்தான்களிடமிருந்து தப்பிக்க கைகழுவினர். அச்சமயத்தில் கிருமிகள்
பற்றியெல்லாம் யாருக்கும் தெரியாது. 1846 ஆம் ஆண்டு ஹங்கேரிய
மருத்துவர் இக்னஸ் செமல்வெய்ஸ், கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள்
சிகிச்சை செய்தும் சிசு மரணங்கள் நிகழ, குழந்தைகளை ஆராய்ந்தார்.
அவர்களின் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதைக் கண்டறிந்த இக்னஸ்,
அறுவைசிகிச்சை கருவிகளை சுத்திகரித்து பயன்படுத்துவதை தனது கிளினிக்கில்
அறிமுகப்படுத்தினார். ஆனால் இது இறப்புகளுக்கு மருத்துவர்களை
குறைசொல்லும் பழக்கத்தை குறைத்துவிடவில்லை. இறுதியில் மனநிலை
பிறழ்ந்து இறந்துபோனார் தொலைநோக்கு மருத்துவர் இக்னஸ். பின்
1980 ஆண்டு அமெரிக்காவின் நோய்தடுப்பு மையம்(CDC) கிருமிகளை அழிக்க கைகழுவும் விதிகளை பிரசாரம் செய்து புகழ்பெற செய்தது.
தொகுப்பு: காதர்நவாஸ், ஷெரீப்
நன்றி: முத்தாரம்