அமெரிக்காவின் சாகசவீரன்!



Image result for Hobo-Camp-Fire-Tales




அமெரிக்காவின் நாடோடி!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளினின் லிட்டில் ட்ராம்ப் படத்தை பலரும் மறக்க முடியாது. வேலை தேடி நாடோடியாக அலையும் மக்களை உலகிற்கு சொன்ன படம் அது. 1872 ஆம் ஆண்டு சான்ஃபிரான்சிஸ்கோவில் பிறந்த லிவிங்ஸ்டனை நாடோடிகளின் ராஜா எனலாம். தன் பதினோராவது பிறந்தநாளில் டீச்சரிடம் திட்டுவாங்கியவர், அப்பாவுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடினார்.

ரைபிள், சிறிது பணம், பிறந்தநாள் பரிசுகள் என பயணித்த லிவிங்ஸ்டன், சில ஆண்டுகளுக்கு பிறகு 5 லட்சம் மைல்களை ஏழு டாலர்கள் செலவில் சுற்றி வந்திருந்தார். வீட்டை விட்டு வந்து 30 ஆண்டுகள் ஆன பின்பு 1910 ஆம் ஆண்டு தன் அனுபவங்களை மெல்ல நூலாக எழுத தொடங்கியதோடு, தன் பெயரையும் A-No.1 என செல்லுமிடங்களெல்லாம் குறிப்பிடத் தொடங்கினார். "நாடோடியாக அலைவது குணப்படுத்த முடியாதது. எனவே வீட்டில் பத்திரமாக இருங்கள்" என வார்னிங் கொடுத்த எழுதிய Hobo-Camp-Fire-Tales நூல் செம சேல்ஸ். செலிபிரிட்டியானவர் பின்னர் மேரி ட்ரோகோஸ்கி என்ற பெண்ணை மனைவியாக்கினார். சிறுவேலைகள் பார்த்துக்கொண்டே பல்வேறு இடங்களில் தனது அனுபங்களை சொற்பொழிவாற்ற தொடங்கினார். 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்து அன்று மாரடைப்பால் காலமானார் இந்த புகழ்பெற்ற நாடோடி.  

தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்