பிளேசர் ரகசியம்!


Image result for blazer



பிளேசர் ரகசியம்!

சட்டைக்கு மேல் அணியும் கேஷூவல் ஜாக்கெட்தான் பிளேசர். அதில் முதலிரண்டு பட்டன்கள் சரியாக பயன்பட்டாலும் இறுதி பட்டனை பலரும் பயன்படுத்துவதில்லை ஏன்? காரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட்(1841-1910).


சாப்பாட்டு பிரியரான இளவரசர் எட்வர்ட் பன்றி இறைச்சி, முட்டைகள் ஆகியவற்றை காலை உணவாகவும், வறுத்த மாட்டிறைச்சி, கேக்குகளை மதிய உணவாகவும் தின்று வளர்ந்தார். வயிறு சைஸ் 48 இன்ச். முரட்டுத்தீனி தின்றதால் தன் கோட்டின் மூன்றாவது பட்டனை அவரால் போட முடிந்ததே இல்லை. மன்னரைப்போலத்தானே மக்களும் இருக்கவேண்டும். பிரபுக்கள், நாடக நடிகர்கள் என அனைவரும் டவுட் கேட்காமல் மூன்றாவது பட்டனை போடாமல் ராஜ விசுவாசம் காட்ட அதுவே ஃபேஷனாகிப்போனது. ஆபீஸ் போவது போல விருந்துகளுக்கு போக விரும்பாத இளவரசராக இருந்த எட்வர்ட் கேஷூவலாக சூட் உடைக்கு போ டை கட்டி ஃபங்க்‌ஷனுக்கு சென்றார். அவரது நண்பர் ஜேம்ஸ் ப்ரௌன் பாட்டர் அதே ஸ்டைலை கமா மாறாமல் அமெரிக்காவிற்கு கொண்டு சென்று பரப்ப புதிய டின்னர் உடை பிறந்தது.  

தொகுப்பு: ரஜாகான், சுசீமேனன்
நன்றி: முத்தாரம்