பழிக்குப்பழி!

Image result for revenge illustrations



ஏழை முதல்வர்!

கரன்சி பார்க்க வாய்ப்பில்லாமல் ஏழையாக இருப்பது தலையெழுத்து. ஆனால் சம்பளம் கிம்பளம் என லம்ப்பாக சம்பாதிக்க பதவியில் ஆயிரம் வழியிருந்தும் ஏழையாக இருக்கிறார் இந்தியாவின் மாநில முதல்வர். யார் அவர்?

இந்தியாவிலுள்ள திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், இப்பெருமைக்கு உரியவர். முதல்வர் பணிக்கு கிடைக்கும் சம்பளமான ரூ.26,315யை கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டு அதிலிருந்து ரூ 9,720 மட்டும் செலவுகளுக்காக பெற்றுக்கொள்கிறார் இந்த மக்கள் செல்வன். பாரதவங்கி கணக்கில் உள்ள பணம் ரூ. 1520.  அகர்தலாவின் கிருஷ்ணாநகரிலுள்ள சிறுநிலத்தை தன் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவிடம் இருபது கிராம் தங்கம் மட்டுமே உள்ளது என தேர்தல் ஆணைய சொத்து தாக்கல் விவரங்கள் தெரிவிக்கின்றன


பிங்க் ஆட்டோ வந்தாச்சு!

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் ட்ராக்கர் வசதிகளோடு பெங்களூருவில் பிங்க் ஆட்டோக்கள் வரும் ஏப்ரல் முதல் ஒடத்தொடங்கும் என நகர நிர்வாகம் அறிவித்துள்ளதுஇந்தியாவில் புவனேஸ்வர், டெல்லி, அசாம் தொடங்கி பெங்களூருவுக்கு இத்திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.

"பெண்களுக்கான நலத்திட்ட உதவியாக ஆட்டோவுக்கு தலா 80 ஆயிரம் ரூபாயை மானியமாக அளிக்கிறோம். ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பயணிகளை கண்ணியமாக நடத்துவதற்கு பயிற்சியளிக்கிறோம்" என்கிறார் சமூகநீதி மற்றும் நல்வாழ்த்துறை கமிட்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீப் ஜாகீர். பிங்க் ஆட்டோக்களுக்கு பெண்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து இதன் எண்ணிக்கை கூட்ட முடிவு செய்துள்ளார் நகர மேயர் சம்பத்ராஜ்.

ரிவென்ஞ்ச் கலப்படம்!

அப்பாலே போ சாத்தானே என ஒருவரை கம்பெனியை விட்டு தூக்கினால் அம்பிகள்  சும்மாயிருக்கலாம். ஆனால் முன்னா ரிவெஞ்ச் எடுத்துவிட்டார். இவரின் வன்மத்தில் கம்பெனி பிஸினஸிற்கு செம அடி. அப்படி என்ன செய்தார்?

சண்டிகரில் பத்ரா மதுபான ஃபேக்டரியில் வேலை செய்த முன்னாவை கடந்தாண்டே ஒழுங்கு நடவடிக்கையாக டிஸ்மிஸ் செய்துவிட்டனர். டென்ஷனான முன்னா, அண்மையில் கம்பெனிக்கு யாரும் அறியாமல் சென்று வடிகட்டி வைத்திருந்த 1 லட்சம் லிட்டர் மதுவை, கீழே கொட்டினார். வீக் எண்டில் கச்சிதமாக முன்னா பார்த்த வேலையை கம்பெனி திங்கள்கிழமை கண்டுபிடித்து புகாரோடு ஆதாரமாக சிசிடிவி வீடியோவையும் போலீசில் கொடுத்துள்ளது. தற்போது பழிக்குபழி திருப்தியில் முன்னா இருப்பது ஜெயில் கம்பிகளுக்கு பின்னால்.

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்

பிரபலமான இடுகைகள்