இந்தியாவைக் காக்கும் தேள்ப்படை!


Image result for india special forces



இந்தியாவைக் காக்கும் ஸ்கார்பியன் படை! -.அன்பரசு


இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது, மக்களின் உணர்ச்சி வெறியைத் தூண்டி அதில் மீன் பிடிக்கும் அரசியல்வாதிகளல்ல; நாட்டுக்காக உயிரை துச்சமாக மதித்து தீவிரவாதிகளை களத்தில் நேருக்குநேராக சந்தித்து போராடும் வீர தீர ஜவான்களின் படைதான். அதிலும் ஸ்பெஷலானவர்கள் டெசர்ட் ஸ்கார்பியன்கள் எனும் சிறப்புப்படை. நீர்,நிலம், ஆகாயம் என மூன்று இடங்களிலும் பட்டையக் கிளப்பி பாடுபடும் பாரா கமாண்டோ பிரிவில் சீட் போடுவது நூறில் இருவருக்கு மட்டுமே ஆயுள் சாத்தியம். ஏன்? பயிற்சிகள் அவ்வளவு டஃப்!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்திய பாகிஸ்தான் எல்லையைக் கடந்து நடந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் ஒரு டஜனுக்கும் மேலான தீவிரவாதிகளை பரலோகம் அனுப்பியது ஸ்பெஷல் ஃபோர்ஸின் கைங்கரியம்தான். சிறப்பு படையின் வீரதீரங்கள் அனைத்தும் தீவிரவாதிகளுடன் என்பதால் அனைத்தும் பிரேக்கிங் நியூஸ் ஆகாதபடி ரகசியம் காக்கிறார்கள்.

ரௌத்திரம் பழகு!

அழிப்பது, வழிகாட்டுவது, தகவல்தொடர்பு, மருத்துவ உதவிகள் ஆகிய தகுதிகள் சிறப்புபடையில் இடம்பெற அடிப்படையானவை. எதிரியின் கோட்டைக்குள் நுழைந்து அவர்களை சுத்தமாக க்ளீன் செய்து வெளிவருவது லேசுபட்ட டாஸ்க்கா? இதை உணர்த்துவதுபோல இவர்களின் யூனிபார்மில் சிவப்புநிற பேட்ஜில் பொறித்திருக்கும் பலிதான் என்ற வார்த்தையின் அர்த்தம், வீரமரணம். "எதிரியை வீழ்த்த உயிரையே கொடுக்கும் சூழல் ஏற்பட்டால் நாங்கள் இருமுறை யோசிப்பதில்லை" என அதிரடியாக பேசுகிறார் சிறப்புபடை மேஜரான விக்கிரமாதித்யா. பதினான்கு வயதில் பாரா கமாண்டோ வீரர்கள் பாராசூட்டில் வந்திறங்கிய சாகசத்தைப் பார்த்தவர், அப்போதே பாரா கமாண்டோ யூனிபார்ம் அணிய சபதமெடுத்தார். "பாரா கமாண்டோ வீரர்கள் தம் வெற்றுக்கையாலேயே ஒருவரை வீழ்த்திவிடுவார்கள் என்பதுதான் அவர்களைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட செய்தி" என்கிற விக்கிரமாதித்யா தன் கனவை பின்தொடர, புவியியலாளரான அவரின் தந்தை ஆதரவளித்தார்.

ஸ்கார்பியன் நம்பிக்கை!

ஆயுதங்கள், தொழில்நுட்பங்களில் அமெரிக்கா, இஸ்ரேல் கெத்து என்றால் மணல் பரப்பில் டேலன்டை நிரூபிப்பதில் இந்தியாவின் பாரா கமாண்டோ படை சூப்பர் ஸ்பெஷல். 2002 ஆம் ஆண்டு சிறப்பு படைகளுக்கு இடையே ஆப்பிரிக்காவின் கலாஹாரி பாலைவனத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து(Special Air Service) மற்றும் அமெரிக்காவை(Green Berets) இந்தியா வென்றது இதற்கு சாட்சி. இப்போட்டியிடையே கமாண்டோ வீரர் பாராசூட்டில் இறங்கியபோது, பலூன் சரியாக விரியாமல் கீழிறங்கிய வீரருக்கு கணுக்கால் முறிந்தாலும் விட்டுக்கொடுக்காமல் ஜெயித்திருக்கிறார்கள்.

 2006 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்த விக்கிரமாதித்யா, தன்னார்வலராக சிறப்பு படையில் பணியாற்றி 22 வயதில் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்கும் பிளானுக்கு பொறுப்பேற்றார். "அப்போது இருந்ததை விட மனம் இன்று மெச்சூர் ஆகியுள்ளது. போர்க்களம், குடும்பம் என நேரம் செலவழித்தாலும் தனி படைப்பிரிவு போன்ற மனதின் தன்மை நீங்குவதேயில்லை" என புன்சிரிப்புடன் பேசுகிறார் விக்கிரமாதித்யா. சக்சஸ் மிஷன்களைப் பற்றிக்கேட்டால் மாறாத சிரிப்பு மட்டுமே பதில்.


Image result for india special forces





ஸ்பெஷல் ஜவான்!

மற்ற ராணுவப்பிரிவுகளுக்கும் சிறப்பு படைக்கும் என்ன வித்தியாசம்? சிறப்பு படையிலுள்ள நூறு பேர்களும் பாலைவனத்தில் வண்டி ஓட்டுவதிலும் மருத்துவசிகிச்சை அளிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். "எதிரியின் இடத்தில் அதிக மற்றும் குறைந்த உயரத்திலிருந்து குதிப்பது, ஜீப்பை இறக்கி பயணிப்பது, நீர்வழியில் சகதியில் மறைவாக செல்வது ஆகியவை சிறப்பு படைக்கு முக்கியம்" என உறுதியான குரலில் பேசுகிறார் மேஜர் சத்ருஜீத். தன்னார்வலராக சிறப்பு படைக்கு சேருபவர்களுக்கு மூன்று மாதம் டெஸ்ட் நடக்கும். இதில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதிப்பது, காட்டில் உணவு தேடி சாப்பிடுவது, பாம்புகளை கையாள்வது, தினமும் 30 கி.கி எடையோடு அறுபது கி.மீ ஓடுவது, எலும்பை ஊடுருவும் குளிர், பொசுக்கும் வெப்பம் என உள்ளிட்ட உடல் மற்றும் மனநிலையை வஜ்ரமாக்கும் சோதனைகள் நடைபெறும். "அதிக ஐக்யூ மதிப்போடு இந்த டெஸ்ட்களில் பாஸ் செய்தவர்களுக்கெல்லாம் பணி கிடைக்காது. சிந்தனை, தூக்கம் என ஆல் இன் ஆல் சோதனைகள் நிறைய உண்டு. டாஸ்க்கை ஏற்று சமாளித்தால்  மட்டுமே சிறப்பு படை பணிவாய்ப்பு. எனவே நூறில் இருவர் செலக்ட் ஆவார்கள் உண்டு" என வார்த்தைகளில் திகில் ஊட்டுகிறார் மேஜர் துருவ்
   
சவாலே சமாளி!

கடந்தாண்டு ஜூன் 25 அன்று, நகரில் பப்ளிக் ஸ்கூலில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர் என்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஸ்பாட்டுக்கு சிறப்புபடையினர் சென்றனர். 14 மணிநேர போராட்டத்தில் தீவிரவாதிகளை கொன்று மக்களின் பயத்தை போக்கினர். புகழ் மட்டுமல்ல, துயரமும் இதில் பின்னிப்பிணைந்தது. 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகளுக் கிடையேயான சண்டையில் பவன்குமார், துஷார் மகாஜன் என இரு கேப்டன்களை பறிகொடுக்க நேர்ந்தது. "விபத்துகளில் மக்கள் தினசரி இறக்கின்றனர். எனது மகன் நாட்டிற்காக தனது உயிரைக் கொடுத்துள்ளான் என்பது எனக்கு தனிப்பெருமை" என ராணுவதினமான ஜனவரி 15 அன்று கண்கலங்கியபடி பேசிய பவன்குமார், துஷார் மகாஜன் ஆகியோரின் பெற்றோர் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கினர். "மெரூன் நிற தொப்பி சாதாரணமானது அல்ல, அணியும் வீரனை பேரரசனாக உணரவைப்பதுதான் இதன் ஸ்பெஷல்" என உற்சாகமாக பேசுகிறார் மேஜர் விக்கிரமாதித்யா.   


பாயும் படை!

அமெரிக்கா- Navy SEAL, Green Berets, Delta Force
இங்கிலாந்து - Special air Service(SAS), Special Boat Servive(SBS)
ரஷ்யா - Spetsnaz
இஸ்ரேல் - Sayeret Matkal
பாகிஸ்தான் -special service Group(SSG)



சாகசப்படை!

ராணுவம் - Para SF
வான்படை -Garud
கடல்படை - MARCOS
உள்துறை - National Security Guard



முப்படை வரலாறு!

Garud

2003 ஆம் ஆண்டு இந்திய வான்படையால் அமைக்கப்பட்ட சிறப்பு படை. தேடுதல் வேட்டை, தீவிரவாத தாக்குதலில் தேர்ந்த படை, இயற்கை பேரிடர்களில் உடனே வந்து உதவும் பிரிவு இது. .நாவுக்கு அயராமல் உதவும் இப்பிரிவினர் அயல்நாட்டினரோடு பயிற்சிகளும் செய்வார்கள்.

MARCOS

1987 ஆம் ஆண்டு உருவான கடல்படை கமாண்டோக்கள். நிலம், நீரில் கெத்து காட்டுபவர்கள் மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் 200 நபர்களை மீட்டனர். இலங்கை, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பிளான்களை வெற்றிபெறச்செய்தவர்கள்.

National Security Guard


1986 ஆம் ஆண்டு உருவான தீவிரவாத எதிர்ப்பு படை. மத்திய பாராமிலிட்டரி படைக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ராணுவப்பிரிவு இது. புலியாய் பாய்ந்து தாக்கி, உடனே தடம் தெரியாமல் திரும்புவது இவர்களின் ஸ்டைல். மிகச்சிக்கலான நிலைகளில் மட்டுமே காக்க வருவார்கள்.

தொகுப்பு: ராஜ் கணேவால்கர், முகேஷ்வரி
நன்றி: குங்குமம்

பிரபலமான இடுகைகள்