மோடியின் எக்ஸாம் மந்திரங்கள்!
donkeyhotey |
மோடியின் எக்ஸாம்
மந்திரங்கள்!
மோடி எழுதியுள்ள
எக்ஸாம் வாரியர் நூலில் மாணவர்களுக்கு பல்வேறு யோசனைகளை கூறியுள்ளார். நூலில்
அப்படியென்ன உள்ளது? மொத்தம் 25 அறிவுரைகள்.
பெற்றோர், ஆசிரியர் கூறுவார்களே அதே தேய்ந்துபோன
அறிவுரைகள்தான். ஒன்று யோகா தொடர்பானது. நேரு சிறையிலிருந்தபோது தனது மகளான இந்திராவுக்கு பல்வேறு வெரைட்டியான கருத்துகளில்
30 கடிதங்களை எழுதினார். ஆனால் இங்கு மோடி
தேர்வில் ஜெயிப்பது எப்படி என மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
2019 ஆம்
ஆண்டு தேர்தலில் இளைஞர்கள் மூலம் ஜெயிப்பது என்ற பிளானில் நூலை தயாரித்திருப்பார்கள்
போல. இதில் மோடி ஆப், மாணவர்கள் இணையக்குழு
ஆகியவையும் உண்டு. அறிவைத்தேடுவது சிறந்த பரிசு என்று எழுதும்
மோடி, அதனை சமர்த்தாக பயன்படுத்தக்கூறுவது தேர்வுகளில் மட்டும்தான்.
பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளும் கூட மாணவர்களிடம் வலியுறுத்துவது
நல்ல மதிப்பெண்களின் பாஸ் செய்வதைத்தானே! தேர்வுகளை கண்டு மாணவர்கள்
பயம் கொள்வது ஏன் என்பதை மோடி யோசிக்கவில்லை. தன்னுடைய உற்சாகமான
குரலில் நல்ல மார்க்குகளை மாணவர்கள் பெறவேண்டும் என்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.
-கோமாளிமேடை டீம்