"சோசலிச இயக்கங்கள் உறங்கும் எரிமலையைப் போன்றவை"


Image result for john bellamy foster



முத்தாரம் நேர்காணல்


"சோசலிச இயக்கங்கள் உறங்கும் எரிமலையைப் போன்றவை"


ஜான் ஃபெல்லமி ஃபாஸ்டர் மன்த்லி ரிவ்யூ(ஆசிரியர்).



தமிழில்: .அன்பரசு

அமெரிக்காவைச் சேர்ந்தவரும் ஓரேகான் பல்கலையின் சமூகவியல் பேராசிரியருமான ஜான், சமூகம், அரசியல், பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை இடதுசாரி சிந்தனையில் எழுதி வருபவர். 1989 ஆம் ஆண்டிலிருந்து மன்த்லி ரிவ்யூ இதழில் பணியாற்றி வருகிறார்.


டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க வல்லரசு நாட்டின் அதிபராகியுள்ளார். இது அரசியல் பொருளாதார தளத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?


முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் தாராளமயமான ஜனநாயக தன்மைக்கு சிதைவு என்றே ட்ரம்ப் தேர்வை கூறமுடியும். நவதாராளமயம் அதன் எல்லைகளை நெருங்கிவிட்டது. இதன் விளைவாக ஜனநாயகத்தை குலைக்கும் பாசிசபோக்கு அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து வருகிறது. பாசிசப்போக்கில் ஊறிவளர்ந்த வித்துதான் அதிபர் ட்ரம்ப். கீழ்மட்ட வெள்ளையர்களின் ஆதரவில் ஜெயித்த ட்ரம்புக்கு ஆலோசகர்கள், தாராளவாத வலதுசாரிகளான ஸ்டீவ் பானன் போன்றோர். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உளறித்தள்ளும் ட்ரம்பை கட்டுப்படுத்த அதிகாரி ஜான் எஃப் கெல்லி போன்றோர் கூட தடுமாறுகின்றனர். தீவிர தேசியவாதியான ட்ரம்ப், விசா கெடுபிடிகள், இஸ்லாமிய நாடுகளுக்கு தடை, அகதிகளுக்கு அனுமதி மறுப்பு என செயல்படுகிறார். இவரிடம்தான் அணுஆயுத பட்டன் உள்ளது என்பது கவலைக்குரிய செய்தி.


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ், குறிப்பிடத்தக்க அளவு ஆதரவும் பெற்றார். அவர் அரசியலுக்கு வந்திருந்தால் இடதுசாரி அரசியல் வேகம் பிடித்திருக்க வாய்ப்புண்டா?


நடுத்தரவர்க்க மக்களின் மனநிலையை பிரதிபலித்த அடையாளம்தான் பெர்னி சாண்டர்ஸ். இங்கிலாந்தின் ஜெர்மி கார்பைன் போல ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியல்ல இவர். சாண்டர்ஸ், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு கோருபவர் மேலும் ராணுவத்தின் பக்கம் தயங்காமல் நிற்பவர். அமெரிக்காவிலுள்ள கட்சிகள் இரண்டுமே, அங்குள்ள மேல்தட்டு வர்க்கத்திற்கும் அதிகாரிகளுக்கான சேவை மையம் அவ்வளவே.
 உலகெங்குமுள்ள புரட்சிகர இயக்கங்கள் போல இவர்களை என்றுமே கருதமுடியாது. தான் கொண்ட கொள்கையில் தீவிரமானவர் என்று சாண்டர்ஸை நாம் வகைப்படுத்த முடியாது. சோஷியலிச இயக்கங்கள் எரிமலையைப் போல என்பார் ஃபிடல் காஸ்ட்ரோ. Blacks live matter, Green party போன்றவ் இடது சித்தாங்கங்களை கொள்கையில் அமைப்பில் கொண்டுள்ளவை.


அமெரிக்காவின் மேலாதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதா? உலகில் பல்முனை கொண்ட அரசுகள் உருவாகும் காலமா இது?


20 ஆம் நூற்றாண்டைப்போல 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா ஏகபோக வல்லரசாக திகழ முடியாதபடி சீனாவின் வளர்ச்சி உள்ளது. ஆனால் இன்றும் அமெரிக்கா நிறுவனங்களின் வளர்ச்சி, மேல்நோக்கியே உள்ளது. அதன் டாலர்கள் உலக சந்தையில் கோலோச்சி வருகின்றன. இன்றும் உலகில் அதிநவீன அழிவு பொருட்களை கொண்ட ராணுவமாக இருப்பது அமெரிக்கா மட்டுமே. பல்முனை கொண்ட அரசுகள் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் உருவாகத்தொடங்கின. யார் முதலிடம் என்ற ரேஸ்தான் இன்று நடந்து வருகிறது.


கியூபா,வெனிசுலா ஆகிய நாடுகளில் நடந்து வரும் இடதுசாரி அரசுகளின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?


இரு நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிபோர்களின் காலகட்டம் வேறு என்றாலும், நிகழ்ந்த மாற்றம் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அமெரிக்காவின் முதலாளித்துவம் மற்றும் மேலாதிக்கத்தை கருவருத்த மக்களின் போராட்டம் அது.


நன்றி: JIPSON JOHN and JITHEESH P.M.

frontline.in
நன்றி: முத்தாரம்

    





பிரபலமான இடுகைகள்