பத்தாயிரம்் ஆண்டு கடிகாரம்!


Image result for jeff bezos




பத்தாயிரம்் ஆண்டு கடிகாரம்!

அமேஸான் பத்தாயிரம் ஆண்டு ஓடும் கடிகாரத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா? யெஸ். உண்மைதான் அது.

டெக்சாஸிலுள்ள சியரா டயாப்லா மலையை வாங்கியுள்ள அமேஸான் நிறுவனர் ஜெஃப் பேஸோஸ், அங்கு பதிக்க கடிகாரத்தை 4.5 கோடி செலவில் தயாரித்து வருகிறார். விஞ்ஞானி டேனி ஹில்லிசின் ஐடியா இது. 152 மீட்டர் உயரத்திலுள்ள இக்கடிகாரம், விரைவில் தன் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். "அரசுகள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இக்கடிகாரம் உள்ளவரையில் அமெரிக்கா வாழும்" என்கிறார் ஜெஃப் பெஸோஸ். சரியான டைமுக்கு அங்கிருந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கடிகாரத்தின் அலார சத்தத்தைக் கேட்கலாம். இந்த கடிகாரத்தினால் என்ன பிரயோஜனம் நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்வி, எலன் மஸ்க் தன் காரை விண்வெளிக்கு அனுப்பினாரே அதேயளவு பிரயோஜனம்தான் இதுவும்.

தொகுப்பு: கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்



பிரபலமான இடுகைகள்