மாயமான ஹாரியும் எரிக்கப்பட்ட மன்னரும்!
வரலாற்று
சுவாரசியங்கள்
மாயமான
ஹாரியும் எரிக்கப்பட்ட மன்னரும்!
ரா.வேங்கடசாமி
ஹாரி
டோமிலா நாஜிக்களால் கொல்லப்பட்டார் என்றும், தென் அமெரிக்காவிற்கு தப்பி போய்விட்டான்
என்றும் வதந்தி பரவியது.
வில்ஹெல்மின்
தாய் 1950- ஆம் ஆண்டு நடந்த விஷயத்தை சொல்லி 1927-ஆம் ஆண்டு
கோடைகாலத்தின்போது ஹாரி தன்னைத் தேடிக்கொண்டு வந்ததாகவும் சொன்னார். ‘‘அவனை நான் துரத்தவில்லை. ஏனென்றால் அவனால்
பிள்ளைகளுக்கு எவ்வித கெடுதலும் ஏற்படவேயில்லை. அவனுடைய
அனுபவங்களைக் கேட்ட நானும் இளவரசனும் வயிறு வலிக்க சிரித்தோம். மாலை தேநீர் சாப்பிட
வரச்சொல்லி உபசரித்தோம். தனது உண்மையான தாய் எப்படி இருப்பாள் என்பதைப் பார்க்கவே என்னைத்தேடி
அவன் வந்தானாம்! வில்ஹெல்ம் இளவரசனாக ஹாரியை பலரும் நம்பினார்கள்? என்றுதான் எனக்கு புரியவில்லை’’ என்று ஆச்சரியப்பட்டார்.
கொடுங்கோல் மன்னனான
ஜார் மன்னன் ரஷ்யாவில் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியவர். தனது
மூத்த மகனுடன் நடந்த ஒரு தகராறில் அவனையே கொன்று புதைத்த அசுரன் ஜார்.
1584-ஆம் ஆண்டு ஜார் மன்னன் இறந்தபிறகு அவனது இரண்டாவது மகன் பையோடார் ஜார்
மன்னன் என்னும் பட்டப் பெயருடன் அரியணை ஏறினான். தந்தை இறந்தபோது இளைய மகன் டிமிட்ரிக்கு,
வயது பதினாறு மாதங்கள்தான்.
1591-ஆம் ஆண்டு தனது எட்டாவது வயதில் காக்காய் வலிப்பு நோயினால் டிமிட்ரி மரணித்தான்.
ஆனால் அவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்போதே பேச்சு எழுந்தது.
மன்னர் பையோடாருக்கு குழந்தைகள் இல்லை. அதனால் அவனது தனது மைத்துனனான போரிஸ்
காட்னாவை தனது அடுத்த வாரிசாக அறிவித்தார்1.
1602
ஆம் ஆண்டில் யூரி ஒட்ரிப்வ் என்ற ரஷ்யர் போலந்து நாட்டில், டிமிட்ரி என்று பிரகடனம் செய்தார்.போலந்து மன்னர் இதை ஒப்புக்கொண்டார்.
ரோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றிய இந்த போலி டிமிட்ரி, போப்பின் ஆதரவைப் பெற்றார். ரஷ்யாவின் பழமையான சர்ச்சுக்கும் ரோம்
நகரத்திற்கு ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் விரிசலை போலி டிமிட்ரி சரி செய்வார்
என்று போப் நம்பினார். ரஷ்யாவின் எல்லையில் உள்ள சில பகுதி நிலங்களை போலி டிமிட்ரிக்கு
தருவதாக போலந்து மன்னன் வாக்குறுதி அளித்தார்.
ஆகஸ்ட்
மாதம் 1604-ஆம் ஆண்டு இந்தப் போலி டிமிட்ரி நான்காயிரம் பேருடன் ரஷ்யாவிற்குள்
புகுந்தான். முதல் தாக்குதலில் வென்றாலும் பின்னர் தோல்விகள்தான் தொடர்ந்து கிடைத்தன. துரதிர்ஷ்டவசமாக
ஜார் மன்னன் போரிஸ், ஏப்ரல் 1605 ஆண்டு இறந்து விடவே ரஷ்யப்படை
இந்தப் போலியின் பின்னால் அணி வகுத்தது. போரிஸ் மன்னரின் குடும்பம்
படுகொலை செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் யூரி ஒட்ரிப்வ்,
ஜாரி டிமிட்ரி என்ற பெயரில் ரஷ்யாவின் மன்னரானார். இவரோடு ஏராளமான அயல்நாட்டு வீரர்களை உள்ளே வந்தது ரஷ்யர்களுக்கு எரிச்சலை தர
கிளர்ச்சி உருவானது. இதில் லீடரான இளவரசன் வாசலி சுசிகி,
போலி டிமிட்ரியையும் அந்நிய வீரர்கள் இரண்டாயிரம் பேர்களையும் கொன்று
ரத்தக்குழம்பு வைத்தார்.
இது
நடந்தது 1606-ஆம் வருடம் மே மாதம்! எதிரியைக் கொன்று ருத்ரதாண்டவம் ஆடிய வாசலி அடுத்த ஜார் மன்னரானார். இரண்டாவதாக
ஒரு நபர் நான்தான் டிமிட்ரி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு 1608-ஆம் ஆண்டு மாஸ்கோவினுள்
நுழைந்தார்.
மாஸ்கோவிற்கு
சில கி.மீ அப்பால் ஒரு முகாமை அமைத்து மன்னனின் அரசாட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை
ரகசியமாக அழைத்து அவர்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால் சில காலத்திற்குள் வாசலி,
பதவியிழந்தார். நாடு மூன்று ஆண்டுகளாக ஜார்
மன்னராட்சி இல்லாமல் பீடம் வெற்றிடமாக இருந்தது.
இரண்டாவதாக
டிமிட்ரி என்று சொல்லியவரை 1612-ஆம் ஆண்டு மக்களே இணைந்து கொன்றார்கள். ? 1917-ஆம் ஆண்டு புகழ் பெற்ற ரஷ்யப் புரட்சி நடைபெற்றது. அப்போது ரஷ்யாவின்
அரியணையில் இருந்தது ஜார் நிக்கோலஸ். புரட்சியின் விளைவாக
நிக்கோலஸ், அவன் மனைவி, அவனது ஐந்து
குழந்தைகள், அவனது டாக்டர் மற்றும் வேலைக்காரர்கள் சிறை வைக்கப்பட்டு
யெட்டரின் பர்க்(சைபீரியா) எனுமிடத்தில்
ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டார்கள். 1918-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி மன்னர் குடும்பம்
கொல்லப்பட்டது.
நன்றி: முத்தாரம்