ஐ லவ் சாக்லெட்!



Related image






சாக்லெட் சாப்பிடுவோமா?

 தியோபுரோமா கோகோ பருவகால மரத்தின் பழங்களிலிருந்து சாக்லெட் பெறப்படுகிறது. இம்மரத்தின் பெயரை கடவுளின் உணவு என்று வரையறுக்கிறது கார்னெல் யுனிவர்சிட்டி. பிரேசில், இந்தோனேசியா, நைஜீரியா, மேற்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய இடங்களிலிருந்து 79 சதவிகித கோகோ பெறப்படுகிறது. பப்பாளி சைசில் உள்ள கோகோ பழத்தில் 50 விதைகள் உள்ளே இருக்கும்.


கையால் பறிக்கப்பட்ட பழங்களிலிருந்து பெறப்பட்ட விதைகள், அதனைச் சுற்றியுள்ள வெள்ளை சதைப்பற்றுடன் வாழை இலைகளால் ஏழு நாட்களுக்கு மூடி வைக்கப்படுகின்றன. சாக்லெட் மணம் கிளம்பியவுடன் வெள்ளைநிற பகுதி அகற்றப்பட்டு வெயிலில் காயவைக்கப்படுகின்றன. சிதைந்த விதைகள் நீக்கப்பட்டு, மற்ற விதைகள் நன்கு வறுக்கப்படுகின்றன. மெஷினில் செலுத்தப்படும் விதைகள் து்ண்டாக்கப்பட்டு உமிகள் அகற்றப்படுகின்றன. இப்போதுள்ளது நிப்- இதுவே சாக்லெட். பல்வேறு முறைகளிக் திக்கான பசைபோல இருக்கும். இதில் சர்க்கரை, பருப்புகள், பாலாடை ஆகியவை சேர்த்தால் சாப்பிடுவதற்கான சாக்லெட் ரெடி

தொகுப்பு: ரோஜர் வின்சி, பானுமதி கேமுலா
நன்றி: முத்தாரம்