வரலாற்று சுவாரசியங்கள்:ராஜகுடும்பத்தின் இறுதி வாரிசு
வரலாற்று
சுவாரசியங்கள்
5
ராஜகுடும்பத்தின்
இறுதி
வாரிசு
ரா.வேங்கடசாமி
ஆனால்
அதற்குப்பிறகு தொடர்ந்த வதந்திகளின்படி, ஜார் மன்னனின் குடும்பத்தில்
இருவர் மட்டும் கொல்லப்படவில்லை என்று தெரிந்தது. அந்த இருவர் யார்?
ஒன்று
அலெக்ஸி,
இன்னொருத்தி அனஸ்டாஸியா.
1920-ஆம் வருடத்தில், தற்கொலை முயற்சிக்காக கால்வாயில்
குதித்த ஒரு இளம் பெண்ணை பெர்லின் நகர போலீசார் உயிரோடு மீட்டனர்.
மனநிலை
சரியில்லை என்னும் காரணத்திற்காக அப்பெண் இரண்டு ஆண்டுகள் மனநிலை காப்பகத்தில் பாரமரிக்கப்பட்டு
சிகிச்சை நடந்தாலும் பேச்சு வரவில்லை. அவள் ரஷ்யா வம்சாவளியாகத்தான்
இருக்க வேண்டும். அதிகாரிகள் அவளை ஆர்தர் வான் கெலிஸ்ட் என்னும் பிரபுவிடம்
ஒப்படைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர் ரஷ்ய மொழி பேசியதுதான். அவளை அவர்
தன் வீட்டிற்கு அழைத்துப் போனார். அங்கே இரண்டு மாதங்கள் தங்கியிருந்த பிறகு அவள்
திடீரென ஒருநாள், தான்தான் ‘ரஷ்ய
சீமாட்டி அனஸ்டாஸியா’ என்றாள். அவள் சொன்ன கதை இதுதான்.
தானும்
இன்னொரு சகோதரியும்,
அந்தப் படுகொலையின்போது ஒளிந்துகொண்டு இருந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாகத்தான் அடிபட்டு மயக்கமடைந்து விட்டதாகவும்,
மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தங்களைக் கொல்ல
வந்த வீரர்களில் ஒருவன் தன்னைக் காப்பாறியதாகவும் சொன்னாள். பிறகு அவனுடைய
குடும்பத்துடன் அவள் ருமேனியா நாட்டிற்குச் சென்றதாகவும், அங்கிருந்து
அவள் ஜெர்மனிக்கு வந்ததாகவும் விபரமாகச் சொன்னாள். உடனே அந்தக்கதை பலரின் காதுகளுக்கு
மாறி நாடே பரபரப்பானது. மக்கள் கூட்டம் ஜார் மன்னரின் குடும்ப
வாரிசைக் காண தெருவில் திரண்டது. அவர்களின் கேள்விகளால் பயந்துபோன
அப்பெண் அங்கிருந்து தப்பியோடிவிட்டாள்.
1925-ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட ஜார் மன்னனின் தாயார் டென்மார்க்கில்
அடைக்கலம் பெற்று வாழ்ந்து வந்தவர். தன் பேத்தியின் விவரங்களைக் கேள்விப்பட்டு,
இதைப்பற்றிய விசாரிக்க அரசைக் கோரினார். ராணிமேரி
என்னும் மூதாட்டி இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். ஆனால்
அனஸ்டாசியாவை நன்றாக அறிந்த பலர் இவர் நிச்சயம் ஜார் மன்னனின் வாரிசு அல்ல
என்றனர். ஆனால் படுகொலையின்போது இறந்த டாக்டரின் மகள், ரஷ்யாவில்
அவளைப் பார்த்துப்பேசி இருப்பதாகவும் உறுதியாகச் சொன்னாள்.
இறந்து
ஜார் மன்னரின் மனைவி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவள் என்பதால்,
ஜெர்மன் வம்சாவளியில் பிரபு வம்சத்தினர் பலர் உறவினர்களாக இருந்தனர். அவள்
உண்மையானவளா, இல்லை போலியா என்பதைக் கண்டறிய எர்னஸ்ட் பிரபு,
மார்டின் கோனுப் என்னும் டிடெக்டிவை உண்மையைக் கண்டறியும்படி
பணித்தார்.
ரஷ்ய
மன்னரின் மகள் என்று கூறப்படும் பெண், போலந்து நாட்டில் ஒரு
தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் மகளான பிரான்சிஸ்கா சான்னோஸ்கா என கண்டுபிடித்தார்.
1920-ஆம் ஆண்டு அங்கிருந்து பிரான்சிஸ்கா காணாமற்போனாள்.ஆனால்
அனஸ்டாசியா இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
1928-ஆம் ஆண்டு அனஸ்டாசியாவின்
ஒன்றுவிட்ட சகோதரி ஜார் ஜீவன் இளவரசி, அனஸ்டாசியாவை அமெரிக்காவிற்கு
அழைத்துப் போனாள். அங்கே இருவருக்குள் தகராறு ஏற்பட, பரிதாபப்பட்ட பிரபல ரஷ்யா சங்கீத
ஆசிரியர் செர்கிரஸ்மான்போவ் அனஸ்டாசியாவை ‘லாஸ் ஐலண்ட்’
தீவிலுள்ள ஹோட்டலில் நான்கு மாதம் தங்க வைத்தார். அந்த ஹோட்டலில் அவளது பெயர், அன்னா ஆண்டர்சன்.
அடுத்த நாற்பது வருடங்களுக்கு இதே பெயரில்தான் அவள் வாழ்ந்தாள். 60 ஆண்டுகளுக்கு
மேல் இவ்விவகாரம் தொடர்ந்து அலசப்பட்டது. எதற்கு இவள் மீது அரசுக்கு அப்படியொரு பாசம்?
‘பேங்க் ஆப் இங்கிலாந்து’ என்னும் வங்கியில் லாக்கரில்
சேமித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யத்தங்கம்தான்.
1931-ஆம் ஆண்டு ஜெர்மனிக்குத் திரும்பிய அன்னா ஆண்டர்சன், ஜாரின் சொத்தில் ஒரு பகுதி தனக்குச் சேர வேண்டுமென்றாள். அவள் கேட்டது
வெறும் பத்தாயிரம் பவுன்கள்தான்!வாரிசு உரிமை 1970-ஆம் ஆண்டு கோர்ட்டில் விவாதிக்கப்பட்டு வந்தாலும்,
அன்னாவின் உரிமையை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ
முடியவில்லை என்பதுதான் முடிவாக இருந்தது. 1969-ஆம் வருடம்
அன்று ஓய்வு பெற்ற அமெரிக்கப் பேராசிரியரான டாக்டர் ஜான் மனாகனை அமெரிக்க
குடியுரிமைக்காக மணந்துகொண்டாள் அன்னா.
1984-ஆம் ஆண்டு அவள் இறந்தவுடன், அமெரிக்காவிலேயே அவளது உடல் புதைக்கப்பட்டது.
நன்றி: முத்தாரம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்