இடுகைகள்

டாலர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.  பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே  இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.   அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.  ஜப்பானில் 21 சதவீத ரொக்கப

பிட்காயினுக்கு அனுமதி வழங்கிய எல்சால்வடோர் நாடு!

படம்
            பிட்காயினுக்கு அனுமதி எல் சால்வடோர் நாடு பிட்காயினை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது . உலகில் முதன்முதலாக டிஜிட்டல் கரன்சிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது . இதற்குப்பிறகு நாட்டின் தலைவர் நயீப் புகாலே பிட்காயின் மாநாட்டில் இதனை மீண்டும் ஒருமுறை கூறினார் . இனி எல் சால்வடோரில் பிட்காயின் வழியாக வணிகத்தை செய்பவர்களுக்கு அனுமதி உண்டு . இது கட்டாயமல்ல . அமெரிக்க டாலரும் எல் சால்வடோரின் அதிகாரப்பூர்வ கரன்சிதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது . இந்த இரு கரன்சிகளின் மதிப்பும் சந்தையின் மதிப்பில் தீர்மானிக்கப்படும் . டாலர் இதற்கு அடையாள மதிப்பாக இருக்கும் . நாட்டிலுள்ள எழுபது சதவீத குடிமக்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பணப்பரிமாற்ற முறை போதுமானதாக இல்லை . தாராள வர்த்தகத்திற்கு ஏற்றது போல பணப்பரிமாற்ற முறை டிஜிட்டல் கரன்சியில் செய்யப்படுவது நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்று கூறுகிறது அரசு . கிரிப்டோ கரன்சிகளைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் வெளிப்படையானது என்றாலும் இதனைப் பின்பற்றி ஏராளமான கொள்ளையர்கள் வருவார்கள் என்பது

பொருளாதாரத்தை கிரிப்டோ கரன்சி ஆளும்! - இங்கிலாந்து கவர்னர் யூகம்!

படம்
அமெரிக்க அரசின் டாலர் என்பது வர்த்தக பொருள் என்பதோடு அரசியல் அதிகாரமாகவும் உள்ளது. ரூபாயில் வர்த்தகம் செய்யும்போது, இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் டாலரில் வணிகம் செய்யும்போது கிடைப்பதில்லை. ஆனால் அதை கைவிட முடியாத தற்கு காரணம், அமெரிக்க மீதான பயம்தான். இதில் முஸ்லீம் நாடுகள், மிக தைரியமாக அமெரிக்காவை எதிர்க்கின்றன. காரணம், அங்கு நிறைந்துள்ள எண்ணெய் வளம், பொருளாதார பலம்தான். டாலர், பௌண்டுகளுக்கு மாற்றாக டிஜிட்டல் பரிமாற்றத்தில் கிரிப்டோ கரன்சிகள் வந்தபின் அனைத்தும் மாறியுள்ளன. குறிப்பிட்ட பணத்தை வணிகத்தில் பயன்படுத்தவேண்டும் என்ற நிர்பந்தம் இனி இல்லை. தற்போதைய பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி, எதிர்காலத்தில் ஃபேஸ்புக்கின் லிப்ரா போன்ற விர்ச்சுவல் கரன்சிதான் உலகை ஆளும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இன்றுவரை வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலர் மட்டுமே ஏகபோகமாக உள்ளது. 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ்  ஒப்பந்தப்படி டாலர் உலகின் சக்திவாய்ந்த கரன்சியாக மாறியது. இதன் மதிப்பை தக்க வைத்து அரசியல் காய் நகர்த்தி முதன்மையான நாடாக மாறியது அமெரிக்கா. இன்று உலகம் முழுக்க பல

அமெரிக்காவின் நூறு டாலர் டேட்டா!

டாலர்தேசம்! அமெரிக்காவின் நூறு டாலர் நோட்டுக்கு நிறைய சிறப்பம்சங்கள் உண்டு. அதில்தான் முதல் அதிபரான பெஞ்சமின் ப்ராங்க்ளின் அமைதியாக நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவை பற்றிய சிறிய டேட்டா உங்களுக்காக.... நூறு டாலர் நோட்டைத் தயாரிக்க அமெரிக்காவுக்கு 14.2 சென்ட்ஸ் செலவாகிறது. நூறு டாலர் நோட்டின் ஆயுள்காலம் தோராயமாக 15 ஆண்டுகள். காட்டன் லினன் பேப்பர் ரூபாய் நோட்டுகளை விட கனடாவில் தயாரிக்கப்படும் பாலிமர் ரூபாய் நோட்டுகள், 2.5 மடங்கு அதிக ஆயுள் கொண்டவை. ரூபாய் நோட்டுக்களை பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கித் தர கிரேன் அண்ட் கோ கம்பெனி பெறும் ஒப்பந்த ஊதியம் 46 மில்லியன் டாலர்கள். நூறு டாலர் நோட்டில் 70 சதவீதம் பருத்தியும் பிற பகுதிகள் லினன் மூலமும் உருவாகிறது. நியூசிலாந்து நாட்டில் உலா வரும் நூறு டாலர்களின் மதிப்பு 2000 -2005 காலகட்டத்தில் 1.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இந்தியா தடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் புழக்கத்திலிருந்த 86% ரூபாய் நோட்டுக்களின் அளவு சரிந்து போனது. நன்றி: க்வார்ட்ஸ்