பிட்காயினுக்கு அனுமதி வழங்கிய எல்சால்வடோர் நாடு!

 

 

 

 

Bitcoin Breakout | InvestorPlace

 

 

பிட்காயினுக்கு அனுமதி


எல் சால்வடோர் நாடு பிட்காயினை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. உலகில் முதன்முதலாக டிஜிட்டல் கரன்சிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்குப்பிறகு நாட்டின் தலைவர் நயீப் புகாலே பிட்காயின் மாநாட்டில் இதனை மீண்டும் ஒருமுறை கூறினார். இனி எல் சால்வடோரில் பிட்காயின் வழியாக வணிகத்தை செய்பவர்களுக்கு அனுமதி உண்டு. இது கட்டாயமல்ல. அமெரிக்க டாலரும் எல் சால்வடோரின் அதிகாரப்பூர்வ கரன்சிதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இரு கரன்சிகளின் மதிப்பும் சந்தையின் மதிப்பில் தீர்மானிக்கப்படும். டாலர் இதற்கு அடையாள மதிப்பாக இருக்கும்.


நாட்டிலுள்ள எழுபது சதவீத குடிமக்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பணப்பரிமாற்ற முறை போதுமானதாக இல்லை. தாராள வர்த்தகத்திற்கு ஏற்றது போல பணப்பரிமாற்ற முறை டிஜிட்டல் கரன்சியில் செய்யப்படுவது நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்று கூறுகிறது அரசு.


கிரிப்டோ கரன்சிகளைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் வெளிப்படையானது என்றாலும் இதனைப் பின்பற்றி ஏராளமான கொள்ளையர்கள் வருவார்கள் என்பது பலரின் பயமாக உள்ளது. எண்ணெய் நிறுவனம் ஒன்றை கொள்ளையிட்டு 4 மில்லியன் மதிப்புள்ள பிட்காயின்களை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். அமெரிக்காவில் எண்ணெய் நிறுவனங்களை ரான்சம்வேர் மூலம் முடக்கி 2.3 மில்லியன் டாலர்களை திருடியுள்ளது போனமாதம் நடந்த சம்பவம்தான். தனியாக யாரையும் மையப்படுத்தாமல் நடக்கும் பணப்பரிவர்த்தனை என்பதால் இதனை யாரும் இடைமறித்து குற்றங்களை கண்டறிய முடியாது.


இதில் பயன்படுத்தப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பொதுவானதுதான். இதனை யார் வேண்டுமானலும் அணுகி பணப்பரிமாற்றம் செய்தவரை பற்றி அறிந்துகொள்ளலாம். ஆனால் அவரின் உண்மையான அடையாளத்தை கட்டாயப்படுத்தி பெற முடியாது. வங்கியில் மோசடி நடந்தால் ஒருவரின் உண்மையான அடையாளத்தை எளிதாக தேடிப்பெறலாம். அந்த வகையில் குற்றவாளியை இதில் பிடிப்பது கடினம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளை ஆபாசப்படும ்எடுக்கும் குழுக்களை களையெடுத்தனர். இப்படி 38 நாடுகளில் 300 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.


கடந்த ஆண்டில் மட்டும் கிரிப்டோகரன்சியில் நடந்துள்ள முறைகேடான பணப்பரிமாற்றம் பத்து பில்லியனாகும். இது அந்த ஆண்டின் நடைபெற்ற பரிமாற்றத்தில் ஒரு சதவீதம்தான்.

tnie



கருத்துகள்