சீரியல் கொலைகாரர்களின் பல்வேறு கொலைசெய்யும் முறைகள், பாணிகள்!

 

 


 

 

 

வெர்ஸெனி

இத்தாலியைச் சேர்ந்தவரான வெர்ஸெனி 1849இல் பிறந்தவர். சிறுவயது முதலே கோழிகளை கழுத்தை நெரித்து கொல்வதில் சந்தோஷம் கொண்டார். அது அப்படியே தொடர ஏராளமான கோழிகளை அடித்து கொன்று மகிழ்ந்தார். இதனை இவர்தான் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. பின்னர், சிறுவனாக இருக்கும்போது இவரது கவனம் இளம்பெண்கள் மீது திரும்பியது. தனக்கு தெரிந்த பெண்களை எல்லாம் தாக்கத் தொடங்கினார். அப்போது செய்தது கொலை முயற்சிதான் என்றாலும் அது நிறைவேறவில்லை. பிறகு, பதினேழு வயது பெண் ஜோகன்னா என்ற பெண்ணை காலையில் பின்தொடர்ந்து சென்று தாக்கினார். கழுத்தை நெரித்து கொன்றவர், வயிற்றிலுள்ள குடல்களை உருவினார். உடலை முழு நிர்வாணப்படுத்தியவர், காலிலுள்ள தசைகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார். அதில் ஒரு பகுதியை சமைக்க எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இப்படியே இன்னொரு பெண்ணையும் கொன்றார். அடுத்து சொந்தக்கார பெண்ணை கொல்லும் முயற்சியில் அவள் கெஞ்சியதால் உயிரோடு விட்டார். அதனால் காவல்துறை வெர்ஸெனியை கைது செய்தது. குற்றங்களை செய்தாயா என்றதும் ஆமாம் என ஒப்புக்கொண்டார். குடல், த்தசைகளை எதற்கு எடுத்து சொன்றா்ய் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, கொலைக்கான நினைவாக எடுத்து சென்றேன் அதனை தொட்டுப்பார்த்தால் எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது. கொலையானவர்களின் வாய்க்குள் கைவிடுவதும் கூட சுய இன்பம் அனுபவிப்பது போன்ற இன்பத்தைக் கொடுத்தது என சொன்னார். கொலைக்குற்ற  தண்டனையாக வாழ்நாள் முழுக்க சிறையில் அடைக்கப்பட்டார் வெர்ஸெனி. தொடர் கொலைகாரர்களின் உளவியல் பற்றி அறிய வில்லியம் ஸ்டேகல் என்பவர் எழுதிய சாடிஸம் அண்ட் மாசோசிசம் என்று நூல் முக்கியமான ஆவணம். இதில் கொலைகாரர்கள் தங்களது பாலியல் சார்ந்த கற்பனைகளை அப்படியே மருத்துவர் எழுதியிருக்கிறார். இதனை படிக்கும்போது பலருக்கும் எச்சில் கூட தொண்டையை விட்டு கீழே இறங்காது. அந்த அளவு எது எப்படியோ அப்படியே எழுதப்பட்டிருக்கிறது.  

போர் என்பது சில நாடுகளில் அமைதியைக் கொண்டுவருவதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் உலகம் முழுக்க உள்ள பல்வேறு குடும்பங்களில் உளவியல் சிக்கல்களையும் தீராத பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது என்பதே உணமை. உலகப்போருக்கு பிறகு ஏராளமான தொடர் கொலைகாரர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களை நேரடியாக குடும்ப பின்னணியைப் பார்த்தால் அம்மாவின் வளர்ப்பு, அப்பாவின் குடிநோய், கண்டிப்பு, கடுமையான தண்டனை என சூழல்கள் இருக்கலாம். ஆனால் அக்காலகட்ட சமூகத்தையும் இதோடு இணைத்து பார்ப்பவது அவசியம். அப்போதுதான் முழுமையான சித்திரம் நமக்கு கிடைக்கும். இந்த சூழலை இரு மருத்துவர்கள் உள்ளடக்கி உளவியல் பிரச்னைகளைப் பற்றி நூலை எழுதியிருக்கிறார்கள்.

 டாக்டர் ஜே. பால் டி ரிவர்,  தி செக்ஸூ்வல் கிரிமினல் என்ற நூலை எழுதினார். இந்த நூலை எழுதியபோது பாலியல் குற்றங்களின் துறை தலைவராக காவல்துறையில் பால் வேலை செய்து வந்தார் இதற்குப்பிறகு1957ஆம் ஆண்டு குற்றவியல் துறை  பேராசிரியர் ஜேம்ஸ் மெல்வின் ரெய்ன்ஹார்ட்,  செக்ஸ் பர்வெர்ஷன்ஸ் அண்ட் செக்ஸ் கிரைம்ஸ் என்ற நூலை எழுதினார். இதில் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்பவர்களைப் பற்றி எழுதியிருந்தார். இந்த இருநூல்களையும் படிக்கும் போது மனதை தைரியப்படுத்திக்கொண்டு படிக்கவேண்டும். அந்தளவு அதிர்ச்சியூட்டும் தகவல்களும், படங்களும் இடம்பெற்றிருக்கும்.

ஆதிக்கம்

அனைத்து ஆபாசப்பட தளங்களிலும் டாமினன்ஸ் என்று தட்டச்சு செய்தால் ஏராளமான வீடியோக்கள் வரும். கூடவே அடிமைத்தனம் என்று கூறப்படும் சப்மிஷிவ் வீடியோக்களும்தான். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. பொதுவாக பாலுறவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது இயல்பாக ஆண், பெண் இருவரிடையே ஏற்படும் போட்டிதான். ஆனால் இதுவே தொடர் கொலைகார ர்கள்,  சைக்கோபாத்களிடையே இது கொடூரமாக இருக்கும். இவர்கள் முழுமையாக அதிகாரத்தை தங்களது கையில் எடுத்துக்கொண்டு தங்களை எதிர்க்க முடியாத குழந்தைகளை பெரும்பாலும் குறியாக வைப்பார்கள். அவர்கள் எந்தளவு பயப்பட்டு அலறுகிறார்களோ அந்தளவு மகிழ்ச்சி கொலைகாரர்களுக்கு கிடைக்கும்.

எட்மண்ட் கெம்பர் தனது கொலை பாணியை கீழ்வருமாறு விவரித்துள்ளார். நான் முதலில் பெண்களை பிடித்து கொன்றுவிடுவேன். அப்போதுதான் அவர்களால் என்னை மறுக்க முடியாது. பிறகு அவர்களை பொம்மையாக்கி வைத்து என் போக்கிற்கு விளையாடுவேன். உயிருள்ள பொம்மையைப் போலவே இருப்பார்கள். 1950இல் எட்வர்ட் கெய்ன் என்பவர், புதைக்கப்பட்ட நடுவயது பிணங்களை வீட்டுக்கு எடுத்துவந்து வைத்துக்கொண்டு பேசி வந்திருக்கிறார். அவரை விசாரித்தபோது, அவர்கள் பொம்மைகளைப் போலத்தான் என பதில் சொல்லியிருக்கிறார். இவர் சைக்கோ, டெக்சாஸ் செயின்ஷா, சைலன்ஸ் ஆப் தி லேம்ப்ஸ் ஆகிய படங்களைப் பார்த்து குற்றங்களைப் பழகியவர்.

ஜெஃப்ரி டாமர், இந்த வகையில் ஏராளமான ஆண்களைக் கொன்றவர். நாளிதழ் ஒன்றில் பதினெட்டு வயதான ஒருவரின் படத்தைப் பார்த்து ஆர்வமாக அவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றார். உடலைப் பார்த்ததும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாத்ரூமுக்கு சென்று சுய இன்பம் அனுபவித்தார். டாமரின் நோக்கம், செக்ஸ் ஸோம்பி ஒன்றை தயாரிப்பதுதான். இதற்கான தயாரிப்பில் பலரும் கபாலம் உடைந்து இறந்துபோனார்கள். இவரைப்போலவே ராபர்ட் பெர்டெல்லா, ஆண்களை சித்திரவதை செய்து வல்லுறவு செய்து வந்தார். இவரும் ஆண்களை பாலுறவுக்கான பொம்மைகளாக்க விலங்குகளின் செல்களை கூட உடலில் செலுத்தி ஆராய்ந்து வந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் நீல்சன் என்பவும் இவரைப்போலவே தான் இரையாக பிடித்து கொல்பவர்களை பயத்தில் உறைய வைத்து கொல்ல நினைப்பவர்தான்.


ஃபெட்டிஷிசம்

இதற்கு பெண்களின் கால்கள் என அர்த்தம் கொள்ளலாம். இந்தவகையில் ஆண்கள், பெண்களை இரண்டாவது பொருளாகவே கருதுவார்கள். இவர்களுக்கு இன்பம் அளிக்க பெண்கள் அணியும் உள்ளாடை, மேலாடை, ஹைஹீல்ஸ் என சில பொருட்களே போதும். இப்பொருட்களை தொடுவது, தடவுவது என்பதே ஆண்களின் இன்பத்திற்கு போதுமானது. இதனை குறைபாடு என்று கூறலாம். மற்றபடி குற்றமாகவெல்லா்ம் கருத ஏதுமில்லை. ஆனால் தொடர் கொலைகாரர்கள் எழுபது சதவீதம் பேருக்கு பெட்டிஷிசம் பாதிப்பை இளம் வயதில் இருந்து வளர்ந்து வந்திருக்கிறது என்பதை உளவீயலாளர்கள் கூறியுள்ளனர். இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த குறைபாடு கொண்டவர்கள் தங்களால் கொல்லப்பட்டவர்களிடமிருந்து உள்ளாடை. உடல் பாகங்கள், அவர்களின் வாலட் என எதையாவது எடுத்துக்கொண்டு வருவார்கள். எதற்கு, அப்பொருட்களைப் பார்க்கும்போதெல்லாம் இறந்தவர்களின் நினைவும், அவர்களைக் கொன்றதும் நினைவுக்கும் வருமே? அந்த சந்தோஷத்தி்ற்காகத்தான்.


ஜெர்ரி ப்ரூடோஸ்

1939இல் பிறந்தவர் ஜெர்ரி. இவர் சிறுவயதில் பெண்களின் ஹைஹீல்ஸ் மேல் ஆர்வம் கொண்டவராக அதனை சேமித்து வைக்க நினைத்தார். ஆனால் அவரின் அம்மா, அதனை தூக்கி எறிந்ததோடு ஜெர்ரியையும் திட்டி அடித்து அப்படி செய்யக்கூடாது என்று சொன்னார். ஆனால் ஜெர்ரியால் தனது கற்பனைகளை கட்டி வைக்கமுடியவில்லை. சிறுவயதில் பெண்களின் அறைகளில் புகுந்து உள்ளாடைகளை திருடுவதோடு அவர்களின் செருப்புகளை திருடி வந்துவிடுவதுதான் ஹாபி. பின்னாளில் எலக்ட்ரீசியனாக மாறிய பிறகும்கூட தனது செயல்பாடுகளை மனைவியிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்தார். திருமணத்திற்கு முன்னர் பதினாறு வயதில் பெண் ஒருவரை தாக்கி மிரட்டிய வழக்கில் காவல்துறையிடம் சிக்கினார். இவரின் நிலையைப் பார்த்து மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சையில் தனது கற்பனைகளை தெளிவாக கூறினாலும் கூட மருத்துவர்கள் எப்படி அவரை வெளியே அனுமதித்தனர் என்று தெரியவில்லை.

தனது காரேஜில் பெண்களை கடத்தி வந்து அவர்களைக் கொன்று உடல் உறுப்புகளை வெட்டுவது அதனை புகைப்படம் எடுப்பது என பரவசமாக வேலை செய்து வந்தார். தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது கூட  ஒரு பெண்ணை மயக்கமாக்கி வல்லுறவு செய்துகொண்டிருந்தார் ஜெர்ரி எனபதை நம்ப முடிகிறதா? போலீசார் இவரைப் பற்றி சந்தேகப்பட்டு வந்தபோது தேவைப்படு்ம அனைத்து ஆதாரங்களும் காரேஜிலேயே கிடைத்துவிட்டது. கொலைகளுக்காக மூன்று ஆயுள்தண்டனை ஜெர்ரிக்கு விதிக்கப்பட்டது.

டிரான்ஸ்வெஸ்டிஸம்

ஆணை பெண்களின் உடையை அணியும் படி கட்டாயப்படுத்தி அவமானப்படுத்துவது. ஆண் குழ்தைகளுக்கு கூட சிறுவயதில் பெண்களைப் போல பூவைத்து பொட்டு வைத்து அழகு பார்ப்பது  உண்டு. ஆனால் விவரம் தெரிந்த வயதில் அப்படி செய்வது அவர்களின் மனதை பாதித்தால் என்னாகும்? சமூகம்தான் அதற்கான விலையைத் தரவேண்டும். இப்படி ஏராளமான உயிர்கள் பறிபோயுள்ளன.

தொடர் கொலைகாரர்களான சார்லஸ் மேன்சன், ஹென்றி லீ லூகாஸ் ஆகியோர் இப்படி பெண் உடைகளை அணிய வைத்து அவமானப்படுத்தப்பட்டவர்கள். மேன்சனை பள்ளிக்கே பெண்களின் உடைகளை அணிய வைத்து அனுப்பினார் அவரது சாடிச மாமா. லூகாசுக்கு அவரது அம்மா இதே விஷயத்தை செய்தார். இதைப்போலவே கரோல் கோல் என்பவருக்கும் பெண்களைப் போல உடை அணிவித்து சாடிச பார்ட்டிகளுக்கு தேநீர் பரிமாற அனுப்பி வைத்தனர் என குற்றங்களைப் பற்றி எழுதும் எழுத்தாளர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் கீழ்வரும் எடுத்துக்காட்டு சரியாக இருக்கும்.

ஹாடென் கிளார்க்

பிற குற்றவாளிகள் போல இவரது குடும்பம் வறுமையில் இல்லை ஆனால் பெற்றோர்கள் உருவாக்கிய மோசமான சூழ்நிலையில் சிக்குண்டு மோசமான கொலைகாரராக மாறினார் கிளார்க். இவரது அப்பா, வேதியியல் பொறியாளர். அம்மாவும் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் இவரது குழந்தைகள் நால்வரில் மூவர் வாழ்க்கை மதுவுக்கும் மோசமான பல்வேறு பழக்கங்களுக்கும் அடிமையாகி நாசமாக போக பெற்றோரின் வளர்ப்புமுறை தான் காரணம். இவர்களது ஒரே மகள் இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பிறர் மதுவுக்கு அடிமையானார்கள். கிளார்க்கை அவரது பெற்றோர் இருவரும் அவமானப்படுத்தியதோடு பெண்ணாகவே நடத்தினர். அவர்களுக்கு மனதில் என்ன பிரச்னையோ தெரியாது. ஆனால் கிளார்க்கின் வாழ்க்கை அடியோடு சிதைந்து போயிற்று.

பள்ளியில் படிக்கும்போது தன்னை கிண்டல் செய்யும் மாணவர்களி்ன் வீட்டின் முன் செல்லப்பிராணிகளைக் கொன்று அதன் தலைகளை மாட்டி்வைக்கும் பழக்கம் கிளார்க்குக்கு உண்டு. படிப்பதை விட நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் சுற்றுவதையே கிளார்க் விரும்பினார். இதனால் படிப்பு அவருக்கு உதவவில்லை. கிடைத்த மதிப்பெண்களை வைத்து ்சமையல் கலைஞராக விரும்பினார். அதற்கேற்ப அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனத்தில் சேர்ந்த படித்து பட்டம் பெற்றார். ஆனால் வேலை செய்வதற்கான மனநிலை கிளார்க்கிற்கு எபபோதும் இருந்தது கிடையாது. யாராவது திட்டினால் சமைக்கும் உணவில் சிறுநீர் கலந்துகொடுக்கும் அளவு விஷமத்தனம் கொண்டவராக இருந்தார். இதனால் நிறைய இடங்களில் வேலை கிடைத்தாலும் விரல்விட்டு எண்ணும் நாட்கள் மட்டுமே வேலையில் இருந்தார். சமையல் கலை நுணுக்கங்களை பெண்களை கொலை செய்வதில்தான் காட்டினார்.

பெண்களின் மீதான உடைகள் மீதான ஆர்வம் அவருக்கு குறையவே இல்லை. 1980இல் கப்பலில் வேலை கிடைத்தபோதும், பெண்களுக்கான உள்ளாடைகளை அணிய விரும்பினார். இதனால் கப்பலில் அடிக்கடி கிண்டல் செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் நடந்து வந்தது. பானனாய்டு ஸிசோபெரோனிக் அறிகுறிகள் கிளார்க்கின் மனநிலையில் தென்பட்டன. தனது மூத்த சகோதரர் ஜியோப்ரியின் வீட்டில் ஓராண்டு தங்கினார். அப்போதே தனது சொந்தக்கார சிறுமியின் முன்பு கர மைதுனம் செய்து வெளியேற்றப்பட்டார். அப்போதே எலிசாவை பார்க்க வந்த மிச்செல் டார் என்ற ஆறுவயது சிறுமியைக் கொன்று உடலுறவு கொண்டார். பிறகு உடலை பூங்கா அருகில் புதைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். மிச்செல் காணாமல் போனதற்கு காவல்துறை அச்சிறுமியின் தந்தையைக் காரணம் என்று சொல்லி ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்தது.

அப்போது கிளார்க்கின் மனநிலை இன்னும் மோசமான நிலைக்கு போய்க்கொண்டிருந்தது. கடையில் பெணணிடமிருந்து பொருட்களை திருடியது. வாடகை வீட்டுக்கு தீ வைத்தது, செல்லப்பிராணிகளை கொன்றது என பல புகார்களுக்கு சிறை சென்று வந்துகொண்டிருந்தார். 1992ஆம் ஆண்டு மேரிலேண்டில தோட்டக்காரராக வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது லாரா கல்லூரி பட்டதாரி பெண்ணைக் குறிவைத்தார். அவரது அறையில் இரவு புகுந்தவர் பெண் வேடத்தில் இருந்தார். தான்தான் லாரா என்று அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டியவர், அங்கேயே அப்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றார். பிறகு, அப்பெண்ணின் காதுமடலை அறுத்தெடுத்துக்கொண்டவர். பெண்ணை அப்படியே படுக்கை விரிப்போடு சுற்றி காரில் எடுத்துச்சென்று புதைத்துவிட்டார். போலீசார் கைரேகைகளை வைத்து கிளார்க்கைப் பிடித்து சிறையில் அடைத்தனர். ஆனால் மிச்செல் டாரை மட்டும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் கிளார்க்கின் ஒத்துழைப்பைக் கேட்டனர். அதற்கு கிளார்க், தனது பெண்களின் ஸ்கர்ட், லிப்ஸ்டிக், விக், பவுடர் ஆகியவற்றை வாங்கித் தந்தால் உதவுகிறேன் என்றார். இதில் அவருக்கு முப்பது ஆண்டுகள் சிறை கிடைத்தது.  

வாம்பயரிசம்

கோதிக் இலக்கியத்தில் நாட்டுப்புறக் கதைகளில் வாம்பயர் என்ற புனைவுப்பாத்திரம் உண்டு. பெண்களை காமத்தில் ஆழ்த்தி கழுத்தில் பற்களை பதித்து ரத்தம் குடித்துவிட்டு செல்வதுதான் இதன் பணி. பிராம்ஸோடகரின் டிராகுலா என்ற நாவல், உலகம் முழுக்க பிரசித்தமானது. இதில்தான் டிராகுலா என்றால் என்ன, அதன் தன்மை, அதனை எப்படி வீழ்த்துவது என விலாவரியாக விவரித்திருப்பார்கள். இதே தன்மையில் ஆண், பெண்களின் ரத்தத்தை குடிப்பது பாலியல் இன்பத்தை அளிக்கிறது என கூறியவர்கள்தான் தொடர் கொலைகார ர்கள், சைக்கோபாத் கூட்டம்.

வரலாற்றில் இப்படி ரத்தத்தை குடிப்பது, பாலுறுப்புகளை சிதைப்பது, குரல்வளைத்தண்டை கடித்து தின்பது என தினுசு தினுசான ஆட்கள் உண்டு.  பாலியல் இன்பத்திற்காக மெதுவாக கடித்து ரத்தத்தைக் குடிக்கலாம் என்று கூட சமூக பொறுப்பு கொண்ட வலைத்தளங்கள் பரிந்துரை செய்கின்றன. ஒரே விதி, உங்கள் கூட்டாளி இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும். கொலைகார ர்களைப் பொறுத்தவரை நான் கொஞ்சம் உன் ரத்த த்தை குடித்துக்கொள்கிறேன் என பர்மிஷன் கேட்டுக்கொண்டா இருப்பார்கள் ஈரச்சாக்கை போட்டு கோழியைப் பிடிப்பது போல பிடித்து கொன்று ர த்தத்தை குடித்துவிட்டு உடலை தூக்கி எறிந்துவிடுவார்கள். வெர்செனி இதுபோல இரண்டு பெண்களின் உடலை திறந்து ரத்தம் குடித்தவர்தான். 1878இல் இயுஸ்பியஸ் என்பவர், கறிக்கடை ரத்த த்தை பார்க்கும்போதெல்லாம் சன்னதம் வந்தது போல ரத்தவெறி கொள்வார். பிறகு என்ன கிடைக்கும் பெண்களை பிடித்து ரத்தம் குடித்துவிட்டு உடலை தூக்கி எறிவார். ஜோசப் வாச்சர் என்ற பிரெஞ்சுக் காரரும் ஆண்கள் பெண்கள் என யாரையும் விடாமல் ரஸ்னா ஜூஸை ஸ்ட்ரா போட்டு குடிப்பதுபோல ரத்தம் குடித்து வாழ்ந்தவர்தான். ரஷ்யாவை்ச் சேர்ந்தவர் ஆண்ட்ரேய் சிக்காடிலோ. கிடைத்த ஆட்களின் ரத்தத்தை குடித்ததோடு அவர்களின் பிறப்புறுப்பையும் அறுத்து உப்புக்கண்டம் போட்டு வைத்து தின்றார். இவருக்கு பைத்தியக்கார விலங்கு என்று பட்டப்பெயரையும் ஊடகங்கள் சூட்டின.  கீழேயுள்ளவரைப் படித்தால் ரத்தம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது உங்களுக்குப் புரியும்.

ரிச்சர்ட் சேஸ்

விலங்குகளின் ரத்தத்தை குடித்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதை உறுதியாக நம்பியவர். இதனால் இவரது கையில் சிக்கிய பறவை, முயல், பூனை, நாய் என அனைத்தையும் கலந்து கட்டி பழரசம் போல குடித்து வந்தார். இதற்காக மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் இவரது ரத்த வேட்கையை யாராலும் எந்த மருந்தாலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. எனவே பரிகாரமாக இவரை டிராகுலா என அழைக்கத்தொடங்கினர். வேறு எந்த பிரச்னையும் அவர் செய்யமாட்டார் என்றுதான் நினைத்தார்கள். ரிச்சர்ட் மெல்ல அப்டேட் ஆகத் தொடங்கினார்.

1977ஆம் ஆண்டு ரிச்சர்ட் முழு நிர்வாணமாக ஒரு இடத்தில் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இங்கே என்ன பண்றீங்க சார் என்று கேட்டால் பக்கத்தில் இருந்த பக்கெட்டில் தளும்ப தளும்ப ரத்தம் இருந்தது. அதனை சோதித்ததில் பசுவின் ரத்தம் என்று தெரிந்தது. காவல்துறையும் பைத்திய்க்காரன் என்று சொல்லி விட்டுவிட்டது. ஆனால் ரிச்சர்ட் விடவில்லை. அவரால் ஊரிலுள்ள பலரும் உயிரை விட்டார்கள். முதலில் எந்த காரணமும் இல்லாமல் ஆண் ஒருவரை தெருவில் சுட்டுக்கொன்றார். அடுத்து 1978ஆம் ஆண்டு இருபத்திரெண்டு வயது பெண்ணைச் சுட்டுக்கொன்று அவரின் ரத்தம் உடல் முழுக்க தோய்ந்துஇருக்கு்ம்படி அதிலேயே படுத்துக்கிடந்தார். பிறகு கப் ஒன்றை எடுத்து அவரின் ரத்தத்தை எடுத்து குடித்தார். அந்த பெண் கொலைசெய்யப்பட்டபோது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்.

காவல்துறையில் பிடிபட்டபோது ஆறு கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். விஷவாயு தண்டனை கொடுக்கப்பட்டாலும் அதிலிருந்து தப்பியவர், மன அழுத்த மாத்திரைகளை அதிகம் தின்று இறந்துகிடந்தார் என காவல்துறை பதிவுகள் சொல்லுகின்றன.



 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்