தசைகளுக்கு எப்போதும் பயிற்சி அவசியம்!

 

 

 

 Man, Naked, Male, Body, Muscles, Human, Health, Fitness

 

 

தசை அமைப்புகள்தான் எலும்புகளில் பொருந்தி நாம் உடலை அசைக்கவும் எழுந்து நிற்கவும் பல்வேறு வேலைகளை செய்யவும் உதவுகின்றன. வயிற்றுக்குள் உணவு செல்லவும், நுரையீரலுக்கு காற்று செல்லவும், ரத்தம் உடலெங்கும் செல்லவும் உதவுகின்றன. ஆனால் சரியான பயிற்சி இல்லாதபோது தசைகள் தங்கள் பலத்தை இழந்துவிடுகின்றன. புவியீர்ப்பு விசையும் தசைகளின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தன்மையை ஏற்படுத்துகின்றன.


ஒருவரின் உடல் எடையில் தசைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது.



விபத்துக்குள்ளாகி அல்லது நோயில் ஒருவர் படுத்த படுக்கையாகி மீண்டும் எழும்போது உடலில் வித்தியாசத்தை உணரலாம். அதாவது, உடல் நடக்கவும், நிற்கவும் தடுமாறும். இதற்குக் காரணம், தசைகளுக்கு சிறிது காலம் எந்த பயிற்சியும் கொடுக்காமல் இருப்பதே. இதனை தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் அதனை இழந்துவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். ஒருவர் வெய்ட் லிப்டிங் பயிற்சி செய்யும்போது அதில் 700 சிறு தசைகள் இணைகின்றன என்கின்றனர். உடல் பல்வேறு வேலைகளை செய்யும்போது அதில் தசைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.


கால்பந்து, ரக்பி விளையாடும் வீரர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்படி பயிற்சி செய்பவர்களே தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் பயிற்சி செய்யாதபோது அவர்களின் தசைகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன. எனவே திரும்ப விளையாட்டில் ஈடுபட அதிக பயிற்சிகள் தேவைப்படுகின்றன. புற்றுநோய் ஏற்பட்டு படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகளை இதற்கு உதாரணம் காட்டுகின்றன. இவர்களின் தசைகள் எளிதில் பயனின்றி போகின்றன.


பூமியில் ஈர்ப்புவிசை இருப்பதால், உடற்பயிற்சி என்பது குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறது. ஆனால் விண்வெளியில் ஒருவர் இரண்டு மணிநேரம் பயிற்சி செய்வது கட்டாயம். அப்போதுதான் ஈர்ப்பு விசை இல்லாதநிலையில் அவர்களால் நிலையை சமாளிக்க முடியும். குறிப்பிட்ட வகை கயிறுகளை பயன்படுத்தி உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் உடற்பயிற்சி செய்யாதபோது, பூமிக்கு திரும்பியவர்களால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி உடற்பயிற்சி செய்தாலும் கூட விண்வெளிக்கு சென்று திரும்புபவர்களுக்கு ்உடலின் தசை அளவில் பத்து சதவீதம் குறைந்துவிடுகிறது என்பதே உண்மை.


உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகளிலுள்ள புரதம் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் அவற்றின் பலம் இழக்கப்படுவதிலிருந்து எளிதாக காக்க முடிகிறது. விண்வெளி வீர ர்கள் இதனால் தங்களின் தசைகளின் எடையை இழக்காமல் இருக்க தினசரி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பயிற்சி செய்கின்றனர். அவர்கள் அறிவியல் சோதனைகளை செய்கிறார்கள். அதற்கான உடல் தகுதியோடு இருக்க மெனக்கெடுகிறார்கள் என்று புரிந்துகொள்வது நல்லது.


சயின்ஸ்போகஸ்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்