மாற்றுப்பாலினத்தவரை மனிதர்களாக காட்ட திரைப்படங்கள் தவறுகின்றன!

 

 

 

 

 

 

 

 

7 Movies That Never Saw A Release Due To Censor Board ...

மாற்றுப்பாலினத்தவர்களுக்கான மாதம் இது. முதலில் மாற்றுப்பாலினத்தவர்களை மோசமாக திரைப்படங்கள் சித்தரித்தாலும் கூட இப்போது ஓடிடி தளங்களில் கூட தைரியமாக ஓரினச்சேர்க்கை பற்றிய தொடர்களை தயாரித்து பல்வேறு மொழிகளில் வெளியிடும் அளவு துணிச்சலான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். தொடர்கள் மட்டுமல்லாது நிறைய படங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. கோவா படத்தில் வெங்கட்பிரபு, ஓரினச்சேர்க்கையாளர்களை முக்கியமான பாத்திரங்களாகவே காண்பித்திருந்தார். நகைச்சுவைப்படமாக இருந்தாலும் இப்படியான முயற்சிகள் முக்கியமானவை.

Get ready for India's FIRST SAME-SEX web series 'The ...

ஆண்டுதோறும் மும்பையில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான திரைப்படங்களை திரையிட்டு வருகிறார்கள். இதில் 30 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த திரைப்படங்களை இந்த விழாவில் தவிர்த்து வேறு எங்கும் பார்க்க முடியாது. என்ன காரணம் என்றால் இந்தியாவிலுள்ள சென்சார் அமைப்புகள் இத்தகைய படங்களை திரையிட அனுமதி தருவதில்லை. நான் மாற்றுப்பாலினத்தவர்களைப் பற்றிய படங்களை உருவாக்கியபோது, அதனை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை என்றார் ஶ்ரீதர் ரங்கையன். இவர் 2002இல் உருவாக்கிய பிங்க் மிரர் என்ற படத்தை தியேட்டர்களில் திரையிட அரசு அனுமதிக்கவில்லை. எனவே திரைப்பட விழாக்களில் மட்டுமே வலம் வந்தது. பிறகு 2016இல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதனை தனது தளத்தில் வெளியிட்டது. ஒருவகையில் இதனால் இயக்குநர் ரங்கையனுக்கு மகிழ்ச்சி கிடைத்தது.


நெட்பிளிக்ஸ் இந்தியாவில் செயல்படத்தொடங்கிய பிறகுதான் படைப்பாளிகளின் புதிய படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. சேக்கர்ட் கேம்ஸ் முதல் செலக்ஷன் டே வரையிலான பல்வேறு மாற்றுப்பாலினத்தவர்களைக் கொண்ட தொடர்கள் இதில் வெளியிடப்பட்டன. இந்த சுதந்திரம் நேரடியான டிவி, இணையத்திலோ கூட முன்னர் கிடைக்கவில்லை. 2018ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவர்களுக்கான தடை சட்டம் கைவிடப்பட்ட பிறகு, நிறைய மாற்றுப்பாலினத்தவர்களுக்கான படங்கள் வெளிவரத் தொடங்கின. இதற்கான கதைகளும் ஆர்வமுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன.


பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட மாற்றுப்பாலினத்தவர்களை படங்களில் கொடூரமாக சித்தரித்து வந்தனர். இப்போது கொஞ்சம் நிலைமை மாறியிருக்கிறது என்று கூறலாம் என்கிறார் மௌலி. இவர் குயிர் சென்னை கிரானிக்கில்ஸ் எனும் பதிப்பகத்தை நடத்திவருகிறார். இதனை மாறுபட்டு அணுகுகிறார் பென்சில்வேனியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழக பேராசிரியர் கார்த்திக் நாயர். மாற்றுப்பாலினத்தவர் என்பதை படங்களில் பயன்படுத்துவது ரகசியமான ட்விஸ்ட், அதிர்ச்சிகரமான செய்தி என்பதாகவே காட்டுகிறார்கள். தொடர்ச்சியாக படங்களில் இப்பயன்பாடு அதிகரித்து ரருகிறது என்றார் கார்த்திக். தன்னை வெளிப்படையான மாற்றுப்பாலினத்தவராக அடையாளம் காட்டிக்கொள்பவர்களும் குறைவாகவே உள்ளனர் என்று இவர் கூறுகிறார். அதாவது, திரைப்பட இயக்குநர், நடிகர் என்ற பின்புலத்தில் இதனை கார்த்திக் கூறுகிறார்.

மாற்றுப்பாலினத்தவர் பற்றி ஆலங்கிரிதா ஶ்ரீவஸ்தவா மேட் இன் ஹெவன், பாம்பே பேகம்ஸ், நீரஜ் கேவான் கீலி புச்சி எனும் படங்களில் தீவிரமான தன்மையில் அணுகியிருந்தனர். மௌலி இதில் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறார். மாற்றுப்பாலினத்தவரை பாத்திரங்களாக கதைகளில் பயன்படுத்தினாலும் குறைந்தபட்சம் அவர்களை மனிதர்களாக பார்க்கும்படியான கோணம் தவறவிடப்படுகிறது. குறிப்பாக தமிழில் பாவக்கதைகள் என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் கூட லெஸ்பியன் உறவு கேரிகேச்சர் போன்ற தன்மையில்தான் காட்டப்பட்டது. அதில் முழுமை கிடையாது. இதனைப் பார்ப்பவர் அதனை புரிந்துகொள்ளமுடியாது என்றார்.


நாம் இன்னும் ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், திருநங்கை என மேல்தட்டு வர்க்க பார்வையாளர்களுக்காகவே படங்களை உருவாக்குகிறோம். பிற வர்க்க மக்கள் எங்கே போனார்கள்? அவர்களின் வாழ்க்கையும் உள்ளே வரும்படி படங்களை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மாற்றுப்பாலினத்தவர்களை உண்மையாகவே நாம் கவனப்படுத்தமுடியும் என்றார் ரங்கையன்.


சில மாற்றுப்பாலினத்தவரின் படங்கள்


ஆதத்(2020)


இந்தி, உருது குறும்படம். யூட்யூபில் பார்க்கலாம். ஒரு முஸ்லீம் இளைஞர், பாலியல் தேவைக்காக தொழிலாளி ஒருவரை அணுகுகிறார். இதுதான் படத்தின் மையப்பொருள்.


ரோமில் அண்ட் ஜூலியட் 2017


நவீனகாலத்தின் ரோமியோ ஜூலியட் என்று அழைக்கப்படும் டிவி தொடர் இது. இப்போது ஆல்ட் பாலாஜியின் உதவியால் எம்எக்ஸ் பிளேயரில் பார்க்கலாம். சிறந்த நடிப்பு, தயாரிப்பு நிறுவனத்தின் செலவு ஆகியவற்றால் தொடர் முக்கியமானதாக மாறியிருக்கிறது.


தி அதர் லவ் ஸ்டோரி


யூட்யூபில் கிடைக்கும் கன்னட மொழி படம். பயப்படாதீர்கள். ஆங்கிமொழி உதவியுடன் கிடைக்கிறது. பெங்களூருவில் உள்ள இரண்டு பெண்கள் பாலியல்ரீதியாக தங்களைத் தாங்களே உணர்வதுதான் படத்தின் மையம்.


இந்தியா டுடே


பிரதீப் நாயர்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்