சைக்கோபாத் என்றால் என்ன? அதனை சோதித்து அறியும் சோதனைகள் இதோ!

 

 

 

 

 

Hybrid human faces: Because creepy images never go out of ...

 

 

 

 

சைக்கோபாத் என்றால் என்ன என மருத்துவர்கள் பலருக்குமே தெரியாது. எதனால் இப்படி கூறுகிறார்கள் எ்ன்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.தொடக்கத்தில் பதற்றத்தின் உடைப்பு என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். உண்மையில் ஒருவரை சைக்கோபாத் என்று கூறுவதற்கு எந்த சோதனைகளும் இல்லை என்று தெரியவந்தது. இதனை ஆளுமை பிறழ்வு, சமூக ஆளுமை பிறழ்வு என்று கூறலாம் ஆனால் இதனை முடிவாக கூற முடியாது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.


டையக்னாஸ்டிக் அண்ட் ஸ்டாடிஸ்டிகல் மானுவல் ஆப் மென்டல் டிஸார்ட ர் எனும் நூல் உள்ளது. இதைத்தான் சுருக்கமாக டிஎஎஸ்எம் என மருத்துவ வட்டாரத்தில் குறிப்பிடுகின்றனர். இதில் உளவியல் சார்ந்த ஏராளமான குறைபாடுகளை வகைப்படுத்தியுள்ளனர். அனோரெக்சியா, ஸிஸோபெரேனியா ஆகிய நோய்களைக் குறிப்பிட்டாலும் சைக்கோபதிக்கு இதில் இடமில்லை. ஆன்டிசோஷியல் பர்சனாலிட்டி டிஸார்டர் என்பதை வேண்டுமானால் சில விதிகளை வைத்து வரையறுக்கலாம். சமூக விதிகளுக்கு உட்பட மறுப்பது, சுயநலம், எரிச்சல் அடைவது, ஆக்ரோஷ கோபம் கொள்வது, பிறரின் உணர்ச்சிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என சில வரையறைகளை கூறுகிறார்கள். இதற்கு வெளியே மருத்துவர்கள், உளவியலாளர்கள் பல்வேறு கருத்துகளை கூறினாலும் இவை எவையும் சைக்கோபாத் என்பதை துல்லியமாக குறிக்கவில்லை.


கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைந்துவிட்டது, நின்றுவிட்டது. இதனால் என்னவாகும்? உங்களுக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டது. அதற்கான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள் என்று அட்டையைக் கையில் கொடுத்து மாத்திரைக்கும் ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பார்கள். இப்படி பல்வேறு வியாதிகளுக்கு சில அறிகுறிகளை வைத்து சோதனை செய்து உறுதி செய்துவிடலாம். ஆனால் மனநலனைப் பொறுத்தவரை இது கடினமானது. மனதில் ஏற்படும் பல்வேறு விஷயங்களை நோயாகவே பலரும் நினைப்பதில்லை. மன அழுத்தம் கூடிய நிலையில் கூட ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் அதுவே வாழ்க்கையில், வேலையில் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் நினைப்பதில்லை.


ஒருவரின் உளவியல் பாதிப்பை அறிய போசிட்ரான் எமிஷன் டோமோகிராபி, பங்க்‌ஷனல் மேக்னட்டிக் ரீசனபிள் இமேஜிங் எனும் இரு சோதனைகள் உள்ளன. மரபணு, பழக்கவழக்கங்கள், சைக்கோமெட்ரிக் டெஸ்டுகள் மேலும் பல்வேறு தகவல்களை ஒன்றாக சேர்த்தால் ஒருவரின் உளவியல் சமாச்சாரங்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். இதை அடையாளம் காண்பதை ஸ்பெக்ட்ரம் என்கிறார்கள். இதில்தான் ஒருவருக்கு் ஏற்பட்டிருக்கும் உளவியல் குறைபாடு தொடக்கநிலை, நடுத்தரம், முதிர்ச்சியான நிலை என மூன்று நிலைகளில் உள்ளதை உறுதிசெய்யமுடியும்.


சைக்கோபதியை குறைபாடா, நோயா என்று இன்னும் கூட யாரும் இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுவாக ஒருவரின் உளவியலை சைக்கோபதி செக்லிஸ்ட் ரிவைஸ்டு எனும் சைக்கோபாத் டெஸ்ட் அல்லது ஹரேஸ் செக்லிஸ்ட் பயன்படுத்தி சோதிக்கலாம். கனடாவைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் ராபர்ட் ஹரே உருவாக்கி மேம்படுத்தினார். இதில் உள்ள கேள்விகளுக்கு 0,1,2 என மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தி டெக்சாஸ் செயின்ஷா மசாக்ரே, அமெரிக்கன் சைக்கோ ஆகிய படங்களில் வரும் உளவியல் பாதிப்பு கொண்ட பாத்திரங்கள் இயல்பு நிலைக்கு மிகவும் தூரத்தில் உள்ளவர்கள். இவர்கள் உளவியல் பாதிப்பு கொண்டவர்களை குறிப்பாக சைக்கோபாத் எனும் வரையறைக்குள் வருபவர்களை காட்டவில்லை என்று கூறலாம். இதேவேளையில் குட்ஃபெல்லாஸ், ப்ளூவெல்வெட் ஆகிய படங்களில் வரும் நாயகர்கள் வரையறைக்குள் வரும்படியான ஆட்கள். சாதாரணமாக தெருவில் நீங்கள் பார்க்கும் மனிதர்களாகவே இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் நெருப்பு குமுறிக்கொண்டிருக்கும். ஆனாலும் நேரடியான உடல்ரீதீயான வன்முறையாளர்களாக இருக்க மாட்டார்கள்.






கருத்துகள்