நான் கடினமாக உழைக்கிறேன் என்று கூற விரும்பியதில்லை! - கிரிக்கெட் வீர ர் ரவீந்திர ஜடேஜா

 

 

 

 


 

ரவீந்திர ஜடேஜா


கிரிக்கெட் வீர ர்



முன்னர் நீங்கள் தேர்வு செய்யும் பந்துகள், அடிக்கும் முறை விமர்சனத்திற்கு உள்ளானது. கேப்டன் தோனியே இதனை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும ன்று கூறியிருந்தார். 2015ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பவுன்சர்களை எதிர்கொண்டு ரன்களை சேகரிப்பது பற்றி இப்படி பேசப்பட்டது. இப்போது நீங்கள் முன்னேறியிருக்கிறீர்களா?



முதலில் பந்துகளை எதிர்கொண்டு அடிப்பது பற்றி இரண்டு வித கருத்துகள் இருந்தன. ஷார்ட் பால்களையும் பவுன்சர்களையும் ஷாட் அடிக்கலாமா என்பதை யோசித்துக்கொண்டே இருந்தேன். பின்னர், பவுன்சர்களை எதிர்கொண்டு சிக்ஸ் அடிக்கத் தொடங்கியதும் மனதில் நம்பிக்கை பிறக்கத் தொடங்கிவிட்டது. ரன்களையும் சேகரிக்கத் தொடங்கிவிட்டேன்.


தற்போதைக்கு உங்கள் அளவுக்கு வேகமாக பீல்டிங் செய்து ரன் அவுட் செய்யும்வீரர் உலகில் யாருமே இல்லை. உங்களது பீல்டிங் பற்றிய சீக்ரெட்டை சொல்லுங்கள்.


இதற்கு பதிலை என் அப்பாதான் சொல்ல வேண்டும். அவரின் ஜீன்தான் இதற்கு காரணமாக இருக்கவேண்டும். பதிமூன்று ஆண்டுகளாக தோள்பட்டைக்கு பயிற்சிகளை செய்து வருகிறேன். ஜிம்முக்கு சென்று வருகிறேன். கிரிக்கெட்டில் முதல் மூன்று ஆண்டுகளில் பீல்டிங் மட்டுமே செய்து வந்தேன். நன்றாக ஓடினால்தான் பேட்டிங் செய்ய முடியும் என எனது பயிற்சியாளர் மகேந்திர சிங் சௌகான் கூறினார். என்னைப் பற்றிய அதிக பாராட்டுகளை அவர் இதுவரை கூறவில்லை. ஆனாலும் அவர் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்.


பொதுவாக வீரர்களுக்கு வயதாகும்போது அவர்களின் பந்துவீச்சில் அந்த பலவீனம் தென்படும். இத்தனை ஆண்டுகாலத்தில் உங்களது பந்துவீச்சு மெருகேறி வருகிறதே எப்படி?


நான் பொதுவாக ஊடகங்களில் நான் கடினமாக உழைக்கிறேன் என்று கூறுவதில்லை. அப்படி பேசுவது எனக்கு பிடிக்காது. நான் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை இடுகிறேன். குதிரைகளில் சவாரி செல்வது பிடிக்கும். அதேபோல விளையாட்டு என்று வரும்போது அதற்கான உழைப்பைக் கொடுக்கிறேன. தோள்பட்டை எனக்கு ஒத்துழைக்கும்வரை கிரிக்கெட் விளையாடுவே்ன்.


நீங்கள் பயிற்சி பெறும்போது உங்களுக்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையில் சிறுவனை நிற்க வைப்பீர்கள் என்று கூறப்படுகிறதே?


காற்றில் பந்து எப்படி சுழல வேண்டும் என்ற பயிற்சிக்காக அப்படி செய்யப்பட்டது. தன்னை பந்து தாக்க வரும்போது அதனை எப்படி பிடிக்கவேண்டுமென சிறுவனுக்கு தெரியும்.


பீல்டிங்கிற்குகான பயிற்சியை எப்படி வடிவமைத்துக் கொள்கிறீர்கள்?


பீல்டிங் பயிற்சியைப் பொறுத்தவரை நான் அதனை மெதுவாக இருக்கும்படிதான் பயிற்சியாளர் ஶ்ரீதரிடம் கூறியிருக்கிறேன். காரணம் போட்டியில் காயமடைவதை விட பயிற்சியில் அதிக காயங்களை அடைந்திருக்கிறேன். இதன் காரணமாக, போட்டியில் விளையாடும்போது, ஆற்றல் இல்லாமல் தடுமாறியிருக்கிறேன். பயிற்சியில் கேட்சுகளை பிடிக்கும்போது மெதுவான வேகத்தில் பிடிப்பேன். ஆனால் போட்டியில் அதனை வேகமாக மாற்றிக்கொள்வேன்.


திருமணம் உங்களை எப்படி மாற்றியிருக்கிறது?


நிச்சயமாக நிறைய பொறுப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டில் இருக்கும்போது என் மகளைப் பார்த்துக்கொள்வதோடு, வீடு தொடர்பான வேலைகளையும் செய்கிறேன்.


இந்திய அணியில் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?


பத்தொன்பது வயதுக்குட்பட்ட அணியிலிருந்து வந்தவர்கள்தானே அனைவரும். எனவே, நாங்கள் அனைவருமே நண்பர்கள்தான். இப்போது அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. எனவே, முன்பு போலவே சந்திப்பது கடினமாக இருக்கிறது. மற்றபடி விளையாட்டு நடைபெறும்போது நாங்கள் அனைவருமே குடும்பங்களோடுதான் செல்கிறோம்.



இந்தியன் எக்ஸ்பிரஸ்



கருத்துகள்