லட்சத்தீவை சுற்றுலாதலமாக மாற்றுவது சூழலை அழிக்கும் முயற்சி! - ரோகன் ஆர்தர், கடல் சூழலியலாளர்

 

 

 

 

 

 

 

 

Underwater Expedition: Team Members
L-R(5th person rogan)

 

 

மாலத்தீவு வளர்ச்சி மாடல் லட்சத்தீவுகளை அழித்துவிடும்


ரோகன் ஆர்தர்


கடல் உயிரியலாளர்


பருவச்சூழல் பாதுகாப்பு என வரும்போது லட்சத்தீவுகள் பற்றி ஏன் அதிகம் பேசுகிறார்கள்?


அப்படியென்றால் நான் உங்களுக்கு பவளப்பாறை எப்படி உருவாகிறது என விளக்கவேண்டும். கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள காடுகள்தான் பல்வேறு புயல்களையும், அலைகளையும் மட்டுப்படுத்துகின்றன. இங்குள்ள கடல்பகுதியில் பவளப்பாறைகள் தானே வளருகின்றன. இவை வட்டவடிவில் இங்கு உருவாகி வளருகின்றன. இங்கு தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளால் பவளப்பாறைகளின் வளர்ச்சி தடைபட்டு, தானே பாதிப்பை சரி செய்யும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த 1998ஆம் ஆண்டு தொடங்கி ஆழமாகி வருகிறது. ஆய்வுகள் மூலம் அங்கு ஏற்படும் பாதிப்புகளை அடையாளம் கண்டு வருகிறோம். லட்சத்தீவுகளை சுற்றுலாவிற்கு ஏற்றபடி மாற்றினால் இயற்கைச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் நடைபெறும்.



இங்குள்ள கலாசாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான தொடர்பு எப்படியிருக்கிறது?


இங்குள்ள மக்கள் சிறப்பான கல்வி கற்றவர்கள். அமைதியானவர்கள். சூழலைக் காக்கும் அக்கறை கொண்டவர்கள். அரசின் திட்டங்கள் இங்கு அமலானால் தீவு மக்களுக்கானதாக இருக்காது. வணிகர்களின் கைகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. இது எங்கு சென்று முடியும் என்று யோசிக்கவே அச்சமாக உள்ளது.


லட்சத்தீவுக்கு நீங்கள் எப்போது சென்றீர்கள்?


1996ஆம் ஆண்டு நான் லட்சத்தீவுக்கு சென்றேன். அதற்கு பிறகு ஆண்டுதோறும் அங்கு நான் செல்லத் தொடங்கிவிட்டேன். தீவுகளின் சொர்க்கம் என்று இந்த தீவை நீங்கள் சொல்லலாம். நான் கடல் உயிரியாளர் என்பதால் எனது ஆராய்ச்சிக்கு இந்த தீவு ஏற்றதாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக நான் வெப்பமயமாதல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இங்குள்ள மக்களும் இனிமையாக பழக கூடியவர்கள். எதிர்காலத்தில் இந்த தீவுக்கு என்னாகுமோ என்று பயமாக உள்ளது.


தீவை நிர்வாகம் செய்பவர்கள் ஏராளமான அடிப்படைத் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். இவை எப்படி தீவை பாதிக்கும் என நினைக்கிறீர்கள்?


மாலத்தீவுக்கு சுற்றுலாவுக்கான மேம்பாட்டுத்திட்டம் சரியாக இருக்கலாம். மாலத்தீவில் உள்ள மக்கள்தொகைக்கு அதனை அப்படி திட்டங்கள் போட்டு மாற்றுவது சரியாக இருக்கலாம். ஆனால் லட்சத்தீவுக்கு இது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. உள்ளூர் மக்களுக்கு மாலத்தீவுகளில் முன்னுரிமை அளிப்பதில்லை. லட்சத்தீவுகளிலும் மீன் பிடிப்பது இப்போதுதான் தொடங்கியுள்ளது. மேலும் இங்கு சுற்றுலாவை மையப்படுத்தி அழுத்தம் கொடுப்பது சுற்றுச்சூழலை மேலும் மோசமாக்கும் என்றே தோன்றுகிறது.



டைம்ஸ் ஆப் இந்தியா

கேடகி தேசாய்



கருத்துகள்