பெண்ணியம் காக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்! - பெண்களுக்காக ஆலோசனை தரும் உயிரா தமி்ழ் குழு
பெண்களுக்காக கொடி பிடிக்கும் ஆண்!
இன்ஸ்டாகிராமில் உயிரா தமிழ் எனும் பக்கத்தை திறந்தால் முழுக்க பெண்களுக்கு ஆதரவான வாசகங்கள் தென்படுகின்றன. கெட்டப்பெண் என்று எப்படி பெண்களை வரையறை செய்கிறார்கள் என்பது முதல் இணையத்தில் பெண்களுக்கு லைக் போட்டு காதலிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் கோளாறுகள் வரை புட்டு வைக்கிறார் மனிதர். யார் இவர்? குடிமைத் தேர்வுகளுக்காக படித்து வருபவர், பெண்களுக்கான உரிமைகள், சிக்கல்கள், சமூகம் எப்படி அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை எளிதாக சிறு வாக்கியங்களில் பேசி வருகிறார். நான் ஒரு ஆண். பெண்ணியத்திற்கு வரையறை சொல்லுவதற்காக இதனை செய்யவில்லை. நான் இந்த செயல்பாட்டில் எனது அறியாமையைத்தான் முன் வைக்கிறேன். அதில்தான் கற்றும் கொள்கிறேன் என்று பேகிறார் ஜீவ சரவணன்.
விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்தவர் சென்னைக்கு குடியேறி இப்போது சி்ந்தனையிலும் மாற்றத்தை உருவாக்கிவருகிறார். இவரது பக்கத்தைப் பார்த்து பல பெண்கள் தங்களது வாழ்க்கை சிக்கல்களுக்கும் தீர்வு தேடி வருகின்றனர். இப்படி பலரும் இணைந்து ஒரு குழுவே உருவாகியிருக்கிறது. இதனை வழிநடத்தி சாதி மறுப்பு திருமணங்களை ஜீவ சரவணன் செய்து வைத்திருக்கிறார். மனநலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள், குடும்ப வன்முறை சார்ந்தும் பல்வேறு தீர்வுகளை இவரது பக்கங்களில் பெண்கள் பகி்ர்கின்றனர்.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் மாற்றுப்பாலினத்தவர்கள் மற்றும் பெண்களுக்கான பக்கமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொண்டு மனரீதியாக உடல் ரீதியாக உள்ள சிக்கல்களை பேச சரவணனுக்கும் நிறைய காலம் தேவைப்பட்டிருக்கிறது. அவரது நோக்கம், பெண்களின் மாதவிலக்கு பற்றி ஆண்களும் புரிந்துகொண்டு பேசவேண்டும் என்பதுதான். பிரச்னையை அனைத்து மக்களும் கவனிக்கும்படி பேசுவதற்கான இடமாக இன்ஸ்டாகிராம் பக்கம் அமைந்துள்ளது. இவரது அக்காவிற்கும் சாதி மறுப்பு திருமணத்தை சரவணன் நடத்தி வைத்துள்ளார். இதற்கு இருதரப்பு குடும்பங்களிலும் இவரே பேசியுள்ளார்.
கிராமத்தில் இருந்திருந்தால் எனது சாதி பெருமையையும் பெண்கள் குடும்ப சொத்து என்பதையும்தான் ஏற்றுக்கொண்டிருப்பேன். கல்வியும், பல்வேறு வகை மக்களை சந்திக்கும் நகரமும் என்னை மாற்றியுள்ளது. பெண்களை சாதிக்கும் பெண்கள், சாதாரண பெண்கள் என்று நான் பார்க்கவில்லை. அனைவருக்கும் பெண்ணியம் என்பது தெரிய வேண்டும். அனைத்து பெண்களையும் உள்ளடக்கித்தான் மாற்றம் என்பதை உருவாக்க முடியும். ஆடை அணிவது, சாப்பிடுவது, அலுவலகத்தில் சமமான சம்பளம் ஆகியவற்றை பெண்களுக்கு அனைவரும் வழங்க முன்வருவதுதான் மாற்றத்தின் சரியான வழி என்றார். ஜீவ சரவணன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கனல்மொழி கபிலன்
கருத்துகள்
கருத்துரையிடுக