செடி, கொடிகளுக்கு காவி வண்ணம் பூசும் புதிய சட்டங்கள்! - லட்சத்தீவு மக்களுக்கான அடடே சட்டங்கள்!

 

 

 

 

 

 

"It will destroy the livelihoods of the people of ...

 

 

 

 

லட்சத்தீவுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி அதன் நிர்வாகி பிரபுல் கே படேல் பல்வேறு சட்டங்களை உடனே அமல்படுத்தியுள்ளார். இதெல்லாம் எதற்கு என பார்த்தவுடனே படிக்கும் யாருக்கும் தெரிந்துவிடும் குடுமிகளை கொண்ட திட்டங்கள் அவை. ..


தீவில் முறையான சான்றிதழ் இல்லாமல் யாரும் பசுக்களை கொன்று சமைத்து சாப்பிடக்கூடாது. மாட்டுக்கறியை விற்பதும் குற்றம் என அறிவிக்கப்படுகிறது. மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓராண்டிற்கு மேல் சிறைத்தண்டனையும் ஏற்பாடாகியிருக்கிறது. சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாற்ற இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.


இதற்கு எதிராக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் அனுமதி பெறாமல் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என கருத்து கூறியுள்ளனர்.


இரண்டே குழந்தைதான்


2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டப்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் யாரு்ம் பஞ்சாயத்து உறுப்பினராக முடியாது. இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உடனே அவர்களை பதவியில் இருந்து விலக்க முடியாது என்று சட்டம் ஆறுதல் சொல்லியிருக்கிறது. சட்டத்தைப் பார்த்தாலே முஸ்லீம்களை ஓரம்கட்ட கொண்டு வந்த சட்டம் என சொல்லிவிடலாம்.


இதை எதிர்த்து என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் கொடி பிடித்துள்ளன.



மதுபான உல்லாசம்!


இனி ரிசார்டுகளில் தங்கியுள்ள சுற்றுலாவாசிகளுக்கு மதுபானம் தாராளமாக கிடைக்கும். ஆனால் உள்ளூர்வாசிகளுக்கு விற்னை கிடையாதாம். இதற்கு முன்னால் மதுபானங்கள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. சுற்றுலாவாசிகளுக்கு மட்டும் மது என்றால் சட்டவிரோத மது விற்பனை பெருகுமே என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்புறம் எதுக்கு இந்த வினோதமான சட்டம்? அவளை நீ கட்டுனா என்ன நா கட்டுனா என்ன? அவ குடும்பம் மொத்தமும் நாசமாக போகணும் என்ற எண்ணம்தான்.


நிலம் கையகப்படுத்துதல்


லட்சத்தீவில் உள்ள நிலங்களை பெருநிறுவனங்களுக்காக விற்கும் திட்டம் இது. இந்தவகையில் அரசே தரகு வேலை பார்த்து நிலத்தை நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுத்துவிடும். இங்கு வாழும் மக்கள் அரசு அவர்களின் கருத்தை கேட்காமல் சட்டத்தை உருவாக்கியுள்ளது என போராடத்தொடங்கியுள்ளனர்.


குண்டர்கள் சட்டம்


மேலே சொன்ன அரசு சட்டங்களை எதிர்த்து யார் பேசினாலும் சரி போராடினாலும் அல்லது சுண்டு விரலை உயர்த்தினாலும் அவர்களை புட்டத்திலேயே மிதித்து சிறையில் தூக்கிபோட இந்த சட்டம் உதவும். இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை இந்த சட்டம் தடுக்கும் என்று கூறுகிறது. யார் தேசத்திற்கு விரோதமாக செயல்பட்டாலும் உடனே சிறையில் தூக்கிப்போட்டுவிடலாம். ஆறுமாதம் முதல் ஓராண்டு வரை இப்படி கைதானவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டியதில்லை. அதுவரை அவர்கள் உயிரோடு இருந்தால் நீதிமன்றத்திற்கு வருவார்கள். இல்லையெனில் மோட்சதீபம் ஏற்றவேண்டியதுதான். அதற்கான வாய்ப்பை அரசு கைதானவர்களின் பெற்றோர்களுக்கு மனமுவந்து வழங்குகிறது.

IE



கருத்துகள்