வேலை சார்ந்த மூடநம்பிக்கைகளை ஒழித்துக்கட்டி வெற்றி பெறுவது எப்படி?
ரீவொர்க் 37 சிக்னல்ஸ் நிறுவனர்கள் சுயமுன்னேற்ற நூல் ஒரு தொழிலை எப்படி நடத்துவது, அதற்கான தகுதிகள், விளம்பரம் செய்வது, வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது என ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் சுவாரசியமாக கூறியிருக்கிற நூல்தான் ரீவொர்க். நூலில் நிறைய மூடநம்பிக்கைகளை உடைத்து எறிந்திருக்கிறார்கள். பொதுவாக நம்பும் பழக்க வழக்கங்கள்தான் அவை. குறிப்பாக, நிறுவனத்தை பெரிய நிறுவனமாக்கவேண்டும் என்ற கருத்து. அப்படி செய்யும்போது என்னென்ன பிரச்னைகளை வருகிறது என சுருக்கமாக விவரித்த பாங்கு அருமை. அடுத்து, திட்டமிடுதல். அப்படி திட்டமிடுதல் கடந்த காலத்தில்தான் இருக்கும். நடைமுறைக்கு எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தீர்க்க உதவாது என அழகாக சுருக்கமாக விளக்கியிருக்கிறார்கள். மென்பொருளை உருவாக்கும்போது உணர்ந்த அனுபவங்களையே நூலாக எழுதியிருக்கிறார்கள். நூல்களை எழுத வேண்டுமென எழுதவில்லை என்பது இன்னும் ஆச்சரியம் தருகிறது. இதுபற்றி அவர்களே தனி அத்தியாயம் ஒன்றை எழுதி விளக்கியுள்ளனர். வாய்ப்பு கிடைப்போர் படியுங்கள். சுவாரசியமாக இருக்கும். பொதுவாக தொழில் சார்ந்த அறிவுரைகளை படித்தவர்கள், இந்த நூலை ...