சாதிக்க நல்லநேரம் பார்க்காதீர்கள்!
டொனால்ட் ஃபிஷர்
தொழில் தொடங்கலாமா என்று தன் மனைவியிடம் ஆலோசனை கேட்டார். எந்த அனுபவமும் இல்லை என்று அவர் கவலைப்படவில்லை. தன்னை நம்பினார். அப்படித்தான் ஃபர்ஸ்ட் கேப் கடை திறக்கப்பட்டது. அங்கிருந்த நாகரிக உடைகளுக்கு மக்கள் அடிமை ஆனார்கள். இன்று இக்கடை உலகமெங்கும் உண்டு.
வேரா வாங்
பார்க்க பேங்க் கட்டி நடத்துகிறார் என்று தோன்றும். பெண்களுக்கான உடைகளை வடிவமைத்து விற்கிறார். தன் தொழில் முயற்சிகளை செய்யும் முன்பு பத்திரிகையாளரான பணியாற்றியவர். இவர் நாற்பதில்தான் டிசைனர் தொழிலைக் கையில் எடுத்தார்.
சாமுவேல் ஜான்சன்
இன்று இவரை அறிவீர்கள். ஆனால் அன்று ஹாலிவுட்டில் சிறிய கேரக்டர்களில் நடித்தபோது பெரிய பிரபலம் கிடையாது. நம்பிக்கையுடன் என்னால் முடியும் என நம்பியதால் 1993 இல் வெளியான ஜங்கிள் ஃபீவர் படத்தில் புகழ்பெற்று முன்னுக்கு வந்தார். அப்போது சாமுவேலின் வயது 43.
சாம் வால்டன்
இவரது நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க நினைத்தும் அரசியல் பிரச்னைகள் விடவில்லை. விற்பனைத்துறையில் சிறிய வேலையில் இருந்தார். தன் மீது கொண்ட நம்பிக்கையை கைவிடாத தால் 44 வயதில் 1962 ஆம் ஆண்டு வால்மார்ட் கடையைத் தொடங்கினார். இன்று ஃபிளிப்கார்ட் கம்பெனியை வாங்குமளவு அவரது நிறுவனம் உயர்ந்துள்ளது.
நன்றி: பிசினஸ் இன்சைடர்