இந்தவார புத்தக வாசிப்பு!




40538718




ரஷ்யாதான் 1959 ஆம் ஆண்டு விண்கலனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அந்நாட்டை முந்தும் வேகத்தில் அமெரிக்கா, மனிதர்களை தயாரித்து நிலவுக்கு அனுப்பியது மிகப்பெரும் சாதனை. இன்றும் நாம் பிஎஸ்எல்வியா, ஜிஎஸ்எல்வியா என தடுமாறும் நிலையில் 1969 ஆம் ஆண்டு துணிச்சலாக கருவிகளோடு மனிதர்களையும் அனுப்பிய அதிபர்  ஜான் எஃப் கென்னடி மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் முயற்சிகள், பிரச்னைகள் ஆகியவற்றை அனுபவக்கட்டுரைகளாக பகிர்கிற நூல் இது.


40607229






வயதாவது என்பது பலவீனமாக பார்க்கும் சமூகம் மேற்கத்தியது. ஆசியாவில் அதனை பெரும் பலமாக, பல்வேறு பொறுப்புகளை கொடுக்க நரைத்த முடி உதவுகிறது. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் 50 வயது தொடங்கினாலே ஏன், 40 தொடங்கினாலே பெருசு என்று கூறத் தொடங்விடுவார்கள். நிலைமை அந்தளவு மாறியுள்ளது. இச்சூழலில் நாற்பது வயது ஆட்களின் சூழல், மனநிலைமை, அவர்களின் பிரச்னைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த நூல் பேசுகிறது.

43233598



உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருள் ட்ரஃபிள். இது ஒரு பூஞ்சை என்றால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். நூல் முழுக்க பூஞ்சை ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது, இதன் பின்னால் உள்ள சந்தை என அனைத்தும் நூலில் கூறப்பட்டுள்ளது.


நன்றி: குட்ரீட்ஸ்



பிரபலமான இடுகைகள்