மூத்த குடிமகன்களுக்கான வட்டி குறைவது இயல்பானதுதான்!
சக்தி காந்த தாஸ்
ஆர்பிஐ ஆளுநர்
கரன்சி செயல்பாடு புதிய எல்லையைத் தொட்டுள்ளது?
சதவீத அளவில் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு குறைந்தளவே மக்களிடம் புழங்கி வருகிறது. வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் ரூபாயின் புழக்கம் மக்களிடம் அதிகமாகத்தான் இருக்கிறது. இது விரைவில் குறையும் என நம்புகிறேன்.
வட்ட சதவீதம் குறைந்தால் அது மூத்தவர்களுக்கு பாதகமாகும் என்பதை அறிந்துள்ளீர்களா?
பணவீக்கம் குறையும் போது வட்டி சதவீதமும் குறைவது வழக்கமானதுதான். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும்போது வட்டி எட்டு சதவீதமாக இருக்கும். அது குறையும்போது வட்டி 4 சதவீதமாக குறைவது இயல்புதானே!
வெளிநாடுகளிலும் கூட இந்திய கடன் பத்திரங்களை வாங்க முடியும் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்களே?
நாங்கள் அரசு கடனை நிர்வாகம் செய்யும் மேலாண்மை அமைப்பு மட்டுமே. அதை மட்டுமே செய்கிறோம். கடன், வட்டி பிரச்னைகளை குறித்து அரசுடன் தொடர்ந்து பேசிவருகிறோம். அரசின் வேறு முடிவுகளை பற்றி நாங்கள் பதில் கூறமுடியாது.
முழுக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை சரியாக செயல்படுகிறதா? நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதே?
அவை தவிர பிற நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றன. டிஜிட்டல் முறையில் இலக்கு இருப்பது போல ரூபாய் நோட்டுகளின் புழக்கத்திற்கு எந்த ஆய்வும் இல்லை. அரசு, முடிந்தளவு ரொக்க பழக்கத்தை கைவிட்டு டிஜிட்டலுக்கு மாறிவருகிறது. நாங்கள் மாநிலத்தில் ஒரு மாவட்டத்தையேனும் முழுக்க டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாற்ற திட்டமிட்டு வருகிறோம்.
சில ஆண்டுகளாக நிறுவனங்களின் தோல்வி, ஆடிட்டர், ஏஜன்சி ஆகியவை பற்றி பேசப்பட்டு வருகிறதே?
நிறுவனங்களின் தோல்வி, பங்குச்சந்தை ரேட்டிங் ஆகியவை அனைத்து நாடுகளிலும் இருப்பவைதான். பல்வேறு ரேட்டிங் நிறுவனங்களும், ஆடிட்டர்களும் இணைந்து செயல்படுகிறார்கள். இந்தியாவில் ஐசிஏஐ நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து செயல்படவிருக்கிறோம்.
நன்றி: டைம்ஸ் - சித்தார்த்தா சுரோஜித் குப்தா, மயூர் ஷெட்டி