பத்திரிகையாளர்களை மிரட்டும் அரசியல் அதிகாரம்!
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தி ஓப்பன் பத்திரிகையில் அரசியல் பகுதிக்கு ஆசிரியராக இருந்த ஹர்தோஸ் சிங் பால் வேலையிலிருந்து விலக்கப்பட்டார். காரணம், அவர் எழுதிய எழுத்துக்களால் கோபமான அரசியல்வாதிகள்தான். தற்போது பால், தி கேரவன் பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். ஆனால் தன்னை வேலையை விட்டு உடனடியாக விலக்கியது தவறு என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதன்படி ஆறுமாத சம்பளத்தை வழங்கும்படி பத்திரிகையாளர் சட்டத்தின்படி கேட்டுள்ளார். இதன்படி ரூ. 10 லட்சரூபாயைப் பெற்றுள்ளார். ஒப்பந்த முறையில் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர்கள் வேலைக்கு எடுப்பதைக் குறித்தும் பேசுகிறார்.
பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களைக் காக்கும் சட்டம்தான் இது. ஆனால் டிவி, இணையத்தில் பணியாற்றுபவர்கள் இச்சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள். ஒப்பந்த முறையில் பத்திரிகையில் பணியாற்றும், ஊழியர்களை மேலாண்மை செய்பவர்களை காப்பதற்கான அரசு சட்டமே வொர்க்கிங் ஜர்னலிஸ்ட் ஆக்ட்.
ஐந்து ஆண்டுகளாக நீங்கள் நடத்திய போராட்டத்தின் வழியாக என்ன உணர்ந்தீர்கள்?
மோடி அரசில் மட்டுமல்ல, 2013 ஆம் ஆண்டு நான் வேலையிலிருந்து விலக்கப்பட்டபோது மத்தியில் இருந்தது காங்கிரஸ்தான். அப்புறம்தான் தெரிந்தது, இந்த அமைப்பு முறையில் பிரச்னை இருக்கிறது என. இதற்கென வாதாட வழக்குரைஞர்களோ யாருமே முன்வரவில்லை. மக்கள் சில குறுஞ்செய்திகளை மட்டும் அனுப்பிவிட்டு அமைதியாகி விட்டனர். எனக்கு கேரவன் பத்திரிகை வாய்ப்பு கொடுத்து நான் போராடவும் உதவியது. அந்தவகையில் சட்டப்போராட்டத்தை சிக்கல்களை நானாகவே சந்தித்தேன். நெருங்கிய நண்பர்களுக்கு வழக்கு பற்றி தெரியும். நான் என் வழக்குரைஞர்களுடன் சென்று தனியாகவே வழக்கைச் சந்தித்தேன். இதில் எனக்கு ஆதரவு வழங்கினார்கள், வழங்கவில்லை என்பதை பத்திரிகையாளர்கள் தமக்கு பிரச்னை வரும்போது சட்டரீதியாக எப்படி போராடுவது என்பதை புரிந்துகொள்வது முக்கியது. வேலை இழப்பும், சட்டரீதியாக போராடும் மன உளைச்சலும் இதில் அதிகம் இருந்தன.
உங்களோடு பணிபுரிவது கடினமாக இருப்பதாக தி ஓப்பன் இதழின் முன்னாள் ஆசிரியர் மனு சஞ்சீவ் கோயங்காவிடம் கூறியதாக பேட்டியில் கூறினாரே?
நான் அப்போது ராகுல்காந்தி குறித்து கட்டுரை ஒன்றை எழுதினேன். சஞ்சீவ் கோயங்கா, அப்போது ராஜீவ்காந்தி அறக்கட்டளையில் பங்கு பெற்றிருந்தார். அதோடு அனைத்து தொழிலதிபர்களோடும் நட்பில் இருந்தார். மேலும் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், பாஜகவைச் சேர்ந்த அருண் ஜெட்லி ஆகியோரோடும் நல்ல தொடர்பில் இருந்தார். அருண் ஜெட்லியைச் சேர்ந்தவர்கள் என்னை பணி விட்டு நீக்கியதில் முக்கிய பங்கு வகித்தனர் என்று நினைக்கிறேன்.
நன்றி: வயர்டு