மர்மம்,பீதி தரும் தலையில்லாப் போராளி - டெக்ஸ் வில்லர்





Image result for tex willer



டெக்ஸ் வில்லர் கலக்கும்

தலையில்லாப் போராளி

கதை: போசெல்லி ஓவியம் சிவிடெல்லி


Image result for tex willer


டெக்சாஸின் தென்பகுதியில் செவ்விந்தியப் போராளி செய்த குற்றங்களை காரணம் சொல்லி, அவரைக் கொடூரமாக ரேஞ்சர்கள் குழு சுட்டுக்கொல்கிறது. அடுத்து அவரை அவமானப்படுத்த தலையை வாளால் வெட்டி, குதிரையில் வைத்துக்கட்டி முண்ட உடலுடன் திரியும்படி குதிரையை விரட்டி விடுகின்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கொலையில் தொடர்புடைய ரேஞ்சர்கள், அங்குள்ள மனிதர்கள் சிலர் மர்ம மனிதரால் கொலை செய்யப்படுகிறார்கள். யார் அவர்கள் என கண்டுபிடிக்க மருத்துவர் மோரிஸ்கோ நினைக்கிறார். உதவ வருகிறார் டெக்ஸ் வில்லர்.

அந்த தலையில்லா போராளி யார்? கற்பனையா? உண்மையா என்பதை அவர் டூமில். தடால், கும் சத்தங்களுடன் கண்டுபிடிப்பதுதான் கதை.

லயன் காமிக்ஸ் போட்ட புத்தகம் நல்ல பெரிய சைஸ் என்பதால் கதைகளின் ஓவியம் ஓரத்திற்கு போய்விடாமல் ரசித்துப் படிக்க முடிகிறது.

இந்த காமிக்ஸில் டெக்ஸ் வில்லரோடு அவரின் மகனும் உண்டு. இம்முறை புத்தகத்திலுள்ள சண்டைக்காட்சிகளை டெக்ஸின் மகன் பார்த்துக்கொள்ள, மிக லாவகமான எளிதான சண்டைக் காட்சிகளை மட்டும் டெக்ஸ் செய்கிறார்.

மற்றபடி கதையில் ஏராளமான ட்விஸ்டுகள் உண்டு. புல்லாங்குழலின் இசை, தலையில்லாப் போராளியின் மெக்சிகன் வாள், செவ்விந்தியர்களின் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும்  சடங்கு என பல செய்திகளும் பீதியூட்டுகின்றன.

சண்டைக்காட்சிகளை விட இதில் மர்மம், யார் நல்லவர், கெட்டவர் என்பதைச்சொல்லுவது கடினமாக உள்ளது. ரசித்துப் படிக்கலாம், மோசமில்லை.

-கோமாளிமேடை டீம்











பிரபலமான இடுகைகள்