நடந்தால் நன்றாக இருக்கும் டெக் ஆசைகள்!
படத்தில் சில ஆச்சரிய விஷயங்களைப் பார்த்திருப்போம். அதுபோல வாழ்க்கையில் நடந்தால் சூப்பராக இருக்குமே என்று பலருக்கும் ஆசை இருக்கும். அப்படி சில விஷயங்களைப் பார்ப்போம்.
Learning by plugging in (The Matrix)
பத்தாயிரம் மணிநேரங்களை செலவழித்தால் நீங்கள் எந்த விஷயத்திலும் மாஸ்டர் ஆகிவிடலாம்தான். ஆனால் அதற்கு ஏது நேரம்? காதலன் பிரபுதேவா போல, சிங்கிள் நைட்டில் சாதனை டான்சராக மாறுவதுதான் பலரது லட்சியமும். மேட்ரிக்ஸ் படத்தில் சிலமணிநேரத்தில் சர்வகலா பைட் மாஸ்டராக கீனு ரீவ்ஸ் மாறுவாரே அதுதான் அனைவருக்கும் தேவை . சாத்தியமா?
இதற்கு மூளையின் செயல்பாடுகளை அறிவது அவசியம். அதில் நியூரான்களில் ஒவ்வொரு செய்தியும் எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை அறிந்தால்தான், ஒரு மூளையிலிருந்து மற்றொருவருக்கு அந்த தகவல்களை கடத்தி மாஸ்டர் ஆக்க முடியும். மேற்சொன்ன ஐடியா சொல்ல எளிதாக இருந்தாலும் டெக்னிக்கலாக மிக சிக்கலானது.
தகவல்: செயின் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக உளவியலாளர் பீல்டர் போல்டியாக்.
Holodecks (Star Trek)
ஸ்டார்ட்ரெக் படத்தில் வரும் ஹோலோ டெக்ஸ் வசதி, பலரையும் பிரமிக்க வைத்த ஒன்று. இம்முறையில் எதிர்கால வசதிகளைக்கூட பயன்படுத்த முடியும் என்பதுபோல காட்டியிருப்பார்கள். இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே? இதிலுள்ள ஹோலோகிராம் போன்ற வசதிகளை கணினி விளையாட்டுகளில் பயன்படுத்தலாம்.
நாம் ஏற்கனவே மிக்ஸ்டு ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் பணியாற்றத் தொடங்கிவிட்டோம். விஆர் முறை கூட இதில் முக்கியமானது. இத்தொழில்நுட்ப முறையில் ஸ்டீரியாஸ்கோப் படங்களை உருவாக்குவது சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும்.
தகவல்: மார்க் போலஸ், சதர்ன் கலிஃபோர்னியா
Invasion of dreams (Inception)
2010 இல் வந்த கிரிஸ்டோபர் நோலனின் சூப்பர் படம். கனவுகளை பிறரது மூளையில் புகுந்து திருடுவதுதான் டிகாப்ரியோவின் தொழில். செயற்கையாக கனவுகளை உருவாக்கி வடிவமைத்து அதில் ஒருவரின் ஐடியாக்கை திருடி பிறருக்கு விற்று பிழைத்து வருவார். இது சாத்தியமா? இது இந்தப்படத்தில் மட்டுமல்ல டோட்டல் ரீகால், எடர்னல் சன்சைன், ஸ்பாட்லெஸ் மைண்ட் ஆகிய திரைப்படங்களிலும் வந்துள்ளது.
இந்த கான்செஃப்ட் புதிதல்ல. கனவுகளை அறிவது, மூளையிலுள்ள நியூரான்களிலுள்ள செய்திகள் பதிவை அறிவது ஆராய்ச்சியாளர்களின் பல்லாண்டு கால ஆராய்ச்சியாக உள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கிலான மைக்ரோஎலக்ட்ரோட்ஸ் தேவைப்படுகிறது. இன்றுவரையில் ஒருவரின் மூளையில் புகுந்து அவரின் கனவுகளைத் திருடும் தொழில்நுட்பம் ஏதும் வரவில்லை. அவரின் கண்களில் இருந்தால் கூட அதனைக் கண்டுபிடிக்கலாம். நியூரான்களில் உள்ளதைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்.
தகவல்: ஜான் ஸ்னப், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
நன்றி:பிபிசி