இயற்கையை அழிக்கும் ஐரோப்பா - மெர்கோசர் ஒப்பந்தம்!





Image result for THE EU-MERCOSUR TRADE DEAL DOSSIER


ஐரோப்பா - மெர்கோசர் வணிக ஒப்பந்தம்.


ஐரோப்பிய யூனியனுக்கும், மெர்கோசர் - ( Brazil, Uruguay, Argentina and Paraguay ) ஆகிய நாடுகளுக்குமான வணிக ஒப்பந்தம் நீண்ட நாட்களாக முடிவுகளுக்கு வராமல் இழுபட்டு வந்தது. தற்போது அந்த ஒப்பந்தம் சீராகியிருக்கிறது. இதன்மூலம் மாட்டுக்கறியை பிரேசில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மிக குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யலாம்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மெர்கோசர் நாடுகளுக்கு இறக்குமதியாகும் கார்களுக்கு வரி குறைவாக விதிக்கப்படுவது இதன் சிறப்பு. மேலும் மெர்கோசர் நாடுகளின் விவசாயப் பொருட்கள் பலவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகள் சிறந்த சந்தையாக மாற வாய்ப்பு உள்ளது. வெனிசுலாவும் மெர்கோசர் நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது. ஆனால் அங்கு பொருளாதார பிரச்னை, உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்க 2016 ஆம் ஆண்டிலிருந்து நீக்கப்பட்டது.


இயற்கை சூழலியலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இதனை சூழலியலுக்கு எதிரானாதாகவே சந்தேகத்துடன் பார்த்து வருகின்றனர். உலகில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் பிரேசில் நாடு 15 சதவீத த்துடன் முன்னிலை வகிக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், வியாபாரம் முன்னேறும். இதற்காக மாடுகள் பெருகினால், பிரேசிலுள்ள காடுகள் அழியும் என பலரும் எண்ணுகின்றனர். சுற்றுச்சூழல் பற்றி இம்மானுவேல் மேக்ரான் பேசினாலும் பிரேசில், அமெரிக்காவுக்கு அடுத்து மாட்டுக்கறி தயாரிப்பில் ஐரோப்பிய நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. இவை 13 சதவீதம் சந்தையை வைத்துள்ளன.

உறுதியாக வியாபாரம் முன்னேறினால் இயற்கை இழப்பு நிச்சயம் ஏற்படும். பாரிஸ் சூழல் ஒப்பந்தம் விதிகளை காப்பாற்ற முடியாது என்பது நிச்சயமான உண்மை. வலதுசாரி தலைவர்கள் அதிகம் பேர் தேர்தலில் வென்று வரும் நிலையில் அவற்றைப் பேசவும் யாரும் இருக்க மாட்டார்கள்.


நன்றி: ஓஸி