வாசிப்பை மேம்படுத்தலாம் ஈசியாக. ...
வாசிப்பை மேம்படுத்துவோம்!
வாசிப்பை மேம்படுத்த மாதம் ஒரு புத்தகம் என படித்தால் ஆண்டுக்கு பனிரெண்டு புத்தகங்களை உங்களால் படிக்க முடியும். தினசரி நூலில் பத்து முதல் 20 பக்கங்கள் வரை படிப்பதை இயல்பாக்கிக் கொண்டால் இது சாத்தியமாகும்.
மாதம்தோறும் சந்தையில் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளியாகின்றன. அத்தனை நூல்களையும் படிப்பது சாத்தியம் கிடையாது.
மாதம்தோறும் படிப்பதற்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு படியுங்கள். நூல்களைப் பற்றிய கருத்துகளை எழுதி வையுங்கள். இதன் மூலம் திரும்ப நூல்களைப் படிக்காமல் இந்த குறிப்புகளை படித்தாலே நூல் நினைவுக்கு வந்துவிடும்.
தினசரி அலுவலகம் வரும் வழியில் படிப்பதற்கு ஏதுவான இபுக் ரீடர், மொபைல் ஆப்களைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் புத்தகங்களை சுமக்கும் தேவை குறைகிறது.
இலட்சக்கணக்கான நூல்களை ஸ்மார்ட்போனில், டேபில் தரவிறக்கி படிக்க முடியும்.
புத்தகங்களை இலக்கு வைத்து படிப்பதோடு, அதனை பிறரிடம் பகிர்ந்துகொள்வதும் அவசியம். அப்போதுதான் வாசிப்பில் ஊக்கம் பெறமுடியும். இதற்காக புத்தக கிளப், நூலக வாசகர் வட்டம் என பல்வேறு இடங்களிலும் கலந்துகொள்வது நண்பர்களைப் பெற உதவும்.
நன்றி: ஹஃப்போஸ்ட் .காம் படம்: பிக்ஸாபே