கிரேக்க கணிதமேதை யூக்லிட்!
கிரேக்க கணிதவியலாளரான யூக்லிட், இன்றைக்கு நாம் பள்ளிகளில் படிக்கும் வடிவியல் கணக்குகளை உருவாக்கியவர். இவர் அத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக, வடிவியலின் தந்தை என புகழ்பெற்றார். யூக்லிட் என்ற பெயருக்கு, மகிமை என்று பொருள்.
கி.மு.300 இல் இவர் எழுதிய தி எலிமென்ட்ஸ் (The Elements) என்ற நூல், கணிதத் துறையில் முக்கியமானது. இவற்றோடு எண்ணியல், வடிவியல், எண்கணிதம் ஆகியவற்றைப் பற்றி 13 நூல்களை எழுதியுள்ளார்.
எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியாவுக்கு வருவதற்கு முன்பு, பிளேட்டோவின் அகாடமியில் நூல்களை வாசித்து வந்தார். மேலும் நகரில் அரசு அமைத்திருந்த பெரிய நூலகம் யூக்லிட்டின் அறிவுப்பசியைப் போக்கியது. இவரின் காலத்தில் புகழ்பெற்றிருந்த மற்றொரு கணிதவியலாளர், கிளாடியஸ் டோலமி (கி.மு.323-283).
தகவல்: .10-facts-about.com
நன்றி: ஆர்.வெங்கடேஷ்