மின்வாகனங்கள் புழக்கம் அதிகரிக்குமா? - அரசின் புதிய கொள்கை!


Image result for electric vehicles in india



இந்திய அரசு 150 சிசி வாகனங்கள் பிரிவில் நூறு சதவீதம் மின் வாகனங்களை உருவாக்குவது குறித்து கூறியிருந்தது. தற்போது அரசு பட்ஜெட்டில் 1.5 இலட்சம் ரூபாய் வரிவிலக்கு, விலையில் 5 சதவீத ஜிஎஸ்டி விலக்கும் அளித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் மின்வாகனச் சந்தை வேகம்  பெறக்கூடும். இந்தியாவில் மின்வாகனங்கள் என்பது புதிதல்ல. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பே ரேவா என்ற இ ஸ்கூட்டர் மார்க்கெட்டுக்கு வந்தது. ஆனால் பெரிய வரவேற்பில்லை. காரணம், வேகம் இல்லை, பேட்டரிகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும் என்பது போன்ற அம்சங்கள்தான்.

டெஸ்லா கார் இந்தியாவிற்கு வரத் தாமதம் ஆகியுள்ள நிலையில் மற்ற கம்பெனிகள் காத்து நிற்க தயாராக இல்லை. ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக், நிசான் லீஃப், ஜாகுவார், மஹிந்திரா இகேயுவி ஆகிய நிறுவனங்கள் மார்க்கெட்டில் இறங்க தயாராக உள்ளது. இவற்றின் விலை 6 இலட்சம் முதல் 30 லட்சம் வரை இருக்கும். ஜாகுவார் மட்டும் 95 இலட்ச ரூபாய் வரும்.

நிசான் லீப் காரில் 250 கி.மீ களுக்கு ஒருமுறை சார்ஜ் போட்டால் போதும். ஒரு மணிநேரம் சார்ஜ் போட்டால், 80 சதவீதம் சார்ஜ் ஏறும். இம்முறையில் இந்தியா இதற்கான பேட்டரிகளைத் தயாரிக்கும் அவசியம் உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 150 சிசிக்கு குறைவான சக்தி கொண்ட வாகனங்களை மின் வாகனங்களாக மாற்ற நிதிஆயோக் பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் சலுகைகளும் அதை நோக்கித்தான் உள்ளது. விரைவில் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி: லிவ் மின்ட்