இந்திய தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் பெண்மணி!






Image result for delhi dog foundation




வீரா, ராணி, பொங்கி ஆகிய நாய்கள் இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த வருகின்றன. இத்தனைக்கும் அவை மதிப்பான உயர்ந்த ரக நாய்கள் கிடையாது. தெருவில் பிறந்து வளர்ந்தவைதான்.


அமெரிக்காவின் சியாட்டிலில் வாழ்ந்து வந்த ஜெசிகா ஹால்ட்ஸன், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களை பயணம் தீர்க்கும் என நம்பினார். அதற்காக இந்தியாவுக்கு வந்து டில்லியில் அறை எடுத்து தங்கினார். சொந்த சோகத்தை மறைக்க முயன்று தோற்ற நேரத்தில் தெருவில் அடிபட்டு அலறும் நாயின் குரலைக் கேட்டார். அந்த நாயை உடனே தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவரைப் பார்த்தபோது, அந்நாய்க்கு இடும்பெலும்பு உடைந்திருப்பதோடு, தொற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது என்று கூறி மருந்து எழுதினார்.

இந்தியாவில் 30 இலட்சத்திற்கு மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதை பின்னர் அறிந்துகொண்டார். தான் காப்பாற்றிய டெல்லி என்ற நாயை தன்னுடனே சிகிச்சை செய்து வைத்துக்கொண்டார். அதன் பெயரிலேயே காப்பகம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவில் செயல்படும் பிற விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து த த்தெடுக்க விரும்புபவர்களுக்கு உதவி வருகிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்கா, கனடா செல்பவர்களிடம் நாய்களை கொடுத்தனுப்பி புதிய சாதனை செய்திருக்கிறார் ஜெசிகா. இவர்களுக்கு ஃபிளைட் வாலன்டியர் என்று பெயர்.

டில்லியில் செயல்படும் பெட் ஃபிளை போன்ற அமைப்புகள் நாய்களை த த்தெடுக்கும் முறைகளைச் செய்து கொடுக்கிறார்கள். இதனால் நாய்களை விமானத்தில் எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. ஆதரவற்ற நாய்களை முனிசிபாலிட்டி கொல்வதற்கு இது பரவாயில்லைதானே.

நாய்கள் இந்த உலகில் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

நன்றி: டைம்ஸ் - மல்லிகா பகத்.