அறிவியல் நூல்கள் விமர்சனம்!











புத்தக அறிமுகம்



42283862





இன்று உலகில் மைக்ரோசாஃப்ட், லினக்ஸ், ஆப்பிள் ஆகிய இயக்க முறைகள் எப்படி தங்கள் பாதுகாப்பை ஒழுங்கு படுத்திக்கொள்கின்றன. சைபர் குழுக்களின் பல்வேறு தாக்குதல்கள்தான் இவற்றை சாதிக்கின்றன. பொதுவாக வணிக நிறுவனங்கள், தங்கள் நிறுவனப் பொருட்களை விற்றவுடன் மற்ற மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மறந்துவிடுகிறார்கள். இதனை நினைவுபடுத்தும் பல்வேறு சைபர் குழுக்கள் உலகம் முழுக்க தீவிரமாக வேலை செய்கின்றனர்.

கல்ட் ஆப் டெட் கவ் அப்படி ஒரு சைபர் குழுதான். பெயர் தெரிந்தளவு உறுப்பினர்கள் வெளியே தெரியாமல் செயற்பட்டு பல்வேறு டெக் நிறுவனங்கள் தம் பாதுகாப்பை சரி செய்துகொள்ள இடைவிடாமல் தொந்தரவு கொடுத்த தன்னார்வலர்கள் குழு இது. இந்நூல் இவர்களைப் பற்றித்தான் கூறுகிறது.

29945060






உக்ரைனின் செர்னோபிலில் நடந்த அணுஉலை விபத்தை நீங்கள் மறக்கவே முடியாது. காரணம், இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று சுற்றுலாவுக்கான இடமாக மாறினாலும், கதிர்வீச்சு, அணு உலை பற்றிய கவனத்தை ஏற்படுத்திய வகையில் செர்னோபில் மிக முக்கியமானது. இந்நூல் விபத்து ஏற்பட்ட மணிநேரத்தைத் தலைப்பாக கொண்டுள்ளது. அதோடு, நூல் முழுக்க புகைப்படங்களாக இருக்கிறது. கதிர்வீச்சின் பாதிப்பை எளிதாக உணரும்படி, வாசிப்பவர்களின் மனதில் படியும்படி நூல் வடிவமைப்பு மனதைக் கவருகிறது.

25734172







நவீன இயற்பியலில் நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? சார்பியல் தியரி, கருந்துளைகள், ஈர்ப்புவிசை, பால்வெளியின் கட்டமைப்பு என பல்வேறு விஷயங்களைப் பற்றி சுருக்கமாக 81 பக்கங்களில் விளக்கியிருக்கிறார்கள். எனவே கவலைப்படாமல் சடசடவென படிக்கலாம்.

நன்றி: தி குட்ரீட்ஸ்









பிரபலமான இடுகைகள்