பொருளாதாரத்தை சிதைக்கும் காசநோய்!
இந்தியாவை வதைக்கும் காசநோய்!
விறகு புகை, தொழிற்சாலை மாசுபாடு, பசு சாணம் ஆகியவை காரணமாக ஏற்படும் காசநோயின் அளவு தொண்ணூறுகளில் 28 சதவீதமாக இருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மார்ச் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஸ்பெண்ட் செய்த ஆய்வுப்படி பத்து லட்சம் பேர் ஆண்டுதோறும் இறந்து வருகின்றனர். அரசு இந்நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தடுமாறி வருகிறது. ஆண்டுதோறும் இந்தியா இந்நோயைக் கட்டுப்படுத்த 32 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. அதாவது அரசு அப்படிக் கூறுகிறது.
இத்தொகை நடப்பு ஆண்டில் தேசிய சுகாதாரத் திட்டம், கல்வித்திட்டம், பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட இத்தொகை அதிகம்.
2010 ஆம் ஆண்டு தொற்றா நோய்களுக்கான நாடு தழுவிய திட்டம் தொடங்கப்பட்டது. இதில் புற்றுநோய், இதயநோய், நீரிழிவு ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இணைந்தனர். நாங்கள் மாநிலங்களுக்கு கருவிகள் வாங்க 150,000, மருந்துகள் வாங்க 250000 ரூபாய் வழங்குகிறோம்.
மைசூருவைச் சேர்ந்த லக்ஷம்மா, பால் கறந்து வீடுகளுக்கு ஊற்றி வரும் வேலையைச் செய்து வருகிறார். இவர் அண்மையில்தான் சிலிண்டர்களுக்கு மாறி சமையல் செய்கிறார். இதற்கு முன்னர் 30 ஆண்டுகளாக விறகடுப்பில் சமைத்து வந்தவர். முத்ரா திட்டத்தின்படி கிராமத்திற்கு வந்த மருத்துவர்கள் குழு, அவருக்கு காசநோய் பிரச்னை இருப்பதைக் கண்டுபிடித்தனர். இது கிராமத்தில் புகையிலையை விட ஆழமான பாதிப்பை நுரையீரல்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எழுபது சதவீத குடும்பங்கள் விறகடுப்புகளையும் பயன்படுத்தி சமைக்கின்றனர். இவர்கள் சமையல் அறை முறையான காற்றோட்டம இல்லாதவை என்பதால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மாசுபடிந்த காற்றை சுவாசிக்கின்றனர் என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான சுகாதார அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
நன்றி: இந்தியா ஸ்பெண்ட்ஸ்