அமெரிக்கா! - செனட் அவை செயல்பாடு!



Image result for trump





அமெரிக்காவைப் பற்றிப் பேசாமல் எந்த வரலாற்றையும் எழுதிவிட முடியாது. காரணம், பிற நாடுகளை அழுத்தி உருக்குலைத்தேனும் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் பேராசை சுயநலம் அமெரிக்க அரசுகளுக்கு உண்டு. அதற்கு உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களை அச்சமயத்திற்கு ஏற்ப சொல்லுவார்கள்.

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் என்று அழைக்கின்றனர். இதில் செனட் சபை, ஹவுஸ் ஆப் ரெஃப்ரசன்ட்ஸ் என இரு பிரிவுகள் உண்டு. இந்தியாவில் உள்ள மக்களவை, மாநிலங்களவை நினைவுக்கு வருகிறதா அதேதான். அமெரிக்காவின் காங்கிரசில்தான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விவாதங்கள் நடைபெறும்.

செனட் அவை

இங்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. இவர்கள் அதிபரின் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதற்கொண்டு தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும்  உரிமை உண்டு. ஒரு மாநிலத்திற்கு இரு செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் செனட் அவையில் நூறு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஹவுஸ் ஆப் ரெஃப்ரன்சன்டிவ்ஸ்

மொத்தம் 435 உறுப்பினர்கள். பதவிக்காலம் இரண்டே ஆண்டுகள்தான். மாநிலங்களின் மக்கள்தொகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும். இவர்கள் மாநிலங்களின் வருமானத்தைப் பெருக்கும் விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். இதுதொடர்பான மசோதாக்களில் இவர்களின் பங்களிப்பு உண்டு.

அதிபர் தலைமை வகிக்கும் எக்ஸிக்யூட்டிவ் குழு, நாட்டின் வணிகத்தை ஒழுங்கு செய்கிறது. அதிபரின் வழிகாட்டுதலில் துணை அதிபர், கேபினட் இயங்குகிறது.


அதிபர் மற்றும் துணை அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள். அதிபர் அலுவலகத்தில் இல்லாதபோது, அவரின் பொறுப்பை துணை அதிபர் ஏற்று மக்கள் அவையை நடத்துவார். அல்லது அதனை ஒத்தி வைப்பார்.

கேபினட் அவையில் பல்வேறு துறைகளுக்கு பொறுப்பாக 15 உறுப்பினர்கள் இருப்பார்கள். பட்ஜெட் தயாரிப்பு அதனை அவையில் வெளியிடுவது அனைத்தும் அதிபரின் பொறுப்பு. அவரின் தலைமையில்தான் இராணுவத்தின அதிகாரமும் வரும்.


நன்றி: ஸ்காலஸ்டிக்