நிலவுச்சாதனை - 50 வது ஆண்டு!
நிலவில் மனிதர்கள் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாசாவின் பெயர் சொல்லும் வரலாற்றுச் சாதனையில் பிற மனிதர்களின் வல்லுநர்களின் பங்களிப்பும் உள்ளது.
உலக வானியல் யூனியன் 1955 ஆம் ஆண்டு கூடியது. வானியலாளர் ஜெரார்டு குய்ப்பர், நிலவுக்கு செல்வதற்கான வழிமுறைகளையும் வரைபடங்களையும் பலரிடமும் இச்சந்திப்பில் கோரினார். ஏனெனில் அப்போது ஓவியமாக வரைந்த படங்கள்தான் நம்மிடம் இருந்தது. இந்த கோரிக்கைக்குப் பிறகுதான் நிலவைக் காண்பதற்கான தொலைநோக்கிகள் தயாரிக்கப்படத் தொடங்கின.
டக்சனிலுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஆய்வகத்தை அமைத்த ஜெரார்டு, நிலவை தொலைநோக்கிகள் மூலம் படம்பிடிக்கத் தொடங்கினார். அப்போது தேர்தலில் வென்ற ஜான் எஃப் கென்னடி, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே தனது கனவு என்று கூறி நாசாவை ஊக்கமூட்டினார். அதன்பிறகு ஜெரார்டு உழைப்பில் உருவான நிலவின் படங்கள் அரசின் தேசிய சொத்தாயின. இவருக்கு ஆங்கிலேயர் விட்டேகர் ஆராய்ச்சியில் உதவினார். அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய ரோபோட்டிக் சர்வேயர் எடுத்த படங்களை விட இவரது தொலைநோக்கி படங்கள் பிரமாதமான தரத்தில் இருந்தன.
அப்போலோ திட்டங்கள் தொடங்கப்பட்ட பின்பு, விண்வெளி ஆராய்ச்சிலும் அமெரிக்கா பிற நாடுகளை முந்த தொடங்கியது. அதற்கு பிறகு நடந்ததை நீங்களே அறிவீர்கள்.
நன்றி: லிவ் சயின்ஸ்