இடுகைகள்

இவான் பாவ்லோவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் காட்டும் பாசநேசத்திற்கான காரணம்- சீன உளவியல் ஆய்வாளர் குவோ

படம்
  அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி எட்வர்ட் கட்த்ரை என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர், உளவியல் பற்றி ஆய்வுகளைச் செய்தார். இவான் பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்ற கோட்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். நாய்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மணியை ஒலிக்கவிட்டு உணவு வழங்கினால், மணி ஒலிக்கும்போது வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். இதுதான் ஆய்வின் முக்கியமான முடிவு. மனம் எப்படி பழக்கத்திற்கு அடிமையாகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.  நாய்க்கு குறிப்பிட்ட செயலை செய்தால் உணவு கிடைக்கும் என்பதை தெரிய வைத்தால் பின்னாளில் என்ன செய்தால் உணவு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்கிறது என எட்வின் கூறினார். அதாவது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வதால் அதன் குணநலன் உருவாவதில்லை. உணவுக்காக செய்யும் செயல்பாடுகள் மெல்ல உருவாகி மேம்பாடு அடைந்து குண இயல்புகளாக மாற்றம் அடைகிறது. இதற்காக ஒரே சோதனையை விலங்குகளிடம் மீள மீள செய்யவேண்டியதில்லை என்று உறுதியாக கருதினார்.  அடுத்து செய்திகளில் பார்த்த விஷயத்தைப் பார்ப்போம். உலகில் எப்போதும் பொருந்திப்போகாத விலங்குகள் உண்டு. பூனை, எலி, பூனை, நாய் ஆகியவை எப்போதும

இவான் பாவ்லோவ் செய்த உளவியல் ஆராய்ச்சி

படம்
          இவான் பாவ்லோவ்     1890 ஆம் ஆண்டு , ரஷ்ய மருத்துவரான இவான் பாவ்லோவ் உளவியல் கோட்பாடுகளை ஆய்வு மூலம் அமெரிக்கா , ஐரோப்பாவிற்கு நிரூபிக்க நினைத்தார் . விலங்குகளை பழக்க முடியும் . அவற்றை குறிப்பிட்ட முறையில் பழக்கி எதிர்வினையைப் பெறலாம் என்பதே இவானின் ஆய்வு நோக்கம் . ஆய்வகம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இடம் . அங்கு விலங்குகளை வைத்து சோதனை செய்து அதன் வழியாக முடிவுகளைப் பெறுவது , அதை வைத்து சோதனைகளை மனிதர்களுக்கு செய்வது என்பதே இறுதி திட்டம் . ஒருவரின் குணநலன் என்பது அவர் வாழும் சூழலோடு தொடர்புள்ளதாகவே உள்ளது . அதன் அடிப்படையில்தான் குண மாறுதல்கள் அடையாளம் காணப்படுகின்றன . ஊக்கமூட்டுதல் – எதிர்வினை என்ற கோட்பாட்டை ஜான் வாட்சன் உருவாக்கினார் . இந்தக் கோட்பாடு ஒரு சிறிய உதாரணம்தான் . இதன் அடிப்படையில் ஏராளமான கோட்பாடுகள் உருவாகின . அமெரிக்கா , ஐரோப்பாவில் உள்ள மக்களும் இதை ப்பற்றி அறிந்துகொள்ள முயன்றனர் . அப்போது , வியன்னா நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் மனம் பற்றிய புதிய கோட்பாட்டை உருவாக்கினார் . அதுவரை உளவியல் பற்றிய ஆய்வறிக்கைகள் கோட்பாடுகள்