இடுகைகள்

எளிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு குறிப்

காந்தியின் உருவத்தைப் பார்த்து நாம் பெறும் செய்தி!

படம்
  பொதுவாக காந்தியின் வழிமுறைகளாக கூறுவது என்ன ? அமைதி , அநீதிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு , எதிர்ப்பது , போராடுவது ஆகியவைதான் . இதைத் தாண்டி உணவு , உடை , குடிநீர் , மின்சாரம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவதை காந்தியின் பெயர் சொல்லித்தான் சொல்லுவார்கள் . உள்நாட்டு துணிவகைகளைப் பயன்படுத்துவது இதில் முக்கியமானது . காதியில் கிடைக்கும் காடாத்துணிகளை தைத்து உடைகளாக்கி போடுவது ஒரு காலத்தில் நாகரிகமாக இருந்தது . இன்று காதி , சர்வோதய சங்கத்தில் விற்கும் சட்டைகள் சற்று பெரிதாக வினோதமான வடிவமைப்பில் இருந்தாலும் , துணிகளை வாங்கி சாதுரியமாக தையல்காரரிடம் விருப்பம் போல தைத்துக்கொள்ளும் புத்திசாலிகளும் உண்டு . உடைகளை பழசாகிவிட்டால் தூக்கி எறிவதை காந்தி வெறுத்தார் . அதை கிழியும் வரையில் பயன்படுத்தலாம் . கிழிந்துவிட்டாலும் கூட அதை பயன்படுத்தும் வழிகள் உண்டு . இது நம்மை காசு செலவழிக்காத கருமியாக காட்டலாம் . ஆனால் அப்படி பயன்படுத்த கற்றால் உங்களுக்கு செலவுகள் குறையும் . பொருட்களால் வீட்டை நிறைக்க மாட்டீர்கள் . வாழ்க்கையும் எளிமையாக மாறும் . காந்தியின் சத்திய சோதனை நூலை ஒருவர் படிக்கும்போது அவர் பள

அடுத்த ஆண்டில் 50ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சி புரோகிராமிங் மொழி! - மீண்டும் பிரபலமாவது எப்படி?

படம்
                  கணினிமொழி சி ! அடுத்த ஆண்டு சி மொழி , கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றது . இன்று நாம் பயன்படுத்தும் டிவி , வாஷிங்மெஷின் , மைக்ரோவேவ் ஓவன் , ஸ்மார்ட் பல்புகள் , காரின் டாஷ்போ்ர்டு ஐஓஎஸ் , ஆண்ட்ராய்ட் ஓஎஸ்கள் அனைத்துக்குமே அடிப்படை சி மொழிதான் . 2015 ஆம் ஆண்டு ஜாவா மொழியிடம் தனது பிரபலத்தை சி மொழி பறிகொடுத்து தற்போது மீண்டிருக்கிறது . இணையம் சார்ந்த கருவிகளின் விளைவாக 2017 வாக்கில் சி மொழி முன்னுக்கு வந்திருக்கிறது . 1972 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த டென்னிஸ் ரிட்சி என்பவர் சி மொழியைக் கண்டுபிடித்தார் . 1980 வாக்கில் சி மொழி வணிகத்திற்கு கூட பயன்படத் தொடங்கிவிட்டது . இதனை லோலெவல் லாங்குவேஜ் என்று கூறுகிறார்கள் . அப்போது ஹை லெவல் என்றால் ஜாவா , பைத்தான் ஆகியவை வரும் . கணினியின் கெர்னல் எனும் பகுதி சி மொழியால் எழுதப்பட்டு வருகிறது . இன்று ரஸ்ட் , சி பிளஸ் பிளஸ் மொழியில் பல்வேற பரிசோதனை முயற்சிகளை புரோகிராமர்கள் செய்து வருகிறார்கள் . ஆனாலும் கூட சி மொழியின் எளிமையும் திறனு்ம் அதற்கு கைகூடவில்லை . ஒரு செயலை செய்வதற்கான கோடிங்கை சி மொழி