இடுகைகள்

சிபிஎம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநிலங்களை மதித்து மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை!

படம்
the hindu சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு மாநில அரசு மாநில அரசுகளுக்கு அதிகளவில் நிதியுதவி செய்யவேண்டும். நிதியைப் பெறுவதில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் என்கிறார் சீதாராம் யெச்சூரி. அவரிடம் பேசினோம். ஊரடங்கு காலம் சிக்கலான காலமாக உள்ளது. இக்காலம் நீட்டிக்கப்படும்போது பொருளாதாரம் எப்படி பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறீர்கள்? பிரதமர் மாநில அரசுகளும் மக்களும் கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ள அளித்தது நான்கு மணிநேரம் மட்டுமே. அரசிடம் ஊரடங்கை எப்படி அமல்படுத்தபோகிறோம், பாதிக்கப்பட்டவர்களை எப்படி சோதிக்கப்போகிறோம் என்பது பற்றிய திட்டமிடல் இல்லை. இதனால் ஊரடங்கு காலத்திற்கு முன்னரும், அதன் பின்னரும் மக்கள்தான் அதிகளவு பாதிக்கப்பட்டனர். இப்போது சமூக தனிமைப்படுதல் என்பதை பலரும் பின்பற்றச்சொன்னாலும் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு காலத்தில் நோய்த்தொற்றை தடுத்திருந்தால், விதிகளை மெல்ல தளர்த்திக்கொண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவியிருக்கலாம். மாநில முதல்வர்களோடு பிரதம் மோடி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேச