இடுகைகள்

கோதுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1980ஆம் ஆண்டில் முன்மாதிரி மாநிலம்... ஆனால் இப்போது? - பாதாளத்தில் பஞ்சாப்

படம்
  பஞ்சாப் மாநில வரைபடம் பஞ்சாப்பின் பிரச்னைகள் என்ன? பசுமை புரட்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதன் பயனை பெருமளவில் பெற்ற மாநிலம், பஞ்சாப். 1960ஆம் ஆண்டு தொடங்கிய வேளாண்புரட்சி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, உணவு தானியங்களின் உற்பத்தியில் உபரி காட்டிய சிறப்பான மாநிலம். வளர்ந்து வந்த விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேரளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்தது. இதன் மூலம் கிராமம், நகரம் என   இரண்டு பகுதிகளிலும் விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது. விவசாயம் மட்டுமல்லாது தொழில்துறையிலும் முக்கியமான மாநிலமாக உருமாறியது. வளர்ச்சியான பக்கம் என்றால் அதன் மறுபக்கம் இருளான பக்கம் இருக்கவேண்டுமே? அரிசி, கோதுமையை அதிகம் விளைவித்தவர்கள் நிலத்தடி நீரை அதிகம் செலவழித்தனர். இதன் காரணமாக, நிலத்தடி நீர் அளவு குறைந்துகொண்டே வந்தது. நிலத்திற்கு செலவிடும் உரச்செலவு கூடி விவசாயிகள் பயிர்களை வளர்க்க கடன் பெற தொடங்கினர். அதேசமயம் போதைப்பொருட்கள் விற்பனையும் மாநிலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கினர். அதை ஆட்சியில் இருந்த அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

உலக அமைதிக்கான நோபல் பரிசு! - வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்ட அமைப்புக்கு கிடைத்துள்ளது

படம்
        உலக அமைதிக்கான நோபல் பரிசை 28 ஆவது அமைப்பாக வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்டம் வென்றுள்ளது. பசியைத் தீர்ப்பதற்காக போராடி, போர் மற்றும் முரண்பாடுகள் சிக்கல்களை நிலவும் பகுதியை அமைதி நிலவச் செய்த பணிக்காக நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1961ஆம்ஆ ண்டு அமெரிக்க அதிபர் வைட் ஐசன்ஹோவர், வேர்ல்ட் புட் புரோகிராம் திட்டத்தை தொடங்குவதற்கான ஆலோசனையை தெரிவித்தார். இந்த அமைப்பு தொடங்கியபிறகு ஈரானின் போயின் ஜாஹ்ரா நகரில் நடைபெற்ற நிலநடுக்க பாதிப்பில் 12 ஆயிரம் மக்கள் பலியாயினர். மேற்சொன்ன அமைப்பு அங்கு கோதுமை, சர்க்கரை, தேயிலை ஆகிய பொருட்களை டன் கணக்கில் அனுப்பி உதவியது. பின்னர், தாய்லாந்து, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் நிறைய உதவிகளை ஆபத்துகாலத்தில் செய்தது. 1963ஆம்ஆண்டு சூடானின் நியூபியன்ஸில் முதல் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியது. பின்னர், பள்ளிக்கான உணவு திட்டத்தை டோகோவில் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நாவின் முக்கியமான திட்டமாக வேர்ல்ட் புட் புரோகிராம் மாறியது. இத்தாலியின் ரோமில் இந்த திட்ட அமைப்பு செயல்படுகிறது. இதில் 36 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் இய

குளூட்டேன் - ஒவ்வாமைக்கு மூல காரணமா?

படம்
gluten குளூட்டேன் இன்று குளூட்டன் இல்லாத உணவுப்பொருட்களை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். குளூட்டேன் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன்விளைவாக குளூட்டேன் இல்லாத பிரெட், பாஸ்தா உள்ளிட்டவற்றையும் பிற பொருட்களை மக்கள் தேடி வருகின்றனர். மரபணுரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் ஒவ்வாமை இன்று பெருமளவு தலைதூக்கி வருகிறது. குளூட்டேன் என்பது கோதுமையில் காணப்படும் சங்கிலி அமைப்பிலான ஓர் புரதம். வெறும் கோதுமையை வாயிலிட்டு மென்றால் சூயிங்கம் போல திரண்டு வரும். இந்த தன்மைக்கு குளூட்டேன்தான் காரணம்.  பிரெட் தயாரிப்பில், குளூட்டேன் முக்கியமான பகுதிப்பொருள். அதன் நெகிழ்வான தன்மைக்கு குளூட்டேன் உதவுகிறது. கோதுமை மாவில் நீரைச் சேர்த்து குளூட்டேனை நீக்க முடியும். நேரடியாக கோதுமையிலிருந்து குளூட்டேனை நீக்குவது சாத்தியம் அல்ல. குளூட்டேன் இல்லாத உணவு காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவற்றில் குளூட்டேன் இல்லை. இன்று குளூட்டேன் நீக்கப்பட்ட நிறைய உணவுப்பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை பிற பொருட்களை விட விலை சற்று கூடுதலாக இருக்கும். ஒவ்வாமை ஏற்படுவதன் முக்கியக் காரண