இடுகைகள்

சுங்கத்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடத்தல் பிஸினஸில் ட்ரோன்கள்!

படம்
கடந்த ஜூன் 8 இல் அரசின் டிஆர்ஐ துறை சென்னையில் 48 ட்ரோன்களை கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன்களின் மதிப்பு 23 லட்ச ரூபாய். இந்த ட்ரோன்களை எழும்பூரிலுள்ள கடைகளிலிருந்து அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன்கள் சீனாவிலிருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது. இதற்கு பயன்படும் அதே வழியில்தான் நம் நாட்டிற்குள் தங்கமும் பயன்படுத்தப்படுகிறது. தங்கமும் ட்ரோனும் ஒன்றா எனக்கேட்பீர்கள். ட்ரோன் மார்க்கெட் 2021 ஆம் ஆண்டுக்குள் 881 மில்லியன் டாலர்களை எட்டவிருக்கிறது. சீனாவிலிருந்து பெரும்பான்மையான ட்ரோன்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதன் அசல் விலையை விட 40 சதவீதம் அதிகமாக உள்ளது.  சென்னையில் ட்ரோன்களை வாங்க முடியுமா? நிச்சயம் முடியும் ஆனால் பில் இல்லாமல்தான் கிடைக்கும். சென்னையில் 15 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் தினசரி இங்கு விற்கின்றன. இடைத்தரகர்கள் இதற்கும் உண்டு. கடத்தல் ஐடியா எலக்ட்ரானிக் ஐட்டம் என்று கூறி ட்ரோன்களை பகுதிப் பொருட்களாக வாங்கி பின்னர் ஆன்லைன் டுடோரியல் மூலம் அசெம்பிள் செய்து பயன்படுத்துகின்றனர். விற்கின்றனர். இதனைக் கண்டுபிடித்து

எப்படி கடத்தப்படுகிறது ஹவாலா தங்கம்!

படம்
கடத்தல் வாகனமாக மனித உடல் காசு கொடுத்து வாங்கும் பொருள் நாட்டையும் வீட்டையும் வளர்ப்பது உண்மைதான். ஆனால் வரிகொடுக்காமல் வரும் தங்கம்தான் இன்று நகைச்சந்தையை ஆட்சி செய்து வருகிறது. ஹவாலா முறையில் செயல்படும் உலகளாவிய வலைப்பின்னல் இதில் உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் கடத்தல் வலைப்பின்னல்களால் கடத்தப்படும் தங்கத்தின் சதவீதம் 46 என சுங்கத்துறை கணக்கு சொல்லியுள்ளது. கடந்த ஆண்டு 109 கிலோ தங்கத்தைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு 40 கோடி. இதனைக் கடத்திக் கொண்டு வருபவருக்கு நூறுகிராமுக்கு ரூ.350 தருகின்றனர். எனவே கிலோகிராமாக கடத்தினால்தான் நல்ல வரும்படி கிடைக்கும் என கடத்தி வருகின்றனர். வெளிநாட்டு தங்கத்திற்கு 38.5 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது. இதனால், கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் லாபம், 15 லட்சம் ரூபாய். இதில் சுங்கத்துறையிடம் ஆட்கள் சிக்கிக்கொண்டாலும் லாபம் கிடைக்கும் பாதுகாப்பான வியாபாரத்தை இந்த கள்ளக்கடத்தல் குழு செய்துகொள்கிறது. தங்கத்தை கடத்தும் ஆட்கள் அனைவரிடமும் 600 கிராம் தங்கத்திற்கு குறைவான அளவே வழங்கப்படுகிறது. பெரும்பாலும் தங்கத்தை கடத்துபவருடன் சக பயணியாகவ