இடுகைகள்

வெடிகுண்டு தாக்குதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பலுசிஸ்தானும் காஷ்மீரும் ஒன்று கிடையாது! - பஹூம்தாக் புக்தி

படம்
நேர்காணல் நவாப் பஹூம்தாக் புக்தி ஸ்வீடனில் உள்ள பலுசிஸ்தான் ரிபப்ளிக் கட்சித் தலைவர். இவர், 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பலுசிஸ்தான் ஆளுநர் நவாப் அக்பர் புக்தியின் பேரன் ஆவார்.  பலுசிஸ்தானில் நிலைமை எப்படியிருக்கிறது? நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பாக். ராணுவம் அங்கு அரசியல் தலைவர்களை கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் இயல்பான விஷயங்களாகி உள்ளது. அவர்களையும் மக்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து மனித உரிமை மீறல்களை செய்வது அங்கு புதிய சட்டமாக மாறியிருக்கிறது. அங்கு கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.  தினசரி காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மேற்குலகைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள எவையும் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கூறும் தகவல்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களுடைய அமைப்பின் ஆராய்ச்சிப்படி 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அதில் எட்டாயிரம் பேர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இது