இடுகைகள்

ஆசான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரே