இடுகைகள்

லயன் காமிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாவது முறையாக கால வேட்டையர்களைத் தடுக்கும் பத்திரிகையாளர் குழு - கால வேட்டையர்கள் - 2

படம்
              கால வேட்டையர்கள் நூலில் உள்ள இரண்டாவது கதை....... இதில், புதுமையான பகுதிகளை சுற்றிப்பார்க்க ஆர்வமுடையவர்களை டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று வரவேற்கிறது. அவர்களின் பின்புலங்களை விசாரித்து முடிந்தளவு தனிநபர்களாக இருக்கும்படி பார்த்து சுற்றுலாவிற்கு கூட்டிச்செல்கிறது. இப்படி செல்பவர்கள் எவரும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில்லை. இதுபற்றி புலனாய்வு செய்ய பத்திரிகையாளர் மீண்டும் மாறுவேடத்தில் சுற்றுலா பயணியாக செல்கிறார். அப்படி செல்லும்போது, பயணத்தில் புதுமணத்தம்பதியாக முதல் கதையில் பார்த்தோமே ஆர்வக்கோளாறு லௌரியும் இருக்கிறாள். அவளுக்கு அந்த பயண பின்னணி தெரியாது. ஆனால் ஒருமுறை பத்திரிகையில் டிராவல்ஸ் விளம்பரத்தை பார்க்கிறாள். அது வினோதமான அறிவிப்பாக இருக்கிறது. மேலும், அதுபற்றி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு செ்ன்று விசாரிக்கிறாள். அங்கு வயதான பெண்மணி தன்னுடைய மருமகள் பயணத்திற்கு சென்றாள். ஆனால் திரும்ப வீடு திரும்பவில்லை என புகார் கொடுத்தபடி நிற்கிறாள். இதுபற்றி விசாரிக்க முற்படுகையில் அவளை குள்ளர்களின் ஆட்கள் சூட்களில் கடத்துவதற்கு நெருங்குகிறார்கள். இதை அடையாளம் கண்ட லௌரி சாமர்

தீவிரவாதிகளை கருவறுத்து பணயக்கைதியை மீட்கும் மாடஸ்தியின் குழு! - கானகத்தில் கண்ணாமூச்சி

படம்
கானகத்தில் கண்ணாமூச்சி முத்து காமிக்ஸ் விலை. 2.50 லேடி மாடஸ்தி, வில்லி கார்வின் இணைந்து கலக்கியுள்ள காமிக்ஸ். வில்லி கார்வின் மாடஸ்தியின் சொல்படி தன் நண்பருடன் உல்லாச சுற்றுலா சென்றிருக்கிறார். மாடஸ்தி கௌரேம்போ எனும் சிறிய நாட்டில் இருக்கிறார். அவரது நண்பரின் பெண் தோழி டயானா, பிரிட்டிஷ் தூதரின் மகள். எப்போதும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் உளறி வைத்து எரிச்சல் படுத்தும் குணம் கொண்டவள். அவளை அந்நாட்டு தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். எப்படி நாட்டின் அதிபரின் துணையுடன் மாடஸ்தியும், வில்லி கார்வினும் அப்பெண்ணை மீட்கிறார்கள் என்பதே கதை. கறுப்பு வெள்ளை காமிக்ஸிலும் மாடஸ்தியின் கவர்ச்சிகரமான உடைகளும், உடலும் மயக்குகிறது. இங்கிதமாக நடந்துகொள்ளும் அவரது தன்மை பல்வேறு ஆண்களை அவரைச் சுற்றிவரச்செய்கிறது. அந்நாட்டில் முன்னமே ரவுடிகளை வைத்து தனி குழுவை இயக்கி வந்த மாடஸ்தியை திடீரென அதிபர் சந்திக்கும்போதே நிச்சயம் அதிபரைச் சுற்றித்தான் கதை திரும்ப போகிறது என ஊகிக்க முடிகிறது. தீவிரவாதிகள் ஆணவக்காரியான டயானாவை கடத்தியவுடன் ஏறத்தாழ அவர்கள் அதிபரை மிரட்டுவார்கள்

அதிபர் தேர்தல் வேட்பாளரை ஜெயிக்க வைக்க நூதன சதிகள் - கத்தியில்லாத யுத்தம்!

படம்
லயன் முத்து காமிக்ஸ் டிடெக்டிவ் காரிகன் தோன்றும் கத்தியில்லாத யுத்தம் காரிகன் மிகத்திறமையானவர்தான். ஒவ்வொரு முறையும் அவருக்கு சவாலான விஷயங்களை உளவுத்துறையும்தான் எப்படித் தரும்? இப்படி நினைத்து கதையை சுமாராக கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓமர் என்ற அரசியல் தலைவர் நிற்கிறார். ஆனால் அவருக்கு தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்லை. நேர்மையானவர்தான், அதனால்தான் அவர் வெல்ல வாய்ப்பில்லை என்று அவருக்கு புரிந்துவிடுகிறது. அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் உளவுத்துறைக்கு சில சமூகவிரோதிகள் அனுப்பி வைக்கின்றனர். உடனே உளவுத்துறை தலைவர் காரிகனை அழைத்து ஓமரைப் பாதுகாக்கும் வேலையைக் கொடுக்கிறார். காரிகனுக்கு இதுபோல ஏப்பை சாப்பையான வேலைகளில் இஷ்டம் கிடையாது. இருந்தாலும் மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது என்பதால் கொட்டாவியை அடக்கியபடி வேலைக்குப் போகிறார்., அங்கு பார்த்தால் ஓமரின் மகள், ஓமரை பாதுகாக்கும் பிரிக்ஸ் என்ற மெய்க்காப்பாளன் ஆகியோர் காரிகனை கண்டபடி பேசி மனத்தை குலைக்க பார்க்கிறார்கள். காரிகன் அங்கு நடைபெறும் கைகலப்பில் பிரிக்ஸை தூக்கி வீசி விடுகிறார். பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட

சிறைக்கைதியை மீட்க அபாய போராட்டம் - வேய்ன் ஷெல்டன் அதிரடி!

படம்
ஒரு போராளி ஒரு ஜென்டில்மேன் வேய்ன் ஷெல்டன் தோன்றும் ஒரு பயணத்தின் கதை! துரோகத்தின் கதை ! லயன் காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் கலாக்ஜிஸ்தானில் நடைபெறும் விபத்து எப்படி முக்கியமான தொழிலதிபரின்(க்வெய்ல்) வணிக ஒப்பந்தத்திற்கு தடையாகிறது. இதற்கு காரணமான ஓட்டுநரை சிறையிலிருந்து மீட்க தொழிலதிபர் நினைக்கிறார். அதற்கு புகழ்பெற்ற ஷெல்டனை அழைக்கிறார்கள். ஷெல்டன் தன் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் செய்யநினைக்கிறார். ஆனால் தொழிலதிபரின் பி.ஏ. (கரினி) ஷெல்டனை ஏமாற்றி டபுள் கிராஸ் ஏஜெண்டாக மாறுகிறார். இதனால் நடக்கும் பிரச்னைகள், வன்முறைகள், துரோகங்களை ஷெல்டன் எப்படி சமாளித்து சிறையிலிருந்து ஓட்டுநரை மீட்கிறார் என்பதுதான் கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை தனி புத்தகமாக போட்டு எழுதலாம். திருடர்களுக்கும் ஷெல்டனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஷெல்டன் குழுவைத் தீர்த்துக்கட்ட நடக்கும் குறுக்கும் மறுக்குமான துரோக சம்பவங்களை கதையை சுவாரசியப்படுத்துகின்றன. கதையில் ஷெல்டன் தன் வயதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டுதான் சண்டையிடுகிறார். இதனால் நேரட

பாழடைந்த மாளிகையில் மர்ம கொலை - ஜில் ஜோர்டான் துப்பறிகிறார்

படம்
பிளேட்பீடியா ஜில் ஜோர்டான் துப்பறியும் அலைகளின் ஆலிங்கனம் லயன் காமிக்ஸ் - நெவர் பிஃபோர் ஸ்பெஷல் ரூ.400 நிகிடா ஜிக்ஸ் என்ற அரிய பொருட்களை சேகரிப்பவர் லாப்ரான் எனும் இடத்திலுள்ள பாழடைந்த கோட்டைக்குச் செல்கிறார். அவருக்கு அங்கு வரச்சொல்லி ஓர் கடிதம் வந்திருக்கிறது. அதைப் பின்பற்றி வந்தவரைக் காணோம். கார் மட்டும் கடல் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த கொலையை விசாரிக்க அவரின் உறவினர் ஹென்றி ஹிக்ஸ் ஜில் ஜோர்டானை நாடுகிறார். அவர் மீதும் ஜோர்டானுக்கு சந்தேகம் இருக்கிறது. இதன் பின்னால் உள்ள மர்மங்களை கண்டறிய ஜில் ஜோர்டான் குழுவினர் அங்கு செல்கின்றனர். இவர்களை விட வேகமாக செயல்படும் கொலையாளி, ஜிக்சை கொன்றுவிட்டு அவரின் சொத்துகளை அடைய முயற்சிக்கிறான். அந்த மறைந்திருக்கும் கொலையாளி யார் என ஜில் ஜோர்டான் யூகம் செய்து செயல்களை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுகிறார். இறுதியில் சுபமான முடிவு என்றாலும், ஜிக்ஸை மீட்க முடிவதில்லை. எப்படி குற்றவாளியைக் கண்டுபிடித்தார் என்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  அரிய பொருட்களுக்கு பதிலாக அந்த இடங்களில் போலியான பொருட்கள் உள்ளன. இதைச் செய்தவர் யா

வீடுகளை எரித்த கான்சாஸ் கொடூரன் - லயன்காமிக்ஸ் என்பிஎஸ் ஸ்பெஷல்!

படம்
பிளேடுபீடியா கேப்டன் டைகரின் கான்சாஸ் கொடூரன் லயன் காமிக்ஸ் - என்பிஎஸ் விலை 400 பதினெட்டாம் நூற்றாண்டுக்கதை. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அப்போது, அரசுப்படையைச் சேர்ந்த கொடூரன் லேன் தலைமையேற்று புரட்சிப்படையை ஒடுக்குகிறார். அதேசமயம் இவருக்கு வில்லனாக பில் குவான்ட்ரில் என்ற மற்றொரு மூர்க்கன் உருவாகிறான். இவர்களை எப்படி கேப்டன் டைகர் சமாளித்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை. ஊரை இம்முறை டைகரால் காப்பாற்ற முடியவில்லை. காரணம் உயிர் தப்பியதே தம்புரான் புண்ணியம் என்ற நிலை. இந்தக் கதையில் டைகருக்கு எந்த ஆக்சனும் இல்லை. பெரும்பாலான நேரங்கள் கைதியாகவே இருக்கிறார். இதனால் கதையில் சுவாரசியம் கெடவில்லை என்பதுதான் முக்கியம். டைகர் லேனை காப்பாற்றினாலும் அவன் தன் நயவஞ்சக புத்தியை கைவிடவில்லை. இறுதியில் டைகரை உயிரோடு எரிக்க பில் குவான்ட்ரில் பிளான் செய்கிறான். அதிலிருந்து டைகர் தப்பினாரா, லேன் அவருக்கு உதவினாரா என்பதுதான் கிளைமேக்ஸ். கதை நடக்கும் இடம் முழுக்க பரபரப்பு உள்ளது. ஆனால் டைகர் எந்த செயல்பாட்டையும் செய்யாமலேயே இதெல்லாம் நடப்பது எ

செவ்விந்தியர்களின் பகை தீர்க்கும் கமான்சே கௌபாய்! - லயன் காமிக்ஸ்

படம்
மாதிரிப்படம் யுத்தம் உண்டு எதிரி இல்லை லயன் காமிக்ஸ் ரூ.60  கமான்சே கௌபாய் கலக்கும் காமிக்ஸ் இது. அமெரிக்காவில் செயன்னீக்கள் வாழும் பகுதியில் கமான்சே என்ற இளம்பெண் தன் பண்ணையை வைத்துள்ளார். அதுவரை நஷ்டத்தில் இருந்த பண்ணைக்கு அப்போதுதான் ரயில்வே இருப்புப்பாதை அமைக்கும் பணியால் வேலைகள் கிடைக்கின்றன. அவர்களின் கால்நடைகளை உணவுக்காக அனுப்பும் பணி. மறுபுறம் வெள்ளையர்கள் ராணுவம் மூலம் செவ்விந்தியர்களை தனியாக பிரித்து வசிக்க பகுதிகளை ஒதுக்கியுள்ளனர்.ஆனால் அது வளமில்லாத பகுதி. பசியில் தள்ளாடும் அம்மக்கள், 66 எனும் இளம்பெண்ணின் பண்ணையில் கொள்ளையிட்டு மாடுகளை கொண்டு செல்கின்றனர். இதை எப்படி ரெட் டஸ்ட் வீரதீரத்தாலும் சமயோசிதத்தாலும் சமாளித்து அப்பகுதியில் ரத்த ஆறு ஓடும் பிரச்னையை சமாளிக்கிறார், இதனை செயன்னீ தலைவர் த்ரீ ஸ்டாப்ஸ் ஏற்றுக்கொண்டாரா, அவரது அடங்காத கோபம் கொண்ட மகன்கள் இதை ஏற்றனரா என்பதுதான் திகுதிகு காமிக்ஸாக வந்திருக்கிறது. ரெட் டஸ்ட் சண்டையை விட புத்திசாலித்தனத்தை நம்புவர் என்பதால், பெரியளவு அதிரடி காட்சிகள் கிடையாது. செவ்விந்தியர்களின் பசி சார்ந்த கோபம் என்பதால

தோர்கல் பயணிக்கும் புதிய உலகம் - சாகாவரம் பெற்ற வில்லிகள்!

படம்
தோர்கல் செத்துப் பிழைக்கும் ஏறத்தாழ சொர்க்கம் சன்ஷைன் கிராபிக் நாவல் லயன் காமிக்ஸ் விலை ரூ. 60 வட துருவத்தில் குதிரையில் பயணிக்கும் தோர்கல் வழிதவறிவிடுகிறார். ஓநாய்க்கூட்டம் தாக்குதல் நடத்த குதிரையுடன் தப்பிக்க முயல்கிறார். அப்போது மலைப்பிளவில் தவறி விழுகிறார். எழுந்து பார்த்தால் இரு பெண்கள் அவர் கண்முன்னே நிற்கிறார்.  அவர் அங்கே பார்க்கும் இடம் பூக்கள் பூத்து அழகாக இருக்கிறது. ஆனால் சுதந்திர உலகாக இல்லை. அங்கே இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். யார், அங்கிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை. இதில் தோர்கல் ஆக்சன் அதிரடி எதுவும் செய்யவில்லை. முழுக்க பெண்களின் ஆட்சிதான். கோமாவில் ஓராண்டுக்கு மேல் இருக்கும் தோர்கல்லுக்கு, எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உதவுகிறாள். இதன்விளைவாக தன் உயிரையை பறிகொடுக்கிறாள். ஆனாலும் அந்த உதவி அப்படித்தால் தோர்கல்லுக்கு கிடைக்கிறது. படங்கள் பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள். குதிரை பள்ளத்திற்குள் விழுந்து இறக்கும் காட்சியை இதற்கு உதாரணமாக காட்டலாம். சாகச பயணமாக காமிக்ஸ் தேவை என்றால் அதற்கு இந்த காமிக்ஸை வாங்கிப் படிக்கலாம்.

மனதில் உறுதி வேண்டும்! - ட்யுராங்கோ அதிரடிக்கிறார்!

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ அதிரடிக்கும் மனதில் உறுதி வேண்டும் - அத்தியாயம் 2 வ்யோமிங் பகுதியில் கொள்ளை கும்பலைப் புரட்டி எடுக்கும் நொண்டி நாயகன் ட்யுராங்கோவின் கதைதான் இது. முதல் அத்தியாயத்தில் துப்பாக்கித் தோட்டாக்களால் காயமுற்றவர், தானாக குதிரையில் ஏறி பயணிக்கிறார். அவரை கிழவர் ஒருவர் மனிதாபிமான முறையில் சிகிச்சை அளித்து உதவுகிறார். ஆனால் அதையும் அருகிலுள்ள ஃபீஸ்புல் சர்ச் ஊரிலுள்ள மக்கள் தவறு என்று கூறி தடுக்கின்றனர். அப்போது அங்கு கல்லஹன் எனும் குழு, வ்யோமிங் வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்து அடைக்கலமாகிறது. அந்தக்குழுவினரிலுள்ள ஸ்காட் என்பவன் பெண்ணிடம் தவறாக நடக்க கொலை செய்யப்படுகிறான். இந்த கொலை காரணமாக கொலைவெறி ஆகும் கல்லஹன் அந்த ஊர்க்காரர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பாதிரியாரை தூக்கிலிட்டு சுட்டுக்கொல்கிறார். அவரின் மற்றொரு கூட்டத்தை ட்யுராங்கோ கொன்று விட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சையளித்த கிழவரைக் கொன்றதுதான் காரணம். இதற்குப்பிறகு அவர் ஃபீஸ்புல் சர்ச் ஊருக்குச் செல்கிறார்.  அந்த ஊர் மக்கள் அவருக்கு உதவினார்களா இல்லையா என்பதுதான

மௌனப் புயல் ட்யுராங்கோ - ரௌத்திரம் பழகு அத்தியாயம் 1

படம்
சத்தமின்றி யுத்தம் செய்! ட்யுராங்கோ கலக்கும் ரௌத்திரம் பழகு! கதையில் நீதி, நேர்மை இத்யாதிகளுக்கு இடமில்லை. ட்யுராங்கோ காசுக்கு கொலைகளை செய்யும் மௌன எமன். பேசுவது குறைவு. ரத்தப்பொத்தல் விழுந்த கையுடன் பத்து பேர்களை போட்டுத்தள்ளும் மனதிடம், உடல்பலம் கொண்டவன். தன் குடும்பத்திடமிருந்து விலகிப்போய் துப்பாக்கியும் தோட்டாக்களுமாக் வாழ்பவனை கடிதம் ஒன்று அமெரிக்காவின் பண்ணைக்கு வரவைக்கிறது. அங்கு வசிக்கும் ஹாரி லாங் என்ற அவரின் சகோதரர், அவனுக்கு பணம் தருவதாக கூறி அங்கு வரச்சொல்லி கடிதம் எழுதி அனுப்புகிறார். ஆனால் ட்யுராங்கோ அங்கு வரும்போது காரியம் மிஞ்சியிருக்கிறது. செனட்டர் ஹ்யூலெட் தன் பண்ணையை விரிவாக்க அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். தனக்கு போட்டியாக கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளுகிறார். லாரியும் அப்படி கூலிப்படையால் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் தோள், வயிறு, கை என பல்வேறு தோட்டாக்கள் துளைக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்கும்போதுதான் ட்யுராங்கோவுக்கு தெரிகிறது. பின் எப்படி எதிரிகளை வீழ்த்தி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை.

சூதாடி டைகரின் சோம்பலான காமிக்ஸ்! - என் பெயர் டைகர்!

படம்
என் பெயர் டைகர் லயன் காமிக்ஸ் ஜீன் கிராட் ரூ.250 1881 ஆம் ஆண்டு நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட டைகர் காமிக்ஸ். இதில் டைகர் பெரும்பாலும் எந்த சண்டைகளிலும் ஈடுபடவில்லை. மொத்த விஷயங்களையும் செய்வது, அபாச்சே ஜெரோனிமா, பிடாரி மா க்ளண்டன், ஸ்ட்ராபீல்டு ஆகிய துணை கதாபாத்திரங்கள்தான். அதிலும் டைகரின் கதை எழுதவரும் கேம்ப்பெல் கூட இருவரைக் கொல்கிறார் என்றால் பாருங்களேன். காமிக்ஸ் படிக்கும்போது, டி.ஆர் படம்போல ஜூனியர் கேரக்டர் எல்லாம் பன்ச் பேசுதே என எண்ணுவீர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என நினைத்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். இதில் பின் யார்தான் நாயகர் என்கிறீர்களா? ஏர்ப் சகோதர ர்கள்தான். டூம்ப்ஸ்டோன் நகர மார்ஷல்களுக்கும், க்ளண்டன் மற்றும் மெக்லெரி குழுக்களுக்கும் நடக்கும் உள்முக, மறைமுக பழிவாங்கல்தான் கதை. இதில் டைகர் தன் காதலியும் பாடகியுமான டோரிக்காக சீட்டுக்கட்டை கடாசிவிட்டு உள்ளே வருகிறார். வில்லன்களை காயம்பட்டாலும் போட்டுத்தள்ளி இறுதியில் சீட்டு விளையாடுகிறார். முக்கியமான பகுதி, கேம்ப்பெல்லுக்கு சொல்லும் தனது வாழ்வு குறித்த பகுதிகள்தான். செவ்வ

கேப்டன் டைகர் அசத்தும் தங்க கல்லறை!

படம்
கேப்டன் டைகர் - ஜிம்மி கலக்கும் தங்க கல்லறை லயன் காமிக்ஸ் காமிக்ஸ் நாயகர்களிலேயே துக்கப்பட்டு துயரப்பட்டு அடிவாங்கி போராடி ஜெயிக்கும் நாயகர்களில் டைகரும் ஒருவர். அரிசோனாவிலுள்ள பெலாமிடா நகருக்கு மார்ஷலாக அனுப்பி வைக்கப்படும் டைகர், அங்கு ஜாலியாக ஜிம்மியுடன் ரம்மி, மூணு சீட்டு விளையாடித் தோற்றுக் கொண்டு இருக்கிறார். அப்போது பாரில் நடக்கும் சண்டையில் அறிமுகமாகிறார் லக்னர். தங்கச்சுரங்கம் இருப்பதாக கூறி ஒருவரை ஏமாற்றியதாக புகார். பார்ச்சண்டைக்குப் பிறகு, அவரை லாக்கப்பில் வைக்கிறார் டைகர். ஆனால் நய வஞ்சகனான லக்னருக்கு ஏகப்பட்ட எதிரிகள். இவர் ஜிம்மிக்கு ஆசைகாட்டி டைகருக்கு துரோகம் செய்யவைத்து தங்கச்சுரங்கம் தேடிச் செல்கின்றனர். அங்கு லக்னரைக் கொல்லவே ஒருவர் காத்திருக்கிறார். அப்போதுதான் டைகருக்கு முக்கியமான உண்மை தெரியவருகிறது. அந்த துரோகத்திலிருந்து தப்பி நீதியை நிலைநாட்டுவது எப்படி என்பதுதான் கதை. சாதாரணமாக ஹீரோவுக்கான பில்டப்புகளை பலரும் எதிர்பார்ப்பாளர்கள். ஆனால் டைகர் கதைகளில் அவரின் பர்சனாலிட்டியை வாரிவிடும் வரிகளும் கேரக்டர்களும்தான் அதிகம். இந்த காமிக்ஸிலு

டெக்ஸ் வில்லர் அதிரடிக்கும் காவல் கழுகு- குற்றத்தின் தடம்

படம்
காவல் கழுகு லயன் காமிக்ஸ் ரூ.35 கதை: பொசெல்லி ஓவியம்: செய்ஜாஸ் டெக்ஸ் வில்லரின் வீரதீர பராக்கிரம கதை. இம்முறை நவஜோ தலைவரான மாண்புக்குரிய நம் தலைவர், செவ்விந்திய சகோதர ர்கள் ஸெல்காடோ, க்லானே என இருவரையும் சேர்த்து வைக்கிறார். இதற்காக பனிரெண்டு பேர்களுக்கு மேல் உயிரிழக்க வேண்டியிருக்கிறது என்பதே கதை. வெள்ளையர் பார்ரெல், அரிசோனாவின் பழங்குடிகளை கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிற அரசு அதிகாரி. ஆனால் நேர்மையில்லாதவர். இவரின் ஊழல்களை அறிகிற க்லானேவைத் தீர்த்துக்கட்ட அவர் பழங்குடிகளுக்கு நீரில் விஷம் கலந்தார். நல்ல மாடுகளை தான் எடுத்துக்கொண்டு நோயுற்ற மாடுகளை அரசு கொட்டிலில சேர்த்தார். இதற்கும் புரட்சிக் குரல் கொடுக்கும் க்லானேவை காரணமாக்கி அவரின் சகோதரர் ஸெல்காடோவைத் தூண்டிவிட அவர் சல்வா ஜூடுமாவாக மாற கிளைமேக்ஸ் என்ன என்பதுதான் கதை. கதை சுபமாக முடிகிறதுதான் என்றபோதும் ஆக்சனுக்குப் பஞ்சமில்லை. கிரே வோல்ஃப், பில்லி ஜோ, சூக் ஆகியோரின் பேச்சுகளும் டயலாக்குகளும் பிரமாதம். கோமாளிமேடை டீம் நன்றி: ஓவியர் பாலமுருகன்