இடுகைகள்

ஏசிஎல்யூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குடியுரிமை அமைப்புகளுக்கும் நன்கொடை வழங்குவது அவசியம்!

படம்
  ஏசிஎல்யூ - அமெரிக்க குடியுரிமை சங்கம் அமெரிக்கன் சிவில் லிபர்டிஸ் யூனியன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா? இந்த அமைப்பு அமெரிக்காவில் இப்போதைக்கு முக்கியமான செயல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறது. அங்கு பெண்கள் கருக்கலைப்பை சுதந்திரமாக செய்துகொள்ளும் முறையை ஒழித்துக்கட்ட சில மாகாணங்கள் முயல்கின்றன. இந்த பிற்போக்குத்தனத்திற்கு எதிராக பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஏசிஎல்யூ போராடி வருகிறது. இத்தனைக்கும் இந்த அமைப்பு மக்களிடம் நன்கொடை பெற்றுத்தான் நூறு ஆண்டுகளாக உரிமைகளைக் காப்பாற்ற போராடி வருகிறது. இப்படி அரசின் சட்டத்திற்கு எதிராக போராடுவதால் அமலாக்கத்துறை தன்னார்வ குடியுரிமை அமைப்பின் அலுவலங்களில் சோதனையெல்லாம் நடத்துவதில்லை. வெளிநாட்டு பணத்தை பெறுகிறார்கள் என்று சொல்லி கேலி, அவதூறு செய்வதில்லை. நிறுவனர்களை, உறுப்பினர்களை, தன்னார்வலர்களை காவல்துறை மூலம் மிரட்டுவதில்லை. முக்கியமான பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைப்பதில்லை. வெளிநாட்டு மக்களைப் போலவே இந்தியாவில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பணம் ஆன்மிக அமைப்புகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் செல்கிறது. எல்லா