இடுகைகள்

ஸ்டார்ச் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது? தெற்கு அமெரிக்காவில் முதல் பயிராக விளைவிக்கப்பட்டு ஏழாயிரம் ஆண்டுகளாகிறது. உருளைக்கிழங்கு பல்வேறு பட்டினி, பஞ்ச காலங்களில் முக்கியமான உணவுப்பொருளாக இருந்திருக்கிறது. அப்படி இல்லாத காலங்களில் தீனிப் பொருளாக சிப்ஸ், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்ற பெயரில் பரிமாறப்பட்டுள்ளது. இன்றும் சமோசாவில் உருளைக்கிழங்கை விட்டால் கதி மோட்சமில்லை. பெருமளவு விலை ஏறாத காய்கறி இது ஒன்றுதான். அதனால்தான் எப்போதும் ஓட்டல் சாம்பாரில் இதனை மிதக்க விடுகின்றனர். உருளைக்கிழங்கு புகழ்பெற்றதற்கு காரணம் அதிலுள்ள ஸ்டார்ச்தான். இதில் விட்டமின் சி, பி6, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. நார்ச்சத்து அதிகம். வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும். பொரித்தால் கொழுப்பு ஏறிவிடும். உருளைக்கிழங்கிலும் பின்னர் நமது உடலிலும்தான். கேக், ஐஸ்க்ரீம், சாலட், பிஸ்கெட் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு நிலைய வித்வான் போல எப்போதும் இருக்கும். காரணம் அனைத்து காய்கறிகளை விட காசு குறைவு. மாவுச்சத்து அதிகம். 1995ஆம்ஆண்டு விண்வெளியிலும் உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட

நாய், பூனையை வீகனுக்கு பழக்கலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி நாய்களை வீகன் டயட்டிற்கு பழக்க முடியுமா? தியரியாக சூப்பர்தானே என நினைக்கலாம். ஆனால் நடைமுறையில் சால கஷ்டம் சாரே.. நாய்கள் மனிதனுடன் பழகி அதன் உடலில் தாவர ஸ்டார்ச்சுகளை செரிமானம் செய்யும் என்சைம்கள் உருவாகி உள்ளன. பதினான்காயிரம் ஆண்டு நட்புறவின் விளைவு இது. சைவ உணவுகளை நாய்களுக்கு பழக்குவது கருத்தியல் சார்ந்தல்ல உடல் இயக்கம் சார்ந்த நாய்களுக்கு ஆபத்து தரும். 2015 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி செய்த ஆய்வில் நாய்களுக்கு வழங்கப்பட்ட சைவ உணவுகளில் அமினோ அமிலங்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிலும் நாய்களுக்கு டயட் விதிமுறைகளை விதிப்பது அதிலும் பெருஞ்சோகம்.  `1998 ஆம் ஆண் இப்படி வீட்டில் நாய்களுக்கு சைவ உணவுகளைப் பழக்கியதால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. பூனைகள் சைவ உணவுக்கு ஏற்றவை அல்ல. அதன் உடலில் டாரின் எனும் அமிலம் தேவை. இது இறைச்சியில் மட்டுமே இன்றுவரை கிடைக்கிறது. இது உடலில் குறைந்தால் இதயச்செயலிழப்பு, பார்வை இழப்பு ஏற்படும். எனவே பூனையை சுத்த சைவாக்கும்போது கவனமா